நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

உலகம் முழுவதிலுமே எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் உலகளவில் பிரபலமான பிராண்ட்டாக டெஸ்லா விளங்குகிறது. வெவ்வேறு வகையிலான மாடல்கள் இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விற்பனையில் உள்ளன.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் களம் காண உள்ளதாக டெஸ்லா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் முதல் டெஸ்லா காராக மாடல் 3 மற்றும் மாடல் ஒய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

இந்திய சாலைகளுக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், வெளிநாடுகளில் டெஸ்லா கார் உரிமையாளர்கள் அவற்றுடன் பல்வேறு சாகசங்களில் ஈடுப்பட்டுள்ளதை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்த வகையில் நீருக்குள் இறக்கப்பட்ட டெஸ்லா மாடல் எஸ் காரினை பற்றிய வீடியோவினை தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

சிலின் வித் சேட் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் நீருக்குள் இறக்கப்பட்ட அந்த டெஸ்லா காரினை காணலாம். இந்த வீடியோவினை பதிவிட்டவர் இதேபோன்று டெஸ்லா காரில் பல்வேறு சாகசங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றை தொடர்ந்து இந்த லேட்டஸ்ட் வீடியோவில் டெஸ்லாவின் மாடல் எஸ் ப்ளைட் கார் நீருக்குள் இயங்குமா அல்லது இயங்காதா? என்பதை பரிசோதித்து பார்த்துள்ளார்.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

நீர் உள்ளே நுழையாத அளவிற்கு இந்த டெஸ்லா காரின் கேபினும் முழுவதுமாக கவர் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் ஓட்டுனர் இருக்கையை தவிர்த்து மற்றவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காரின் எடை நிச்சயமாக குறைந்திருக்கும். இதனால் கார் நீரில் மிதப்பதற்கு வாய்ப்புள்ளது.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

ஆனால் இந்த வீடியோவை பதிவிட்டவர் கார் நன்கு குட்டையின் ஆழம் வரையில் செல்ல வேண்டும் என்பதற்காக காருக்குள் எடையை கூட்டியுள்ளார். இந்த சோதனைக்காக செயற்கையாக ஒரு நீர்க்குட்டை ஒன்று பாலிதீன் கவர்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக இவ்வாறு பாலீதீன் பைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம்.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

நீர் காருக்குள் நுழைவதை தடுக்கும் விதத்தில் காரின் பக்கவாட்டு பகுதிகள் மட்டுமின்றி, முன்பக்க பம்பர்கள் மற்றும் காற்று துளைகளும் பாலிதீனால் மூடப்பட்டுள்ளது. செயற்கை நீர்குட்டை மற்றும் கார் என அனைத்தும் தயாரான பிறகு, முதலாவதாக இந்த டெஸ்லா மாடஸ் எஸ் ப்ளைட் கார் நீருக்குள் இறக்கப்பட்டது. முதல் தடவை கார் முழுவதுமாக நீருக்குள் மூழ்கவில்லை.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

இதனை கவனித்த ஓட்டுனர் தனது குழுவிடம் காரை வெளியே இழுக்க கூறுகிறார். அதன்பின்பு தான் முன்பக்க காற்று துளைகளை மறைத்தப்படி உள்ள பாலீதின் கவரை நீக்க வேண்டும், அப்போது தான் கார் முழுமையாக நீருக்குள் இறங்கும் என்பது ஓட்டுனருக்கு புரிந்துள்ளது. இதனால் காரின் முன்பக்க கவர் சிறிய அளவு கிழிக்கப்பட்டுள்ளதை மேலுள்ள வீடியோவில் காணலாம்.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

அத்துடன் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காரினை ஒரு கயிற்றினால் கட்டியுள்ளனர். மறைப்பினை நீக்கிய பின்னர் இந்த டெஸ்லா கார் நீர் முன்பக்கத்தில் முழுவதுமாக நிரம்பும் அளவிற்கு மெதுவாக நீருக்குள் இறக்கப்படுகிறது. பாதி கார் நீருக்குள் நுழைந்தவுடன் தடுப்புகளை தாண்டி காருக்குள் நீர் வருவதை பார்க்கலாம்.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

இருப்பினும் இந்த டெஸ்லா மாடல் எஸ் ப்ளைட் எலக்ட்ரிக் கார் வெற்றிக்கரமாக நீர்குட்டையில் இருந்து மீண்டு வருகிறது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து ஸ்டேரிங் சக்கரம் வழக்கத்திற்கு அதிகமாகவே அதிர்வுறுகிறது. அதேபோல் தொடுத்திரையும் சரியாக பதில் அளிக்கவில்லை, தனது செயல்பாடுகள் அனைத்தையும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் நிறுத்தி கொண்டது.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

இதனை தொடர்ந்து டெஸ்லா வாடிக்கையாளர் சேவையை இந்த சோதனையை மேற்கொண்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களாலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லையாம். அதன்பின் இந்த வீடியோவில் ஒருநாள் கழித்து, இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட டெஸ்லா மாடல் எஸ் ப்ளைட் கார் வழக்கம்போல் செயல்படுவதாக வீடியோவை பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

அத்துடன், இந்த டெஸ்லா எலக்ட்ரிக் காரில் மேலும் சில சோதனைகளையும் மேற்கொண்டு பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான சோதனைகள் செய்து பார்ப்பதற்கும், வீடியோவில் பார்ப்பதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாமே தவிர்த்து, அதிக செலவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமல்ல, எந்த பிராண்டின் பயணிகள் காரையும் இதுபோன்று சோதனை செய்து பார்ப்பது ஆபத்தானது.

நீருக்குள் இயங்குமா டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார்? வெளிக்காட்டும் வீடியோ இதோ!!

ஏனெனில் சில கார் தயாரிப்பு நிறுவனங்களின் மாடல்கள் இவ்வாறு நீருக்குள் இறக்கினால் முற்றிலுமாக பயன்படுத்தவே முடியாத அளவிற்கு கூட சேதமடையலாம். நீர்குட்டை, குளங்களில் வாகனத்தை இறக்கி பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என்றால், அதற்காகவே ஏகப்பட்ட ஆஃப்-ரோடு வாகனங்கள் விற்பனையில் உள்ளன. உதாரணத்திற்கு மஹிந்திரா தார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Can you drive a Tesla under water Watch a Youtuber do just this.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X