இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

அதிசக்தி வாய்ந்த புதிய டீசல் லோகோமோட்டிவ் இந்திய ரயில்வேயின் விரைவில் இணைக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் பயணிகள் ரயில்களை (Passenger Trains) இயக்கி வருகிறது. இதன் மூலம் நாள் தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் மற்றும் டீசல் லோகோமோட்டிவ்களைதான் (Locomotives) இந்திய ரயில்வே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. இதுதவிர ஒரு சில சிஎன்ஜி (CNG - Compressed Natural Gas) லோகோமோட்டிவ்களும் கூட பயன்பாட்டில் உள்ளன.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

இந்த சூழலில் டபிள்யூடிஜி-6ஜி (WDG-6G) என்ற புதிய டீசல் லோகோமோட்டிவ் இந்திய ரயில்வேயில் வெகு விரைவில் சேர்க்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய ரயில்வேயிடம் இருப்பதிலேயே இதுதான் அதிக சக்தி வாய்ந்த டீசல் லோகோமோட்டிவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

அமெரிக்காவை சேர்ந்த ஜென்ரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் Evolution Series அடிப்படையில், WDG-6G டீசல் லோகோமோட்டிவ் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள ஜென்ரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

இதில், வி16, 4-ஸ்ட்ரோக், டர்போசார்ஜ்டு மற்றும் இன்டர்கூல்டு டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 6,000 எச்பி (HP - Horse Power) சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அத்துடன் எலெக்ட்ரானிக் ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

தற்போது இந்திய ரயில்வே பயன்படுத்தி வரும் வேறு எந்த டீசல் லோகோமோட்டிவ்களுடன் ஒப்பிட்டாலும், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு ஆகிய அம்சங்களில், WDG-6G டீசல் லோகோமோட்டிவ்தான் சிறந்து விளங்குகிறது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

இதுதவிர டிரைவர் கேபினிலும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அதிசக்தி வாய்ந்த டீசல் லோகோமோட்டிவ் என்ற பெருமையை கொண்ட WDG-6G கூடிய விரைவில் இந்திய ரயில்வேயில் இணையவுள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

தற்போது சிடிசிஆர் (CDCR - Confirmatory Oscilograph Car Run) சோதனைகளுக்கு WDG-6G டீசல் லோகோமோட்டிவ் தயாராக உள்ளது. சோதனை ஓட்டம் முடிவடைந்ததும், இந்திய ரயில்வேயில் WDG-6G டீசல் லோகோமோட்டிவ் இணைக்கப்படும்.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

தென் மத்திய ரயில்வேயின் விகராபாத் (தெலங்கானா)-பார்லி (மகாராஷ்டிரா) செக்ஸனில் WDG-6G டீசல் லோகோமோட்டிவ் வெகு விரைவில் சோதனை செய்யப்படவுள்ளது. தென் மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ

அதிசக்தி வாய்ந்ததாக இருந்தாலும் கூட, WDG-6G மிகவும் இலகுவானது. அத்துடன் இதனை பராமரிப்பதும் மிக மிக எளிதானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் உள்பட பல்வேறு அம்சங்களில், இந்திய ரயில்வேயின் எதிர்கால திட்டங்களுக்கு WDG-6G டீசல் லோகோமோட்டிவ் உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
WDG-6G - Indian Railway’s Most Powerful Diesel Locomotive. Read in Tamil
Story first published: Friday, June 21, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X