WHO சொன்ன சரியாத்தான் இருக்கும்... இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஹெல்மெட் போட்டு போங்க...
உலக சுகாதார மையம் இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் எனப் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

கடந்த வாரம் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவில் சாலை விபத்து குறித்த பல விவாதங்கள் நடந்துவருகிறது. அதில் வாகனங்களைத் தரத்தை அதிகப்படுத்துவது முதல் சாலை விதிகளைப் பின்பற்றுவதுவரை ஏராளமான விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் டில்லி ஐஐடி மாணவர்களின் உதவியுடன் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கான சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள விபத்துக்களின் தரவுகளை வைத்து இப்படியான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வழிகாட்டுதலின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் முழு சைஸ் ஹெல்மெட் அணிய வேண்டும். அதுவும் ஹெல்மெட் அணிவது அதன் ஸ்டிராப்பை டைட்டாக அணிவதும் பொருந்தும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார வாட்ச்டாக்கின் படி இப்படியாக ஹெல்மெட் அணிந்து விபத்து நடந்தால் அந்த விபத்தில் படுகாயம் அடைவது 64 சதவீதம் குறையும் என்றும், மூளையில் அடிபடுவது 74 சதவீதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நேசனல் க்ரைம் ரெக்கார்டு பியூரோவின்படி கடந்தாண்டு இந்தியாவில் நடந்த ஒட்டு மொத்த விபத்துக்களில் 44 சதவீதம் 2 சக்கர வாகனம் இருக்கிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகம் காரணமாகவே நடந்துள்ளது. கடந்தாண்டு சாலை விபத்தில் இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானதில் மட்டும் ஆண்டிற்கு 70,000 பேர் மரணிக்கின்றனர். இது ஒட்டு மொத்த விபத்து மரணமான 1.6 லட்சம் பேர் அதாவது கிட்டத்தட்ட பாதி இருசக்கர வாகன விபத்தில் தான் நடக்கிறது.

இது குறித்து உலக சுகாதார மையத்தின் பாதுகாப்பு மற்றும் மொபிலிட்டி பிரிவின் நான் தரன் கூறும் போது :"தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் சாலை விபத்துக்களில் 43 சதவீதம் இருசக்கர வாகனங்களால் நடக்கும் விபத்துகு்கள் தான். இதற்காகத் தான் புதிய வழிகாட்டுதலை உலக சுகாதார மையத்திலிருந்து வெளியிட்டுள்ளோம். இதைப் பின்பற்றுவது மூலம் சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்களை 2030க்கும் வெகுவாகக் குறைக்க முடியும். மோசமான கட்டுமான வசதி, பாதசாரிகள், ஆகியவை விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதுவும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. அதனால் பைக், ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் பைக்குகளில் ஹெல்மெட் கட்டாயம் தேவை"

இந்த ஆய்விற்காக உலக சுகாதார மையத்துடன் சேர்ந்து பணியாற்றிய டில்லி ஐஐடி வல்லுநர்கள் கூறும் போது சாலை விபத்துக்களில் சுலபமாக பாதிப்பிற்குள்ளாவது பாதசாரிகள் தான். கடந்த 2013-2016 வரையில் பாதசாரிகளின் விபத்தில் சிக்குவது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் 12 சதவீதமான விபத்து மரணங்களில் பாதசாரிகள் விபத்து மரணம் இருக்கிறது.

உலக சுகாதார மையத்தின் கருத்தின் படி இந்த உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 பேர விபத்தில் மரணமடைந்து கொண்டே இருக்கின்றனர் ஆண்டிற்கு 13 லட்சம் பேர் மரணமடைகின்றனர். அதுவும் குறிப்பாக 5-29 வயதிற்குப்பட்டவர்கள் மரணமடைவதற்கு விபத்து தான் முக்கியமான காரணமாக இருக்கிறது எனக் கூறுகிறது.


Click it and Unblock the Notifications








