சென்னை மழையால் குஷியில் கார் மெக்கானிக்குகள்! இந்த காரை எல்லாம் ரிப்பேர் பண்ண எவ்வளவு செலவாகும் தெரியுமா?

சென்னை வெள்ளத்தில் தற்போது பல்வேறு கார்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இந்த கார்களை எல்லாம் இனி மெக்கானிக்களிடம் கொண்டு சென்று தான் ரிப்பேர் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இப்படியாக வெள்ள நீரில் மூழ்கிய கார்களை ரிப்பேர் செய்ய எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதற்கான பதிலை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து இதனால் சென்னை மாநகர தற்போது மழை வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நேற்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் தண்ணீரில் அடித்துப் போன வீடியோக்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. பல வாகனங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளன.

water flood damage car repair cost

இப்படியான தண்ணீரில் மூழ்கியுள்ள வாகனங்களை இனி மெக்கானிக்கிடம் கொண்டு சென்று தான் ரிப்பேர் செய்ய முடியும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை ரிப்பேர் செய்ய எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை தான் இங்கே காணப் போகிறோம்.

மழை வெள்ளம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை மெக்கானிக்குகள் மூன்று வகையாக பிரிப்பார்கள். கேட்டகிரி ஏ,பி,சி என அவை பிரிக்கப்படும். அதற்கு ஏற்றார் போல ரிப்பேர் செலவினங்களும் மதிப்பிடப்படும். அதன்படி கேட்டகிரி ஏ பிரிவு என்றால் வாகனத்தின் டயர் பகுதி மற்றும் கதவுக்கு கீழ் உள்ள பகுதி வரை மட்டும் நீருக்குள் மூழ்கி இருத்தல். இந்த பிரிவில் நீரில் மூழ்கிய வாகனங்களை ரிப்பேர் செய்வது மிகவும் சுலபமான விஷயமாக இருக்கும்.

water flood damage car repair cost

அடுத்ததாக கேட்டகிரி பி பகுதி அதாவது காரின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி தண்ணீரில் மூழ்கி இருத்தல். அடுத்து கேட்டகிரி சி பகுதி முழு காரும் தண்ணீருக்குள் மூழ்கி இருத்தல் என இவை மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. நாம் முன்னரே சொன்னது படி கேட்டகிரி ஏ பிரிவில் உள்ள வாகனத்தை சரி செய்வது என்பது மிகவும் சுலபமான விஷயமாகும்.

ஆனால் கேட்டகிரி பி வாகனம் என்பது அப்படி அல்ல இதன் செலவு மதிப்பீடு என்பதை சரியாக இவ்வளவுதான் இருக்கும் என சொல்லிவிட முடியாது. பாதி மூழ்கி இருக்கும் கார்களுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கலாம். காரின் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்றிருக்கலாம். இதனால் மெக்கானிக் காரின் ஒவ்வொரு பாகமாக ஆய்வு செய்து எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன என்பதை மதிப்பீடு செய்து அதை வைத்து தான் எவ்வளவு செலவாகும் என முடிவு செய்வார்கள்.

water flood damage car repair cost

கேட்டகிரி சி பிரிவு என்பது முழுமையாக கார் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் விஷயமாகும். இந்த பிரிவில் கார்களை சரி செய்ய நிச்சயம் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். காரின் உட்புறம் முதல் இன்ஜின் வரை பல இடங்கள் பாதிப்பு உள்ளாகி இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள கார்களை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தாமல் அதை விற்பனையே செய்ய வாய்ப்புள்ளது.

கேட்டகிரிஏ பிரிவில் கார் கதவின் கீழே வரை தண்ணீர் நிரம்பி இருக்கும்போது காருக்குள் தண்ணீர் வருவது சிரமம் அதேநேரம் கார் கதவின் மேலே தான் இன்ஜின் செட்டப் இருக்கும். அதனால் இன்ஜின் பகுதிக்குள் தண்ணீர் செல்வது நடக்காத காரியமாக தான் இருக்கும். ஆனால் காரின் அடிப்பாகங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதைதான் மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று அடி பாகம் சரியாக இருக்கிறதா என செக் செய்தால் போதும்.

கேட்டகிரி பி பிரிவில் காரின் உள்ளே தண்ணீர் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதே நேரம் இன்ஜின் உள்ளேயும் தண்ணீர் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த இரண்டும் மிகப்பெரிய வேலையாக மாறிவிடும். காரின் உட்புறகுதியில் தண்ணீர் நிரம்பி விட்டால் உட்பகுதி முழுவதும் நாசமாகி போக வாய்ப்பு இருக்கிறது. காரின் இன்ஜின் பகுதியிலும் தண்ணீர் சென்று விட்டால் அதை கழட்டி தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டியது இருக்கும்.

கேட்டகிரிசி பிரிவிலும் இதேபோல தான் காரின் அனைத்து பகுதிகளும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் காரின் உள்ளே உள்ள அனைத்து பாகங்களும் தண்ணீரால் பாதிக்கப்பட்டிருக்கும். காரின் உள்ளே தண்ணீர் நிரம்பும் போது காரின் இன்ஜின், வயரிங், பிரேக் லைனர், கிளட்ச் பிளேட்டுகள், ஆகியவை பாதிப்பு ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல காரின் உள்ளே எவ்வளவு நேரம் தண்ணீர் இருக்கிறது என்பதை பொறுத்தும் அதன் பாதிப்பு அளவுகள் மாறுபடும்.

இதற்கு முன்னர் மழை வெள்ளம் ஏற்பட்டபோது மெக்கானிக்கல் அனுபவித்த விஷயங்களை நாம் பார்த்தால் 12 மணி நேரத்திற்கும் மேல் காருக்குள் தண்ணீர் இருந்தால் அந்த கார் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காரின் இன்ஜின் பகுதிக்குள் தண்ணீர் செல்வதை விட காரின் உட்பகுதியில் தண்ணீர் நிரம்பி விட்டால் அந்த காரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது மிக சவாலான விஷயமாக இருப்பதாகவும் மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு புதிய கார் இப்படியாக மழை வெள்ள நீரில் சிக்கிக் கொண்டால் அதன் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்று விட்டால் கண்டிப்பாக அந்த காரை ரிப்பேர் செய்ய லட்சக்கணக்கில் தான் செலவாகும் என மெக்கானிக்குகள் தெரிவித்து வருகின்றனர். அதன் பாதிப்பு அளவுகளை பொறுத்து பணம் மாறுபடும் என்றாலும் நிச்சயம் அதிகமான செலவை இழுத்து வைக்கும் வகையில் தான் இது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

காரின் ரிப்பேர் செலவைப் பொறுத்துதான் வாடிக்கையாளர்கள் அந்த ரிப்பேர் குறித்த விஷயங்களை செய்வார்கள் என மெக்கானிக்குகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரின் ரிப்பேர் செலவு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த செலவிலேயே இந்த ரிப்பேர் செய்து விடுவார்கள் எனவும் அதிகமாக இருந்தால் இன்சூரன்ஸ் கிளைம் பெற்று இந்த ரிப்பேர் செய்வார்கள் எனவும் மெக்கானிக்குகள் கூறும் நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றையும் கூறியுள்ளனர்.

அதன்படி அதிகமான அளவு செலவு வந்துவிட்டால் அதை இன்சூரன்ஸ் மூலம் கிளைம் பெற்று அந்த காரை சரி செய்யும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்த காரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்றுவிட்டு வேறு ஒரு புதிய காரை வாங்க தான் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் சென்னை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கிய கார்கள் அடுத்த ஒரு சில வாரங்களில் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இப்படியாக வரும் கார்கள் சென்னையில் அல்லாமல் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை வெள்ள நீரில் மூழ்கிய கார்களை ரிப்பேர் செய்ய நிச்சயம் லட்சக்கணக்கில் செலவாகும். குறிப்பாக கேட்டகிரிசி பிரிவில் உங்கள் வாகனம் நீரில் மூழ்கி இருந்தால் அதை சரி செய்வது என்பது மிக சவாலான விஷயமாக தான் இருக்கும். சரி செய்தாலும் மழை வெள்ளத்தால் கார் பாதிப்பு ஏற்பட்ட தடம் காரில் நிச்சயம் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 13:15 [IST]
English summary
Water flood damage car repair cost explanation
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X