1,000 பிஎச்பி ரேஸ் காரை ஓட்டிய ஜக்கி வாசுதேவ்... இது என்ன பிரமாதம், செய்தியை படித்து பாருங்கள்!

மிக சக்திவாய்ந்த ரேஸ் கார் ஒன்றை யோக கலை வல்லுனர் ஜக்கி வாசுதேவ் ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

By Saravana Rajan

யோகா குருவாகவும், சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளருமாக வலம் வரும் ஜக்கி வாசுதேவ் சக்திவாய்ந்த டொயோட்டா ரேஸ் கார் ஒன்றை ஓட்டியதுடன், அந்த வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை போதித்தார் புத்தர். இந்த நவீன யுகத்தில் இதற்கு நேர் மாறான அனைத்திற்கும் ஆசைப்படு என்ற கொள்கையை போதித்து வருகிறார் ஜக்கி வாசுதேவ். அதன்படியே, யோகா மட்டுமின்றி, டிரைவிங் கலைகளையும் கற்று தேர்ந்துள்ளார் ஜக்கி வாசுதேவ். யாரும் அறிந்திராத அவரது மறுபக்ககத்தை தொடர்ந்து காணலாம்.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

பந்தயத்திற்கு பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு சிறப்பு ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட டொயோட்டா சியோன் கார் ஒன்றை அவர் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்த்திருக்கிறார். அவர் ஓட்டிய டொயோட்டா சியோன் காரில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 1,000 பிஎச்பி பவரை வழங்கும் திறன் வாய்ந்தது.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

இந்த டொயோட்டா சியோன் கார் மணிக்கு 338 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை பொருந்தியது. இதுபோன்ற கார்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக பயிற்சிகள் தேவைப்படும். ஆனால், ஜக்கி வாசுதேவ் கார் ஓட்டுவதில் வல்லவர்.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

அமெரிக்காவை சேர்ந்த கார் பந்தய வீரர் கிறிஸ்டியன் ராடோவின் துணையுடன் டொாயோட்டா சியோன் காரை அவர் ஓட்டி பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

இது அவரது ஆதரவாளர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, பலரும் வாழ்த்து தெரிவித்து கமென்ட் செய்துள்ளனர். ஜக்கி வாசுதேவ் இந்த கார் ஓட்டியது என்ன பிரமாதம் என்பது போல் இருக்கும் அடுத்து வரும் செய்திகள்.

 ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஆம், கைலாச யாத்திரை செல்லும்போது ஆபத்தான இமயமலை சாலைகளில் ஜக்கி வாசுதேவ் காரை ஓட்டிச் செல்வது வழக்கமாக வைத்துள்ளார். பல சமயங்களில் சொந்தமாக ஓட்டுவதுதான் அவருக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் உள்ளது.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஜக்கி வாசுதேவ் கார் பிரியர் என்பதற்கு மற்றொரு சிறிய உதாரணம். அவரிடம் ஹம்மர் எஸ்யூவி உள்ளது. இளம் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மட்டுமே விரும்பி வாங்கும் நிலையில், ஜக்கி வாசுதேவும் ஹம்மர் எஸ்யூவியை பயன்படுத்தி வருகிறார். இந்த பிரம்மாண்ட காரையே அதிகம் பயன்படுத்துகிறார்.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஜக்கி வாசுதேவ் கார் ஓட்டும் கலையில் மட்டும் சிறப்பானவர் என்பதுடன் முடிவுக்கு வர வேண்டாம். ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சியையும் முறையாக பயின்றவர். ஆர்-44 என்ற ஹெலிகாப்டர் மாடலை வாடகைக்கு எடுத்து, தனி பயிற்றுனரை நியமித்து ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சியையும் பெற்றவர்.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள தனது பல ஆசிரமங்கள் மற்றும் ஈஷா யோகா மையங்களுக்கு ஆதரவாளர்களை சந்திக்கச் செல்லும்போது சொந்தமாக ஹெலிகாப்டரை பயன்படுத்துவதற்காகவே இந்த பயிற்சியை எடுத்துள்ளார். இதற்காக, அமெரிக்காவிலேயே பயிற்சி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஹெலிகாப்டர் பயிற்சி முடித்து திரும்பிய ஜக்கி வாசுதேவை அவரது ஆதரவாளர்கள் கீழே நின்று ஆரவாரம் செய்து வரவேற்பது போன்ற வீடியோவும் இருக்கிறது. மேலும், தனக்காக காத்திருக்கும் ஆதரவாளர்களை சந்திக்க வரும் ஜக்கி வாசுதேவ் ஹம்மர் காரில் வந்து இறங்கியவுடன், ஓர் ஆட்டம் போட்டு ஆதரவாளர்களை அசத்துகிறார்.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

இதுவரை பார்த்தது அவருக்கு பெரும் பணம் வந்ததும் இவ்வாறு வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகிறார் என்று எண்ணி விட வேண்டாம். தனது சிறுவயதில் மைசூரில் இருந்தபோது, நண்பர்களுடன் சாமுண்டி மலைக்கு மோட்டார்சைக்கிளில் செல்வதுதான் அவரது பொழுதுபோக்கு.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

அதுமட்டுமல்ல, மோட்டார்சைக்கிளில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒருமுறை நேபாளத்திற்கு பைக்கிலேயே சென்றபோது அங்கு பாஸ்போர்ட் இல்லாததால் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, உலகின் எல்லா நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு எழுந்துள்ளது.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

இந்த சூழலில் மைசூரில் உள்ள வீட்டில் இருந்து வழக்கம்போல் ஒரு மாலை நேரத்தில் அவர் சாமுண்டி மலைக்கு சென்று ஒரு பாறை மீது அமர்ந்திருக்கிறார். அப்போதுதான், ஆன்மிக குறித்த ஆழமான சிந்தனை எழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரேஸ் காரை ஓட்டி அசத்திய ஜக்கி வாசுதேவ்.. இது என்ன பிரமாதம்?

ஜக்கி வாசுதேவ் வாழ்க்கையில் பைக்குகள் என்பது ஆரம்ப காலத்தில் யோகா போன்றே இணை பிரியாத நண்பராக இருந்திருக்கிறது. அதுதான் இன்று அவரை வாகன உலகத்தின் மீது இந்தளவு ஈடுபாடு கொண்டதாக மாற்றி இருக்கிறது. எல்லோருக்கும் மன நிம்மதிக்காக ஜக்கி வாசுதேவிடம் செல்கின்றனர். ஆனால், அவருக்கு நிம்மதி பெற வாகனத்தில் பயணிப்பது, வாகனங்களை ஓட்டுவதுதான் நிம்மதி தரும் விஷயம் என்றால் மிகையில்லை.

இந்த செய்தியின் ஸ்பெஷல் இணைப்பாக 1,000 பிஎச்பி டொயோட்டா சியோன் காரை ஜக்கி வாசுதேவ் ஓட்டிய வீடியோவை இங்கே காணலாம்.

Picture Credit: Facebook And Youtube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sadguru Jaggi Vasudev has posted a video on Facebook. He can be seen driving a 1,000bhp Toyota Scion around a race track. Read more.
Story first published: Friday, April 28, 2017, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X