மலைபோல் குவிந்து கிடக்கும் டயர்கள்! சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்! என்ன செய்ய போறாங்க தெரியுமா?

பயனற்றதாக குவிந்து கிடக்கும் டயர்களை வைத்து சிறப்பான காரியம் ஒன்றை மேற்கு வங்க மாநில அரசு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

டயர்களுக்கான பூங்கா விரைவில் இந்தியாவில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே நாட்டின் முதல் டயர்களுக்கான பூங்கா ஆகும். வாகனத்தின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான கூறுகளில் டயரும் முதன்மையான ஒன்று. இதற்கான தனி சிறப்பு மிக்க பூங்காவே மிக விரைவில் இந்தியாவில் அமைய இருக்கின்றது.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

இது, மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைய இருக்கின்றது. மாநிலத்தின் போக்குவரத்துறை அமைச்சகத்தின் முயற்சியினால் இந்த பூங்கா அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பூங்காவில், பயனற்றது என ஒதுக்கப்பட்ட டயர்களைக் கொண்டு செய்யப்பட்ட சிற்பம் போன்ற படைப்புகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இதுவே, இந்த பூங்காவின் தனிச்சிறப்பாகும்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

இத்துடன், டயர்களின் சிறப்பு மற்றும் பங்களிக்கும் விதம் பற்றிய சுவராஷ்ய தகவல்களும் அந்த பூங்காவில் இடம் பெறும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, பழுதான மற்றும் பயன்பாடு அற்றது என ஒதுக்கப்பட்ட டயர்களின் மூலம் வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்களே அதிகம் இந்த பூங்காவில் இடம்பெற இருக்கின்றது.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

வீணாகப் போடப்படும் டயர்களை கலைநயமிக்காத மாற்றும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கு வங்க மாநில அரசு மேற்கொண்டிருக்கின்றது. இதனால், பயனற்றது ஒதுக்கப்பட்டிருக்கும் டயர்களை ஓர் பொருட்களாக மாற்ற முடியும். இதுமட்டுமின்றி, பேருந்து பணிமனைகளில் குப்பையாகப் போடப்பட்டு பெரும்பகுதியை அடைத்துக் கொண்டிருக்கும் டயர்களையும் பயனுள்ள பொருளாக மாற்ற முடியும்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

இதுமாதிரியான முயற்சியை நாட்டின் எந்தவொரு மாநில அரசும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. சைக்கிள் முதல் மிகப்பெரிய லாரிகள் வரை அனைத்திலும் காணப்படக்கூடிய பொதுவான பாகமாக டயர்கள் இருக்கின்றன. இது இல்லையென்றால் பிற எந்த பாகங்கள் இருந்தும் வாகனம் முழுமையாக பூர்த்தியடையாது என்ற கூறலாம்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

அந்தளவிற்கு மிகவும் பயனுள்ள கூறாக டயர்கள் இருக்கின்றன. இதனையே பயன்படுத்தியதற்கு பின்னரும் பயன்படுத்தும் விதமாக கலைநய பொருட்களாக மாற்றப்பட இருக்கின்றன. இதுகுறித்து, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன்வீர் கபூர் கூறியதாவது, "எந்த பொருளையும் பயனற்ற கழிவு என்று பெயரிட்டுவிட முடியாது. அதை மீண்டும் பயன்படுத்தலாம் மற்றும் கலை வடிவமாக மாற்றலாம். அந்தவகையிலேயே, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் டயர் பூங்காவை விரைவில் தொடங்கவுள்ளது" என்றார்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு பஸ் டிப்போக்களில் கழிவுகளாக கிடக்கும் ஸ்கிராப் டயர்கள், மேற்கு வங்க போக்குவரத்துக் கழகத்தின் உள்ளக குழுவினர்களால் மறுவேலை செய்யப்பட்டு வண்ண மயமான வடிவங்களாக மாற்றப்பட உள்ளன" என்ற தகவலையும் தெரிவித்தார்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

மேலும், டயர் பூங்கா மேற்கவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள எஸ்பிளனேட் எனும் பகுதயில் அமைய இருப்பதாகவும், அங்கு வரும் பார்வையாளர்கள் நிதானமாக அமர்ந்து ரிலாக்ஸ் செய்யும் வகையில் சிறிய கஃபேவும் நிறுவப்பட இருப்பதாக கபூர் கூறினார். குறிப்பாக, கைவினைப் பொருட்களை ரசித்தவாறு ருசி மிகுந்த தேநீர், காஃபி போன்றவற்றை அவர்களால் பருக முடியும் என அவர் கூறினார்.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

ஆனால், இந்த பூங்கா எப்போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்ற தகவலை மேற்கு வங்க மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை. நாட்டிலேயே முதல் முறையாக டயர் பூங்க மேற்கு வங்கத்தில் அமைய இருப்பது வாகன ஆர்வலர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.

மலை போல் குவிந்து கிடக்கும் டயர்கள்... சூப்பர் பிளான் போட்ட மேற்கு வங்கம்... என்ன செய்ய போறாங்க தெரியுமா..?

இதேபோன்று சென்னை ஐசிஎஃப்-இல் கழிவு இரும்பு பொருட்களை மனிதன் மற்றும் காட்டு விலங்குகள் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இதுபோன்ற பல நிறுவனங்கள் கழிவு பொருட்களைப் பயன்படுத்தி கலைநய பொருட்களை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மேற்கு வங்க மாநில அரசு பழைய டயர்களில் மறு வாழ்வு கொடுக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
WBTC Planning To Build India's First 'Tyre Park' In Kolkata. Read In Tamil.
Story first published: Monday, November 2, 2020, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X