இந்தியாவின் நம்பர்1 பணக்காரர் அம்பானிக்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணா! சோப்பு டப்பாபோல வாங்கி குவிச்சுட்டாரு
இந்தியாவின் பெரும் பணக்கார்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சிவ் நாடார், சைரஸ் பூனவல்லா உள்ளிட்ட பெரும்பாலானோர் மிகப் பெரிய கார் காதலர்களாக இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களிடத்தில் ஏகப்பட்ட அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, முகேஷ் அம்பானி இடத்தில் மிக மிக விலை உயர்ந்த கார்கள் பல பயன்பாட்டில் உள்ளன.
சமீபத்தில்தான் இவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பான பயணத்திற்காக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு லக்சூரி கார் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கார் குண்டு மழையே பொழிந்தாலும் அதில் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் இரண்டு யூனிட்டுகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்ற நிலையிலேயே, மூன்றாவதாக ஓர் யூனிட் சமீபத்தில் வாங்கப்பட்டது.

இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 10 கோடி ஆகும். இதுபோன்று இன்னும் பல நம்ப முடியாத விலைக் கொண்ட கார்கள் அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் பெரும் பணக்காரர்களும், அவர்களிடம் பயன்பாட்டில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களின் பட்டியலையும்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
முகேஷ் அம்பானி: இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவரே முகேஷ் அம்பானி. இவர் உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆம் இடத்தில் இருக்கின்றார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 86.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் தலைவரான இவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் உள்ளன. அந்தவகையில், அவரிடம் பயன்பாட்டில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலாக சமீபத்திய கொள்முதலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 680 குவார்டே இருக்கின்றது. விபிஏஎம் வி10 வகை பாதுகாப்பு வசதிக்கொண்ட கார் மாடலே இது ஆகும்.
15 கிலோ எடைக் கொண்ட டிஎன்டி இந்த காருக்கு மிக அருகில் வெடித்தால்கூட, அதனுள் இருக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதேபோல், துப்பாக்கிகளில் இருந்து வரும் குண்டு மழையில் இருந்தும் இந்த கார் தன்னுடைய பயணிகளை பாதுகாக்கும். மேலும், தீ விபத்தினாலும் இந்த கார் அவ்வளவு பாதிப்பைச் சந்திக்காது. இத்தகைய வியக்கத்தக்க திறன் கொண்ட காரையே அம்பானி சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக வாங்கினார்.

இதுபோன்று இன்னும் பல அரிய வகை மற்றும் விலை உயர்ந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ரூ. 7.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் டிராப் ஹெட், ரூ. 8.5 கோடி விலைக் கொண்ட பிஎம்டபிள்யூ 760 எல்ஐ ஆர்மோர்டு, ரூ. 3.85 கோடி மதிப்புள்ள பென்ட்லீ பென்டேகா மற்றும் 7.50 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி எஸ்எஃப் ஸ்ட்ரடேல் உள்ளிட்ட கார்கள்கூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
கவுதம் அதானி: முகேஷ் அம்பானியை போலவே இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முன்னணி இடத்தில் இருக்கின்றார். சொல்லப் போனால் இவரே இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் ஆவார். உலக செல்வந்தர்கள் லிஸ்டில் முன்னணி இடங்களை அலங்கரித்து வந்த இவர் சில சர்ச்சையின் காரணமாக தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து தற்போது உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் 24 ஆம் இடத்தில் இருக்கின்றார்.

அதானி குழுமத்தின் தலைவரான இவரிடத்திலும் முகேஷ் அம்பானியைப் போல மிக மிக விலை உயர்ந்த கார்கள் மற்றும் வானூர்திகள்கூட பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (இதன் மதிப்பு ரூ.6.95 கோடி), ஃபெராரி கலிபோர்னியா டி (இதன் விலை ரூ.2.20 கோடி), லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (இதன் மதிப்பு ரூ.2.39 கோடி) மற்றும் ரூ.1.70 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7சீரிஸ் உள்ளிட்ட கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
சிவ் நாடார்: எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் இவரே ஆவார். இவரிடத்திலும் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், இவரிடத்தில் இருக்கும் மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இருக்கின்றது. இதன் விலை ரூ. 14 கோடி ஆகும்.

ஏராளமான சொகுசு கார்கள் இவரிடத்தில் பயன்பாட்டில் இருந்தாலும், இந்த கார் மிகவும் அரிய ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. இதுதவிர, மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 போன்ற மிக மிக ஆடம்பர அம்சங்கள் கொண்ட காரும் சிவ் நாடாரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் லிஸ்டில் இவரே மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்.
சைரஸ் பூனவல்லா: உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்கள் சில இவரிடத்தில் உள்ளன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII, மெக்லாரன் 720 எஸ், ஃபெர்ராரி 360 ஸ்பைடர் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் உள்ளிட்ட கார்கள் பயன்பாட்டில் உள்ளன. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவரே இவர் ஆவார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் 79 வது இடத்தில் இருக்கின்றார்.

ராதா கிருஷ்ணன் தமணி: சைரஸ் பூனவல்லாவை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவராக ராதா கிருஷ்ணன் தமணி இருக்கின்றார். இவர் இந்த பட்டியலில் 100 வது இடத்தில் இருக்கின்றார். அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இவர் ஆவார். டிமார்ட் நிறுவனமும் கூட இவருக்கு சொந்தமானதே.
நாடு முழுவதும் 234 கிளைகளுடன் இது செயல்பட்டு வருகின்றது. இவரிடத்தில் ஏகப்பட்ட அரிய மற்றும் சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்7, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

லெஜண்ட் சரவணா: தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரிடத்திலும் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரையே சமீபத்தில் லெஜண்ட் சரவணா, ஆட்டோ ஓட்டுநர்களுடனான ஆயுத பூஜைக் கொண்டாட்டத்தின்போது பயன்படுத்தினார். வெறும் 3.5 அடி உயரம் மட்டுமே கொண்ட இந்த காரின் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும்.
இதுபோன்ற நம்ம அண்ணாச்சிகிட்ட ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் விரைத், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஃபெர்ராரி 488, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, அஸ்டன் மார்ட்டின் டிபி11, லம்போர்கினி உருஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் அவரிடம் பயன்பாட்டில் உள்ளன. இவருடைய கார் கலெக்ஷன் முகேஷ் அம்பானியின் கார் கலெக்ஷனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர்களைப் போலவே இந்தியாவின் இன்னும் பல பணம் கொழுத்த பணக்காரர்கள் இதைவிட அதிக விலைக் கொண்ட கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், தனி விமானம் மற்றும் லக்சூரி படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்து வரும் தொழிலதிபர்களும் இந்தியாவில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









