றெக்கையே இல்லாமல் நடுரோட்டில் செல்லும் விமானம்... ஆச்சரியமாக வேடிக்கை பார்த்த மக்கள்!

திருவனந்தபுரத்திலிருந்து ஐதராபாத்திற்குச் சாலை வழியாக லாரியில் விமானம் ஒன்று எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த விமானத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது, இது குறித்து இங்கே காணலாம்.

நம் சாலைகளில் அவ்வப்போது மிகப்பெரிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதைப் பார்த்திருப்போம். சமீபத்தில் கூட குஜராத் மாநிலத்திலிருந்து, ராஜஸ்தானில் உள்ள மின் உற்பத்தி ஆலைக்குப் பெரிய பாய்லெரை எடுத்துச் சென்ற வீடியோ வைரலானது.

றெக்கையே இல்லாமல் நடுரோட்டில் செல்லும் விமானம்... ஆச்சரியமாக வேடிக்கை பார்த்த மக்கள்!

பொதுவாக விமானம் அல்லது ரயில்களில் கொண்டு செல்லமுடியாத அளவிற்குப் பெரிய பொருளாகவோ அல்லது அதிக எடை கொண்ட பொருளாகவோ இருந்தால் அதைக் கப்பல் மூலம் எடுத்துச் செல்வார்கள். ஆனால் துறைமுக வசதி இல்லாத ஒரு ஊருக்கு இப்படியான பொருளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சாலை வழியாகக் கனரக வாகனங்களைக் கொண்டு இந்த பொருளை எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சாலையில் இப்படியான பெரிய பொருளைக் கொண்டு செல்வது என்பது சாதாரண காரியம் அல்ல. சாலையில் இந்த வாகனம் மற்ற வாகனங்களைப் போலப் பயணித்து விட முடியாது. இந்த வாகனம் மட்டுமல்லாது இந்த வாகனம் பயணிக்க மற்ற வாகனங்களில் 10-20 ஊழியர்கள் பணியாற்றினால் தான் இந்த வாகனத்தை இயக்க முடியும்.

உதாரணமாகச் செல்லும் வழிகளில் உள்ள பாதைகள், டிராஃபிக் உள்ளிட்ட பலவிஷயங்களை தனித்தனி குழுவாகப் பார்த்துப் பார்த்து டீம் ஒர்க்காக சேர்ந்து தான் இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். இப்படியாக தற்போது திருவனந்தபுரத்திலிருந்து ஒரு கனரக வாகனத்தில் ஒரு விமானத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தற்போது ஐதிரபாத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தான் இது. இந்த விமானம் தற்போது தன் சர்வீஸை முடித்துவிட்டது. ஏர் இந்தியா நிறுவனம் இந்த விமானத்தை ஏலத்திற்கு விட்ட நிலையில் ஐதிரபாத்தை சேர்ந்த ஒரு ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் இந்த விமானத்தை ஏலத்தில் எடுத்தார். அவர் இதைக் கொண்டு விமான தீமில் ஒரு ரெஸ்டாரெண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அதை தற்போது ஐதராபாத்திற்கு எடுத்துச் செல்ல கனரக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானத்தின் றெக்கை மற்றும் மூக்கு பகுதிகள் எல்லாம் தனித்தனியாகக் கழட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த விமானம் கனரக வாகனத்தில் பல விஷயத்தைக் கடந்து மெதுவாகவே எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த விமானம் கொல்லம் பகுதிக்கு வந்த போது அங்கு ஒரு பாலத்தைக் கடப்பதற்காகப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் இந்த விமானத்தைப் பார்க்க அப்பகுதிகளில் உள்ள மக்கள் ஏராளமானோர் கூடினர். விமானம் உயரமாகப் பறந்தாலே எல்லோரும் அண்ணாந்து பார்ப்போம், ரோட்டில் செல்கிறது என்றால் அருகில் பார்க்க ஆர்வம் இருக்காதா என்ன?

இந்த விமானத்தை எடுத்துச் செல்லும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் இது ஐதராபாத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விமான நிலையத்தில் இந்த விமானம் பத்திரமாக டிஸ்மெண்டில் செய்யப்பட்டு பின்னர் அதன்படி பகுதி மட்டும் பத்திரமாக லாரியில் ஏற்றப்பட்டு பயணத்தின் போது எந்த விதமான சேதாரமும் ஏற்படாத வகையிலும், விமானம் கீழே விழாத வகையிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படியா பெரிய பொருட்களை லாரிகளில் எடுத்துச் செல்ல இந்தியாவில் பல திறமையான லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இருக்கிறது. இது போக விமானத்தை லாரியில் எடுத்துச் செல்வது இது முதன் முறை அல்ல இதற்கு முன்பும் இது போலப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்தாண்டு இப்படியாக லாரியின் விமானத்தை எடுத்துச் செல்லும் போது அந்த விமானம் பாலத்திற்கு அடியில் சிக்கிய சம்பவம் கூட நடந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 9, 2022, 13:40 [IST]
English summary
Watch video of airplane Trivandrum to Hyderabad in truck
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+