4மணி நேர பயணம் 12ஆக அதிகரித்த போதும் ஃபேமிலியோட கிளம்பிய அம்பானி.. கடவுள் மேல இவ்ளோ பக்தியா! வாடக காருல போனாரா
உத்தரபிரதேசத்தின் பிரக்யராஜில் எங்கு பார்த்தாலும் இப்போது மக்கள் தலையாகவே தெரிகின்றது. பெங்களூருவின் டிராஃபிக்கையே மிஞ்சும் அளவிற்கு இந்தியாவின் இந்த சிறிய நகரத்தில் தற்போது டிராஃபிக் பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. அங்கு நடைபெறும் மஹா கும்ப மேளாவில் கலந்துக் கொள்ள மக்கள் கூட்டம் படையெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வழக்கமாக ஆக போக்குவரத்து நேரமும் பன்மடங்காக அதிகரித்திருக்கின்றது. அயோத்தியில் இருந்து பிரக்யராஜ்க்கு செல்ல பொதுவாக வெறும் 4 மணி நேரம் வரை ஆகும்.
ஆனால், இப்போது பக்தர்கள் கூட்டம் அங்கு அலைமோதுவதால் பயண நேரம் 12 மணி நேரமாக அதிகரித்திருக்கின்றது. இந்த அளவிற்கே நெரிசல் மிகுந்த பகுதியாக பிரக்யராஜ் தற்போது மாறி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பம் பெரும் கார் படையுடன் மஹா கும்ப மேளாவில் கலந்துக் கொண்டிருக்கின்றது.

முகேஷ் அம்பானி குடும்பமே அதுவாகும். சாதாரணமாகவே இந்த குடும்பத்தினர் வெளியில் வரும்போது பெரும் வாகன அணிவகுப்புடன் வரும். இதைபோலவே இந்த ஆன்மீக பயணத்தின்போதும் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாகனங்கள் அணிவகுத்திருக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் மட்டுமே ஆறுக்கும் அதிகமான யூனிட்டுகள் வரை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes-Benz S-Class) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) உள்ளிட்ட சொகுசு கார்களையும் இந்த வாகன அணிவகுப்பில் நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த கார்கள் மட்டுமல்ல சில மஞ்சள் நிற (டி போர்டு) நம்பர் பிளேட் கொண்ட சில வாகனங்களையும் நம்மால் இந்த கான்வாயில் பார்க்க முடிகின்றது.
டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) மற்றும் பென்ஸ் வாகனங்கள் சில டி-போர்டு பதிவெண்ணுடன் இருந்தன. இவை அம்பானி குடும்பத்தினரின் வருகைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த குடும்பத்தினரிடத்தில் நூற்றுக் கணக்கான ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் கார்களே 20க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த சூழலில் ஏன் இந்த மஞ்சள் நிற பதிவெண் கொண்ட வாடகை கார்கள் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை. முகேஷ் அம்பானி-யின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் போதுகூட இதேபோல் அதிக எண்ணிக்கையில் இவர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்தினர். விருந்தினர்களை அழைத்து வர நூற்றுக் கணக்கான கார்களை வாடகைக்கு எடுத்து அவர்கள் பயன்படுத்தினர்.

இந்த நிலையிலேயே பிரத்யகராஜ் ஆன்மீக பயணத்தின் போது அதிக அளவில் மஞ்சள் நிற பதிவெண் கொண்ட கார்களை பயன்படுத்தி இருக்கின்றனர். இதேபோல், இந்த கான்வாயில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வாகனங்கள் உபி பதிவெண்ணையும், ஹாரியானா பதிவெண்ணையுமே கொண்டிருந்தன. இதேபோல், சில வாகனங்கள் மட்டும் டெல்லி பதிவெண்ணைக் கொண்டிருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பயணத்திற்காக சில கார்கள் அம்பானியால் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கும் என உறுதியாக நம்பப்படுகின்றது. இந்த கான்வாயில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் சில ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரின்கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் அடங்கும். மஹா கும்பமேளாவை பார்க்க சென்ற பலர் இந்த கான்வாயை பார்த்து வாயடைத்து நின்றதை தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








