தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஓர் முழுமையான ஜீப்!

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் மிகச்சிறப்பான வடிவமைப்பு கொண்ட கார்களை வாட்டர்கார் என்ற நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறது. அந்த நிறுவனத்தின் பாந்தர் என்ற பெயரிடப்பட்ட ஜீப் அனைத்து சாலை நிலைகளிலும், தண்ணீரிலும் சிறப்பாக இயங்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் பிற கார்கள் போன்று அல்லாமல் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக பாந்தரை வடிவமைத்து கொடுக்கிறது வாட்டர்கார் நிறுவனம். படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிஜே-8 ஜீப்

சிஜே-8 ஜீப்

புகழ்பெற்ற வில்லிஸ் சிஜே8 ஜீப்பை கஸ்டமைஸ் செய்து பாந்தர் வாட்டர் ஜீப்பாக மாற்றியுள்ளது வாட்டர்கார் நிறுவனம்.

ஃபைபர் கிளாஸ் ஹல்

ஃபைபர் கிளாஸ் ஹல்

இந்த ஜீப்பின் ஹல் எனப்படும் நீரில் மிதப்பதற்கான அடிப்பாகம் உறுதிமிக்க ஃபைபர் கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 குரோமைல் சேஸீ

குரோமைல் சேஸீ

நீரில் மிதப்பதற்கான தகவமைப்புகள் கொண்டதாகவும், ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் வகையில் குரோமைல் சேஸீயை கொண்டுள்ளது. கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சேஸீ நீரிலும், நிலத்திலும் சிறந்த கையாளுமையை வழங்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

பல்வேறு விதமான எஞ்சின்களை பாந்தரில் பொருத்தி வாட்டர்கார் நிறுவனம் சோதனைகளை நடத்தியது. இதில், ஹோண்டாவின் 3.7 லிட்டர் வி6 வி-டெக் எஞ்சின் பொருத்தமாக இருந்துள்ளது. 250 எச்பி சக்தியை அளிக்கும் இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் சிறப்பாக இருப்பதாக வாட்டர்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு டிரான்ஸ்மிஷன்

சிறப்பு டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் தண்ணீரில் செல்லும்போது ஜெட்டுக்கும், தரையில் செல்லும்போது வீல்களுக்கும் பவரை செலுத்தும் டிரான்ஸ்ஃபர் கேஸ் என்ற விசேஷ அமைப்பு கொண்ட 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட டிரான்ஸ்மிஷனுக்கு வாட்டர்கார் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்டிரியர்

இன்டிரியர்

சிஜே-8 ஜீப்பில் உள்ள அதே இன்டிரியர்தான். ஆனால், வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு விருப்பம்போல் அலங்காரம் செய்து கொள்ள முடியும் என்கிறது வாட்டர்கார்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

4 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. ஆஃப் ரோடு பயணங்களின்போது பள்ளம், மேடுகளை கடக்கும்போது, அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் வகையிலான விசேஷ இருக்கைகள் பாந்தரில் பொருத்தப்பட்டுள்ளது.

துரு பிடிக்காது

துரு பிடிக்காது

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இபாக்ஸி கோட்டிங் கொண்ட துரு பிடிக்காத பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எளிதில் துருப் பிடிக்காது என்றாலும், உப்பு நீரில் பயன்படுத்திய பின்பு இந்த காரை கழுவுவதற்கான வழிமுறைகளையும் வாட்டர்கார் நிறுவனம் வழங்குகிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வேகம்

வேகம்

தரையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ., வேகத்திலும், தண்ணீரில் மணிக்கு 70 கிமீ., வேகத்திலும் செல்லும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2013, 12:49 [IST]
English summary
Evolutionary in its design and engineering, A Watercar Panther takes you anywhere you want to go. Thrill to its acceleration provided by a Honda V6 V-Tec motor, Leave the high way behind thanks to its long travel off road suspension. Travel at speeds over 40 miles an hour in the water courtesy of the panther jet. And do all this with the security of knowing you are surrounded by a state of the art revolutionary designed composite body... Nothing compares to driving a "panther".
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+