30 உயிர்களை பலிகேட்க வந்த எமனுக்கு கல்தா கொடுத்து உயிர்களை காத்து நின்ற ’சீட் பெல்டு’ ..!!

30 உயிர்களை பலிகேட்க வந்த எமனுக்கு கல்தா கொடுத்து உயிர்களை காத்து நின்ற ’சீட் பெல்டு’ ..!!

By Azhagar

சாலை பேருந்து விபத்து ஒன்றில் 30 பேர் உயிரழப்புகள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி தப்பித்த காரணத்தை பிரபல செய்தி சேனல் ஒன்று வீடியோ ஆதாரங்களுடன் தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

இம்மாதம் முதல் வாரத்தில் சீனாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்று, அங்குள்ள அனைத்து ஊடகங்கள் மத்தியிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

சீனாவில்ச்ஷோஜோன் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று,பெரும் சாலை விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த 30 பேரில் ஒருவருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டு, மற்ற அனைவரும் பத்திரமாக் உயிர்பிழைத்தனர்.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

பெரும் விபத்து ஒன்றில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது எப்படி எனஅங்குள்ள ஊடகங்கள் மத்தியில் பரபரப்பான பேசுபொருளானது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

இதற்கான காரணத்தை பல்வேறு ஊடகங்கள் தேடிக்கொண்டிருக்க, பிரபல ரஷ்யா டுடே செய்தி சேனல், சீனாவின்ச்ஷோஜோன் நகரில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து, அதில் கிடைக்கப்பெற்ற பேருந்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அதில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் பேருந்தின் வழியின் எதிரே கார் ஒன்று குறுக்கிடுகிறது. தீடீரென வரும் காரால் பதற்றம் அடையும் ஓட்டுநர் பேருந்தை வலது பக்கமாக திருப்ப முயல்கிறார்.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அப்போது கார் வேறு திசையில் பத்திரமாக சென்றாலும், பேருந்தில் இருக்கும் முப்பது பயணிகளும் நிலைகுழைந்து போகின்றனர். குறிப்பாக திடீர் திருப்பத்தால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் அசைவால் பயணிகள் பேருந்திற்குள் தூக்கிவீசப்படும் நிலைக்கு செல்கின்றனர்.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

இதை அப்பட்டமாக நிரூபிக்கும் சிசிடிவி காட்சியில், பேருந்தில் பயணித்த 30 பேரில், ஒருவரை தவிர மற்ற அனைவரும் ’சீட் பெல்டு’ அணிந்திருப்பது தெரியவருகிறது.

சீட் பெல்டு அணியாத நபர், பேருந்தில் ஏற்படும் இந்த திருப்பத்தால், இருக்கையில் இருந்து தூக்கிவீசப்பட்டு, அவருக்கு சில காயங்கள் ஏற்படும் சூழல் உருவாகிறது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

ஓட்டுநரின் சாதுர்யத்தாலும், பயணிகள் தங்களின் பாதுகாப்பின் மீது வைத்திருக்கும் நடவடிக்கைகளாலும் ஒரு பெரும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட்டு இருக்கிறது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

பரபரப்பான சாலை ஒன்றில் நடைபெற்ற இந்த அமளி துமளி பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ச்ஷோஜோன் நகர போலீசார், விசாரணை நடத்திய பின்னர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

உலகளவில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று தான். அதை தினமும் நாம் செய்திகள் வாயிலாக கடந்து வருகிறோம். சில விபத்துகள் மனதிற்கு சங்கடங்களை தரும், சிலது நம்மை உலுக்கி எடுக்கும்.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அப்படிப்பட்ட விபத்துகளின் பட்டியலில் இதுவும் ஒன்று என சொல்லக்கூடிய ஒரு சம்பவத்தை பற்றி ரஷ்யா டுடே போன்ற சர்வதேச தொலைக்காட்சி செய்தியாக வெளியிட பெரிய காரணம் உண்டு.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அந்த காரணம் 'சீட் பெல்டு'. கார், பைக்குகள் என உலகளவில் வாகனங்கள் பெருமளவில் பெருகி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

விபத்தின் எண்ணிக்கைகளை உணர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும், தயாரிப்புகளில் பல பாதுகாப்பு வழிமுறைகளை கட்டமைக்கின்றன. இருந்தாலும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் குறைந்தபாடிலில்லை.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அதற்கு காரணம் வாகன ஓட்டிகள் மத்தியில் சாலையில் செல்லும் போது இருக்கும் அலட்சியமே காரணம். அந்த அலட்சியப்போக்கு தான் அதிகளவில் சாலை விபத்துகளுக்கு காரண காரணியாக அமைந்துவிடுகின்றன.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

அதை போக்கவே சீனாவின் இந்த பேருந்து விபத்து பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சீட் பெல்டு அணிய வேண்டியதின் அவசியத்தை உணர்த்துவது போலவும் ரஷ்யா டுடே செய்தியாக வெளியிட்டுள்ளது.

பேருந்து விபத்தில் 30 உயிர்களை காப்பாற்றிய சீட் பெல்டு...!!

கார், பேருந்து என எந்த ரக வாகனங்களாக இருந்தாலும், சொகுசு, வசதி போன்றவற்றை விட வாகனங்களை இயக்குபவர் மற்றும் அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம்.

அதை வலியுறுத்தவே டிரைவ்ஸ்பார்க் செய்தியாளர்கள் நாங்கள், வாசகர்களுக்காக இந்த சம்பவத்தை பற்றி வீடியோ மற்றும் முழு கட்டுரை உடன் தொகுத்து வெளியிட்டு இருக்கிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Watch Bus Overturns After Collision With Car in China Seat Belts Saved Lives. Click for Details...
Story first published: Friday, October 13, 2017, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X