கார் போன்று பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட் வந்தாச்சு.. விலை உள்ளிட்ட முழு தகவல்கள்..!!

பைக் ரைடர்களை விபத்தில் காயமின்றி உயிர்தப்ப உதவும் ஏர்பேக் சூட் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

By Arun

பைக் ரைடர்களுக்கான பாதுகாப்பை முழுமையாக வழங்கும் உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான ஏர் பேக் ஜாக்கெட்கள் சந்தையில்அறிமுகமாகியுள்ளன.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

வாகன விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு சம்பவமாகும், விபத்துகள் எப்போது எப்படி நடக்கும் என்பதனை யாராலும் கணிக்க முடியாது. என்றாலும் விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

கார்களில் செல்வோருக்கே அதிகபட்ச பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது சந்தையில் கிடைத்துவருகின்றது. அதில் குறிப்பிடத்தக்கது ஏர் பேக் ஆகும்.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

ஏர் பேக் என்பது பலூன் போன்றதாகும், விபத்து நடக்கக்கூடிய சமயத்தில் அது உடனடியாக விரிந்து ஓட்டுநர் உள்ளிட்ட பயணிகளை காயம் இன்றி காக்க உதவுகிறது. இதன் மூலம் பெரிய விபத்துகளில் சிக்கினாலும் நம்மால் காயம் இன்றி உயிர்தப்ப முடியும்.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச பாதுகாப்பு உபகரணமே தலைக் கவசம் தான். (இதையும் பலர் அணிவது இல்லை என்பது தனிக்கதை). இதையும் தாண்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதாக பாதுகாப்பு உபகரணங்கள் சந்தையில் இல்லாமல் இருந்தது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

பொதுவாக காரில் பயணம் செய்பவரை விடவும் பைக்கில் செல்பவர்களுக்கே ஆபத்துகள் அதிகம். இதை கருத்தில் கொண்டு தற்போது ‘ஏர் பேக் சூட்' என ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது கார்களில் உள்ள ஏர் பேக் தொழிநுட்பத்திற்கு நிகரானது. அதே போன்ற பாதுகாப்பை இந்த ஏர் பேக் சூட் ரைடர்களுக்கு வழங்குகிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இந்த சூட் முன்னதாக ‘மோடோ ஜிபி' எனப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டு வந்தது. இதன் பயன்கள் பொதுமக்களும் கிடைக்க வேண்டும் என உயரிய எண்ணம் கொண்டு தற்போது சாமானியர்களுக்கு கிடைக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

செயல்படும் விதம்

செயல்படும் விதம்

ஏர் பேக் சூட் ரைடர்கள் அணிந்து கொள்ளும் ஜாக்கெட் வடிவில் உள்ளது. இதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார்கள் ரைடரின் ஒவ்வொரு அசைவையும் நொடிக்கு நொடி உணர்ந்து கொள்ளும் விதமானது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இந்த ஜாக்கெட் பைக்கில் கனெக்ட் செய்யும் விதமானது அல்ல, இதற்கென பிரத்யேகமாக பேட்டரி உள்ளது. இது ரீசார்சபிள் வகையிலானது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 மணி நேரங்களுக்கு அது ஜாக்கெட்டுக்கு சக்தி வழங்குகிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

பேட்டரி சர்க்யூட் சென்சார் அடங்கிய முக்கிய வன்பொருளுக்கு (Hardware) சக்தி அளிக்கிறது, அந்த வன்பொருளானது சிறிய அளவிலான காஸ் சிலிண்டர் ஒன்றுடன் இணைப்பு பெற்றுள்ளது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

ஏர் பேக் ஜாக்கெட் அணிந்திருக்கும் ரைடருக்கு ஆபத்து என்பதை உணரும் போது காஸ் சிலிண்டர் ஏர் பேக்கை விரிவடைய செய்கிறது. இந்த முழு செயல்முறையும் 25 மில்லி நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் நடக்கிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

எனவே ஜாக்கெட் அணிந்து விபத்தில் சிக்கும் ரைடர் கீழே அல்லது கூர்மையான பொருள் என எதன் மீது விழுந்தாலும் அவரை காயமின்றி இந்த சூட் பாதுகாக்கிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இந்த ஏர் பேக் ஜாக்கெட்டை பயன்படுத்தும் போது விபத்தில் சிக்கினாலும் முதுகுத்தண்டு, மார்பு, இடுப்பு, தோள்பகுதி போன்ற உடலின் முக்கிய பாகங்களை காயமடையாமல் பாதுகாக்கிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இதன் மூலம் ஹெல்மெட்டை விடவும் அதிகமான பாதுகாப்பை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த ஏர்பேக் சூட் அளிக்கிறது. உயிரிழப்பை மட்டுமல்லாமல் காயமின்றி பாதுகாப்பதால் இந்த சூட்டிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

பைக் ரைடர்களுக்கான ஏர் பேக் சூட்.. பயனுள்ள தகவல்கள்..!!

இந்த ஏர்பேக் சூட்டின் எடை 800 கிராம்கள் மட்டுமே. எடை குறைவானது என்பதாலும், ஸ்டைலிஷாக இருப்பதாலும் இது விரும்பி அணியும் உபகரணமாக மாறியுள்ளது.

மேலும் இந்த ஏர்பேக் சூட் தண்ணீர் உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் மழையில் கூட இதனை அணியலாம் என்பது சிறப்புமிக்கதாகும். இதன் விலை 1,200 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 77,000 ரூபாய் ஆகும். விலை சற்று அதிகம் என்றாலும் உயிரைக் காக்கும் இதற்கு விலை ஈடு இல்லை என்பது முக்கியமானதாகும்.

Most Read Articles
English summary
Read in Tamil about wearable airbag suit for bike riders.
Story first published: Tuesday, May 30, 2017, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X