ரோல்ஸ் ராய்ஸ் இருக்கும்போதே இன்னொரு ஆடம்பர காரை வாங்கிட்டாரு.. ரொம்ப பெரிய பணக்கார அரசியல்வாதியா இருக்காரு!!
நம்மில் பலர் பெரும் தொழிலதிபர்கள் அல்லது நடிகர்கள் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதுதான் கிடையாது சில அரசியல்வாதிகளும் இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர காரை பயன்படுத்தி வரும் அரசியல்வாதிகளில் பிரமோத் மத்வராஜ்-ம் ஒருவர் ஆவார். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவர். மேலும், இவர் அரசியல்வாதி மட்டுமல்ல பெரும் தொழிலதிபரும் ஆவார். இதனால்தான் இந்தியாவில் உள்ள பெரும் செல்வமிக்க அரசியல்வாதிகளில் ஒருவராகவும் அவர் காட்சியளிக்கின்றார்.
இவரே தற்போது மற்றுமொரு விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவும் ரோல்ஸ் ராய்ஸ் காரை போலவே ஆடம்பர அம்சங்களை அதிகம் தாங்கிய வாகனம் ஆகும். டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் லக்சூரி அம்சங்கள் நிறைந்த எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த காரையே கர்நாடகா அரசியல்வாதி பிரமோத் மத்வராஜ் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த கார் அவருடைய வீட்டிற்கு 'ஃப்ளாட் பெட்' எனப்படும் வாகனம் வாயிலாகவே கொண்டு வரப்பட்டு டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஒருத்தர் ரெண்டு பேர் அல்ல திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே அரசியல்வாதி பிரமோத் தற்போது இணைந்திருக்கின்றார். கப்பலில் மிதக்கின்ற மாதிரியான அனுபவத்தை வழங்கும் அல்ட்ரா லக்சூரி அம்சங்களைத் தாங்கிய கார் மாடலே இந்த வெல்ஃபையர் ஆகும்.
இதனால்தான் இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் டிமாண்ட் மிக சிறப்பாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் காரொன்று இருக்கும்போதே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார். கோஸ்ட் (Ghost) ஆடம்பர காரையே அவர் வைத்திருக்கின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 5.8 கோடி ஆகும்.
இந்த கார் மாடல் மட்டுமல்ல அரசியல்வாதி பிரமோத் இடம் இன்னும் பல சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM) சொகுசு காரும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. இதையும் அவர் சமீபத்திலேயே வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நிலையிலேயே தற்போது இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலான வெல்ஃபையரையும் அவர் வாங்கி இருக்கின்றார். இந்தகாரில் பயணிகளின் சொகுசான டிராவலுக்காக ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த இருக்கைகளை டொயோட்டா நிறுவனம் மிகுந்த சௌகரியமான அமர்வு உணர்வை வழங்கக் கூடிய குஷன்களையும், லெதரையும் கொண்டே தயார் செய்திருக்கின்றது. இதுதவிர, 14 அங்குல அளவிலான பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பயணத்தை மிகவும் அட்வான்ஸ்டானதாக மாற்ற உதவியாக இருக்கும்.
மேலும், அடாஸ் (ADAS) தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களையும் வெல்ஃபையர் எம்பிவியில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான அம்சங்களினாலேயே தொழிலதிபர்களின் மனம் கவர்ந்த காராக வெல்ஃபையர் மாறியிருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே வெல்ஃபையரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டும் இணைந்து 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க்கை வெளியேற்றும். சுலபலமான இயக்கத்திற்காக இ-சிவிடி கியர்பாக்ஸ் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடம்பர வகை கார்களுக்கு பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே கர்நாடகா அரசியல்வாதி பிரமோத் வெல்ஃபையர் காரை வாங்கிய நிகழ்வு அமைந்திருக்கின்றது. இவரை போல இன்னும் பலர் தங்களின் குடும்பத்துடன் பயணிக்க இந்த அதிக இருக்கைக் கொண்ட காரை வாங்கி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








