3500 கிலோ வேனை அசால்டாக பேப்பர் போல அடித்து சென்ற வெள்ளம்!
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சுமார் 3500 கிலோ எடை கொண்ட வேன் ஒன்று அசால்டாக தண்ணீரில் அடித்து சென்றது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து பதை பதை வைத்து வருகிறார்கள். இந்த வேன் உள்ளே ஆள் இருக்கிறார்களா? வேன் எப்படி சிக்கியது? இதை ஒட்டிய டிரைவரின் நிலை என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று கடுமையான மழை பொழிவு இருந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த பகுதியில் முல்லை பெரியாறு மற்றும் கல்லார் அணைகள் உள்ளன. இந்த அணைகளின் நீர்வரத்து அதிகமானதால் அணையின் பாதுகாப்புகருதி மதகுகள் திறந்து விடப்பட்டன. இந்நிலையில் கல்லார் அணையின் மதகுகள்திறக்கப்பட்டு சுமார் 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் நீர் அதிகமானது. நீர் வழி பாதைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நெடுஞ்கண்டம் பகுதியையில் உளு்ள கோட்டார் பகுதியில் அதிக சாய்வு பகுதி என்பதால் அங்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நீர் செல்லும் பாதையில் இருந்த சுமுார் 1 கி.மீ வரை வெள்ள நீர் சூழ்ந்ததாக கூறப்படுகிறனால் அப்பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் கிளையிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல ப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படியாக ஒரு டிராவலர் வாகனம் வெள்ள நீரில் அடித்து செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில் பலர் இந்த வீடியோவை பார்த்து பதற்றம் அடைந்தார்கள். இந்த வேன் டிரைவர் ஏன் தண்ணீர் வரும் பாதையில் வேனை எடுத்து சென்றார் என கேள்வி எழுப்பினர். சிலர் வேனிற்குள் யாரேனும் உள்ளனரா? உயிருக்கு ஏதனும் ஆபத்து வந்துள்ளதா என கேள்வி எழுப்பினர்.

ஆனால் இது எந்த டிரைவரும் ஓட்டி சென்ற வாகனம் இல்லை பார்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் இதில் எந்த உயிரிழப்பும் நடக்கவில்லை. யாருக்கும் சேதம் இல்லை. ஆனால் வாகனம் முழுமையாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அப்பகுதியில் இதை விட அதி வெள்ளபெருக்கு எல்லாம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை அதைவிட குறைவு தான் என்றாலும் இந்த முறை ஒரு பெரிய வேன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அப்பகுதில் உள்ளவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது ஃபோர்ஸ் நிறுவனத்தின் டிராவலர் வாகனம் ஆகும். இந்த வாகனம் சுமார் 3500 கிலோ எடை கொண்டது. இந்த வாகனத்தையே வெள்ளம் அடித்து செல்கிறது என்றால் அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்று நம்மை பதை பதைக்க வைக்கிறது. ஆனால் இந்த வீடியோவில் பலர் ஆபத்தை உணராமல் வேன் அடுத்து செல்லப்படும் போது அருகிலேயே நின்று பார்க்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது தீவிரமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தருணத்தில் நாம் பத்திரமாக வாகனங்களை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் நாம் தீவிர கவனமாக இருக்க வேண்டும். விபத்துக்களையும் உயிரிழிப்புகளை தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









