சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

இந்திய மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் விராட் கோஹ்லி, பெங்களூரு நகர சாலைகளில் ஆடி ஆர்எஸ்5 காரை ஓட்டி சென்றுள்ளார்.

By Arun

இந்திய மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் விராட் கோஹ்லி, பெங்களூரு நகர சாலைகளில் ஆடி ஆர்எஸ்5 காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுபற்றிய செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

கோஹ்லி ரசிகரா நீங்கள்?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் கேப்டன் விராட் கோஹ்லியின் ரசிகரா நீங்கள்? அப்படியானால் விராட் கோஹ்லி ஆடி ஆர்எஸ்5 காரை கடந்த மாதம் வாங்கினார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில், ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரே விராட் கோஹ்லிதான்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

முதல் நபர்...!

இந்தியாவை பொறுத்தவரை ஆடி ஆர்எஸ்5 காரின் முதல் உரிமையாளர் என்றால், அது விராட் கோஹ்லிதான். இந்த காரை இந்தியாவிலேயே முதல் நபராக விராட் கோஹ்லிதான் வாங்கியிருக்கிறார். இதன் விலை 1.10 கோடி ரூபாய்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ஜாலியாக கார் ஓட்டினார்...!

இதனிடையே பெங்களூரு நகர சாலைகளில், ஆடி ஆர்எஸ்5 காரை விராட் கோஹ்லி ஓட்டிச்செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆடி இந்தியா நிறுவனமே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ரஹில் அன்சாரியும் விராட் கோஹ்லியுடன் அந்த காரில் பயணிக்கிறார்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ஜிம்முக்கு கூட ஓட்டிச்செல்லலாம்...!

விராட் கோஹ்லியும், ரஹில் அன்சாரியும் ஆடி ஆர்எஸ்5 காரில் ஏறுவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. பின்னர் விராட் கோஹ்லி அந்த காரை பற்றி பேச தொடங்குகிறார்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ஜிம்முக்கு கூட ஆடி ஆர்எஸ்5 காரை எடுத்து செல்லலாம். அதாவது வாகன நெரிசல் மிகுந்த நகர சாலைகளில், மற்ற கார்களையும் போல் இதனையும் ஓட்டி செல்ல முடியும் என விராட் கோஹ்லி தனது கமெண்ட்டை வழங்குகிறார்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

பின்னர் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வைத்திருப்பவர்கள் எல்லாம், பொது சாலைகளில் தங்கள் காரை ஓட்டி செல்ல வேண்டுமென்றால், ஆள் நடமாட்டம் இல்லாத குறைவான டிராபிக் கொண்ட நாட்களுக்காக காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் விராட் கோஹ்லி கூறுகிறார்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ஆனால் ஆடி ஆர்எஸ்5 காரை எப்போது வேண்டுமானாலும் பொது சாலைகளில் ஓட்டி செல்ல முடியும் எனவும் விராட் கோஹ்லி தெரிவிக்கிறார்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

பின்னர் ஆடி ஆர்எஸ்5 காரானது, உங்கள் சிட்டி ஸ்போர்ட்ஸ் கார் எனக்கூறி விராட் கோஹ்லி நிறைவு செய்கிறார். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

காரின் சிறப்பம்சங்கள்

இந்த ஆடி ஆர்எஸ்5 காரில், 2.9 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்ட முடியும் என்றால் இந்த காரின் வேகத்தை பார்த்து கொள்ளுங்கள். இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 250 கிலோ மீட்டர்.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ஆடி கார்கள் மீதான காதல்

விராட் கோஹ்லி ஆடி கார்களை அதிகம் விரும்புபவர். ஆடி ஆர்எஸ் 5 காருடன் சேர்த்து மேலும் பல ஆடி கார்களை அவர் வைத்திருக்கிறார். இதில், ஏ8 எல், ஆர்8 வி10, க்யூ7 ஆகிய மாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

விராட் கோஹ்லி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 12 போட்டிகளில் விளையாடி 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாதிக்கும் மேல், அதாவது 7 போட்டிகளில் தோல்வியடைந்து விட்டதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு டோனி, பெங்களூருவுக்கு கோஹ்லி...சாலைகளில் ஜாலியாக ஆடி கார் ஓட்டினார்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி...!

முன்னதாக விராட் கோஹ்லி கார் ஓட்டி வருவதை அறிந்ததும், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காரை விரட்டி சென்று போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி, சென்னை நகரில் அவ்வப்போது கார், பைக்குகளில் வலம் வருவார். அந்த வகையில் தற்போது பெங்களூரு நகரில் விராட் கோஹ்லி வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch Virat Kohli FLOOR IT in an Audi RS5 sports coupe [Video]. read in tamil
Story first published: Tuesday, May 15, 2018, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X