உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

மழை காலங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் வந்து தண்ணீர் தேங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னை வெள்ளம், வர்தா புயல் ஆகிய சம்பவங்களில் போது பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகவும் கஷ்டப்பட்டனர். பலரது கார், பைக் தண்ணீரில் முழ்கியது. அதில் சில பயன்படாத நிலைக்கே சென்றது.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இனி அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் கார்களில் தண்ணீர் புகுந்து அது கார் இன்ஜினில் எந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள், அறிகுறிகள், அதற்கான தீர்வுகளை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவற்றை பற்றி தான் விவரிக்கிறது இந்த செய்தி

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

பிரச்னைகள்

பெட்ரோல் டேங்க் துரு பிடித்தல்

பெட்ரோலை விட தண்ணீர் அடர்த்தி அதிகமானது. இதனால் பெட்ரோல்/ டீசல் டேங்கிற்குள் புகுந்த தண்ணீர் டேங்கின் அடிப்பகுதியிலேயே தஞ்சமடையும். இதனால் எவ்வளவு அதிக நாள் டேங்கில் தண்ணீர் தேங்குகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு டேங்கின் உட்புறமாக துரு பிடிக்கும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இன்ஜெக்டர் செயல் இழக்கும்

நவீன கார்களில் கார்பரேட்டர்களுக்கு பதிலான இன்ஜெக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. அந்த இன்ஜெக்டரில் உள்ள துளை பெட்ரோல்/டீசல் அடர்த்தியை கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த பகுதி வழியாக தண்ணீர் சென்றால் அதன் அடர்த்தி காரணமாக இன்ஜெக்டர் அதிக சக்தியை பயன்படுத்தும். இதனால் இன்ஜெக்டர் செயல் இழக்க கூட வாய்ப்புள்ளது.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

பியூயல் பம்ப் செயல் இழக்கும்

தண்ணீர் பெட்ரோல்/ டீசல் டேங்கின் அடிப்பகுதியிலேயே தங்கும். அதே நேரத்தில் டேங்கின் அடிப்பகுதியில் இருந்தே பெட்ரோல்/ டீசலை எடுக்கும் படி டேங்க் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பியூயல் பம்ப் உள்ள இன்ஜின்களில் பெட்ரோல்/ டீசல் தான் கூலண்ட்களாகவும், மசகு தன்மைக்கும் உதவும், அதில் தண்ணீர் நுழைந்தால் இந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கும். மேலும் அதிக நேரம் இந்த தண்ணீர் இந்த பம்ப்பில் இருந்தால் இது துரு பிடிக்கும் நிலைக்கும் தள்ளப்படும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இன்ஜின் ஆயலை பாதிக்கும்

இந்த செயலையும் மீறி தண்ணீர் இன்ஜினுக்கும் புகுந்தால் அது நேராக இன்ஜின் ஆயில் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் இது இன்ஜின் ஆயிலுடன் கலந்து அதன் மசகு தன்மையை குறைத்துவிடும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இன்ஜின் செயல் இழக்கும்

மேல் அனைத்தும் நிகழ்ந்துவிட்டால் இன்ஜின் முழவதும் தண்ணீர் புகுந்து துரு பிடித்து இன்ஜின் முழுவதும் செயல் இழந்து விடும். அவ்வாறாக நடக்கும் பட்சத்தில் முழு இன்ஜினையும் மாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

அறிகுறிகள்

குறைந்த மைலேஜ்

இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால் காரின் பவரும் மைலேஜூம் குறைந்துவிடும். இது தான் முதல் அறிகுறி

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இன்ஜின் செயல் திறன்

காரின் இன்ஜின் வழக்கத்திற்கு மாறாக செயல்பட துவங்கும் ஆங்காங்கே இன்ஜினின் செயல்பாடும் நின்றுவிடும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

ஆர்பிஎம் குறைவு

நாம் இன்ஜினை செயல்படுத்த அதிகம் மெனக்கெடுதல் வேண்டும். வழக்கான ரேஸிங்கில் கிடைக்கும் ஆர்பிஎம்யை விட குறைவான ஆர்பிஎம்மே கிடைக்கும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது

இன்ஜில் தண்ணீர் இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது. குறைவான தண்ணீர் இருந்தால் சில முயற்சிகள் செய்யும் போது இன்ஜின் சூடாகி அதில் உள்ள தண்ணீர் ஆவியாகும் பட்சத்தில் ஸ்டார்ட் ஆகிவிடும். அதிக தண்ணீர் இருந்தால் இன்ஜின் செயல் படாமலே போகும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

புகைவெளியிடும் கருவி

இன்ஜினில் இருந்து ஆவியாகும் தண்ணீர் புகைவெளியிடும் கருவி வழியாக வெளியேற்றப்படும். சில நேரங்களில் ஆவியான தண்ணீர் புகை வெளியிடும் கருவியில் குளிர் இருந்தால் மீண்டும் தண்ணீராக மாறிவிடும். புகை வெளியாககும் கருவியில் தண்ணீர் இரந்தால் இது கூட காரணமாக இருக்கலாம்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

தீர்வு

பியூயல் பில்டர்கள்

இன்ஜினுக்குள் தண்ணீர் செல்லாமல் பியூயல் பில்டர் எனும் கருவி தான் தடுக்கும். எனினும் அதையும் தாண்டி தண்ணீர் சென்றுள்ளது என்றால் தண்ணீர் அளவு அதிகமாக இருந்திருக்கும். இந்நிலையில் பியூயல் பில்டரும் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சிருக்கும். இதனால் அதை முதலில் மாற்ற வேண்டும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

பியூயல் சேர்ப்பான்கள்

பெட்ரோல் டேங்கில் லிக்யூ மோலி, ஹீட், ஹெட்ரோ பெர்ன் ஜி, உள்ளிட்ட பியூயல் சேர்பான்களை சேர்ப்பது மூலம் தண்ணீரை பெட்ரோலுடன் கலக்க வைக்க முடியும். இது இன்ஜினுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் இது குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

ரப்பிங் ஆல்கஹால்

பெட்ரோல் டேங்கிற்குள் ரப்பிங் ஆல்கஹால் எனும் திரவத்தை ஊற்றினால் அது தண்ணீருடன் கலந்து இன்ஜினுக்கு சென்று அதுவும் எரிபொருளாக பயன்படும். எனினும் அதை சிறந்த மெக்கானிக் மட்டுமே செய்ய முடியும். அவர்களுக்கு தான் அதன் அளவுகள் சரியாக தெரியும்.

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

பெட்ரோல் டேங்கில் அதிகளவு தண்ணீர் புகுந்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளோம். சில சொட்டு தண்ணீர் சென்றால் அது பியூயல் பில்லரால் உறிஞ்சப்பட்டு விடும் அதையும் மீறி செல்லும் சில சொட்டு தண்ணீர் ஆவியாக்கப்படும் அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை

உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

இந்த தகவல்களை மனதில் வைத்து கொண்டு உள்ள காரில் தண்ணீர் புகுந்ததால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அதற்கு தகுந்த தீர்வை செய்யுது விடுங்கள் தண்ணீர் புகுந்த விஷயத்தில் நீங்கள் அசால்ட்டாக இருந்தால் இன்ஜின் செயல் இழப்பதையும் சந்திக்க வேண்டியது இருக்கும்

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Water In The Fuel Tank Of Your Car? — Here Are The Problems, Symptoms & Solutions!. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X