யாருடைய கார் என தெரியாமல் மோதிய பைக்... கீழே இறங்கி வந்தவரை பார்த்து வாயை பிளந்த பொதுமக்கள்...

இரு சக்கர வாகனம் மோதியதால், காருக்கு உள்ளே இருந்து இறங்கி வந்தவரை பார்த்து, பொதுமக்கள் பிரம்மித்து போய் விட்டனர்.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலும், கவனக்குறைவாக நடந்து கொள்வதாலும், இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு விபத்துக்கள் உயிரிழப்பையும், படுகாயங்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே வாகனம் ஓட்டும்போது, அலட்சியம் காட்டக்கூடாது. சிறு அலட்சியம் கூட பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும்.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

இந்த சூழலில் சிறு அலட்சியம் காரணமாக தற்போது சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் மீது, இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. அப்போது காருக்கு உள்ளே இருந்து இறங்கி வந்த பிரபல நபரை பார்த்து, அங்கு இருந்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்தான் (Ranveer Singh) அந்த பிரபல மனிதர். இந்த விபத்து மும்பையில் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றுள்ளது. ரன்வீர் சிங் தனது மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரில் நேற்று வெளியே வந்திருந்தார். பளபளப்பாக இருந்த அந்த காரின் மீது, இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விட்டது.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது சிறிய விபத்துதான். எனினும் காரில் கீறல் விழுந்து விட்டதாக தெரிகிறது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில், நடிகர்கள் போன்ற பிரபலங்கள் காரில் இருந்து கீழே இறங்கி வருவார்களா? என்பது சந்தேகம்தான்.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

அதுவும் ரன்வீர் சிங் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இருந்தாலும் என்ன சேதம் ஏற்பட்டுள்ளது? என்பதை பார்வையிடுவதற்காக, ரன்வீர் சிங் காரில் இருந்து கீழே இறங்கி வந்தார். சேதங்களை பார்வையிட்டவுடன் அவர் அமைதியாக மீண்டும் காருக்கே சென்று விட்டார். பொதுவாக பாலிவுட் திரையுலகில் ரன்வீர் சிங்கை 'மிஸ்டர் கூல்' என அழைப்பது வழக்கம்.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

அதனை மீண்டும் ஒரு முறை ரன்வீர் சிங் நிரூபித்து காட்டியுள்ளதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். ஏனெனில் அவர் கோவப்படாமல் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டார். ஆனால் இந்திய சாலைகளில் இதுபோன்ற சிறு சிறு விபத்துக்கள் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதை நம்மால் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

சொகுசு காரின் மீது மோதிய பைக்... கீழே இறங்கி வந்த நடிகரை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்

சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி, கை கலப்பிலும் சென்று முடிந்து விடுகிறது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் சாலையில் அடிக்கடி கண் கூடாக பார்த்திருக்க கூடும். ஆனால் ரன்வீர் சிங் துளி கூட பொறுமையை இழக்காமல், சேதத்தை மட்டும் பார்த்து விட்டு அமைதியாக மீண்டும் காருக்கே திரும்பி சென்று விட்டார். சமூக வலை தளங்களில் இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்த விபத்து எப்படி நடந்தது? யார் மீது தவறு? என்பது போன்ற விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. எது எப்படியோ காருக்குள் இருந்து பிரபல நடிகர் இறங்கி வந்ததால், அங்கிருந்தவர்கள் உற்சாகமாகி விட்டனர். அவர்களில் ஒரு சிலர் ரன்வீர் சிங்கை, தங்கள் கைப்பேசியில் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch: Actor Ranveer Singh Accesses Damage Done To His Mercedes After Two Wheeler Brushes Against It. Read in Tamil
Story first published: Friday, October 16, 2020, 21:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X