கொச்சி ரோட்டில் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் வலம் வந்த நடிகர் மம்முட்டி!
நடிகர் மம்முட்டி தனது பிஎம்டபிள்யூ பைக்கில் கொச்சி ரோட்டில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் மம்முட்டி தனது பிஎம்டபிள்யூ பைக்கில் கொச்சி ரோட்டில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மும்முட்டி நடிக்கும் குட்டனாடன் பிளாக் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் கொச்சி ஆகிய பகுதிகளில் நடந்தது.

படப்பிடிப்பின் ஒரு பாகமாக நடிகர் மம்முட்டி பைக்கில் வருது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் அவரது அவருக்கு சொந்தமான பி.எம்.டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் என்ற பைக்கை ஓட்டி வந்தார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
அவர் பைக் ஒட்டி வரும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் மம்முட்டியும் அவரது மகனான துல்கர் சல்மானும் கார், பைக் மீது அலாதிபிரியம் கொண்டவர்கள். இவர்களில் காரஜில் ஏராளமான கார் பைக் கலெக்ஷன்கள் உள்ளன.

சமூகவலைதளங்களில் பரவிய காட்சியில் மம்முட்டி ஓட்டி வரும் பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ் என்ற பைக் அந்நிறுவனத்தின் லிமிட்ட் எடிசனாக வெளியிடப்பட்டது.

4 வால்வு ஜிஎஸ் பாக்ஸர் டிவின் ரக இன்ஜின் தயாரித்து 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இ்நத பைக் தயாரிக்கப்பட்டது.

இந்த பைக் 1170 சிசி இரண்டு சிலிண்டர் ஹரிசான்டல் அப்போஸ்டு பாக்ஸர், 4வால்வு சிலிண்டர் இன்ஜின் கொண்டது. இது 125 எச்பி பவரை வெளிபடுத்தும்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த பைக் அப்பொழுது இந்திய மதிப்பில் ரூ 10.62 லட்ச ரூபாக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கேரள நடிகர்கள் சூப்பர் பைக்கை ஓட்டும் காட்சி வெளியாகியிருப்பது இதுதான் முதன் முறை. இச்சம்பவத்தின் போது கேரள நடிகர் சஞ்சூ சிவராம் நடிகர் மம்முட்டியுடன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் வெளியட்டாா். இதில் மம்முட்டி ஹெல்மெட் அணிந்து வித்தியாசமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.அந்த காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
நடிகர் கார்,பைக் வாங்குவதில் மட்டும் அல்ல அவர் வைத்திருக்கும் கார் பைக்குகளுக்கு 369 என்ற நம்பரையும் தேடி பிடித்து வாங்குவார். அவரது கார்கள் அனைத்தும் 369 என்ற எண்களுடனேயே இருக்கும். அவரது கார் கலெக்ஷன்களை கீழே காணலாம்

ஜாக்குவார் எக்ஸ் ஜே
நடிகர் மம்முட்டி ஜாக்குவார் எக்ஸ் ஜே கார் வைத்திருக்கிறாகர். இந்த காரின் விலை ரூ 94.81 லட்சத்தில் ரூ2.08 கோடி வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரின் நம்பரும் 369 தான்.

டொயோட்டோ லாண்ட் க்ரூஸர்
டொயோட்டோ நிறுவனத்தின் உயர்ரக எஸ்யூவி கார் இது. இது 4.5 லிட்டர் டர்போ டீசல் வி8 இன்ஜின் கொண்டது. இது 262 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் 1.19 கோடி ரூபாய். இந்த காரும் 369 என்ற எண் கொண்டது.

ஆடி ஏ7
இது ஆடி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் லுக்கை கொண்ட சொகுசு கார். இது வி6 டார்போ டீசல் இன்ஜின் கொண்டது. இது 241 பிஎச்பி பவரும் 500 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்தியாவில் இந்த காரின் விலை சுமார் ரூ 85.88 லட்சம்.

டொயாட்டோ பார்ட்சூனர்
டொயாட்டோ நிறுவனத்தின் மற்றொரு எஸ்யூவி கார்.இது இந்த ரக கார்களில் அதிகமாக விற்பனையாகி வரும் கார் இது. இது 2.5லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்கள் உள்ளன. இது 170 பிஎச்பி பவரையும் 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமர் 24.71 லட்சம்.

மிட்சுபிஸி பஜேரோ
பார்ட்சூனர் காருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட கார் இது. 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார் 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொண்டது. இது 175 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் ரூ 25.28 லட்சம்.

மினி கூப்பர்
இது ஹேட்ச்பேக் ரக ஸ்போர்ட்டியர் கார் இது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இது 484 பிஎச்பி பவரையும் 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதை மம்முட்டியும், அவரது மகன் துல்கர் சல்மானும் பயன்படுத்தி வருகின்றனர்.

இ46 பிஎம்டபிள்யூ எம்3
மும்முட்டியிடம் இருக்கும் ஸ்போர்ட்டியர் டைப் காரில் இதுவும் ஒன்று . இது 3.2 லிட்டர் ஸ்டிரைட் சிக்ஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இது 338 பிஎச்பி பவர் 365 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.
Picture credit: Mammootty 369 car collection
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications