விமான டிக்கெட்களில் இப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறாங்களா? இது ரொம்ப நூதனமா இருக்குதே!
விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வெப் செக்இன் செய்யும்போது சீட்டுகளைத் தேர்வு செய்ய தனி கட்டணம் வசூலிக்கிறதா என்பதை கண்காணிக்க சிவில் ஏவியேஷன் அமைச்சகம் புதிய விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதன் மூலம் விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலிக்கும் டிக்கெட் கட்டணம் குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிவில் ஏவியேஷன் அமைச்சகம் தனது பிரிவான நுகர்வோர் விவகார துறையை சில விமான நிறுவனங்கள் ஆன்லைன் செக்இன் முறையில் சீட்டுகளை தேர்வு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நுகர்வோர் விவகார துறையில் பிரத்தியேக குழு ஒன்று உருவாக்கப்பட்டு அந்தக் குழு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உள்ளது.

விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் செக்கிங் செய்யும் வெப்சைக்கின் முறையை பின்பற்றி வருகின்றனர். அதன்படி ஏர்லைன் நிறுவனங்கள் தங்கள் இருக்கைகளை கட்டணம் செலுத்தும் இருக்கைகளாக மாற்றி அதை பயணிகள் தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான கட்டண சீட்டுகளை தேர்வு செய்ய வேண்டும் என்றால் பயணிகள் டிக்கெட்களை புக் செய்யும்போது அதை தேர்வு செய்யும் ஆப்ஷனை வழங்க வேண்டும்.
அப்படி தேர்வு செய்யாத பயணிக்கு வெப் செக்இன் செய்யும்போது பாக்கி இருக்கும் அத்தனை சீட்டுகளையும் காண்பித்து அதில் பயணிகள் தேவைப்படும் சீட்டை இலவசமாக செலக்ட் செய்யும் ஆப்ஷனை வழங்க வேண்டும். வெப் செக்கிங் செய்யும்போது பயணிகள் கட்டண இருக்கைகளை தேர்வு செய்தால் அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையில் சில நிறுவனங்கள் தங்கள் வெப் செக்இன் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். அது விமான போக்குவரத்து துறையின் விதிக்கு புறம்பானது.

இதை கண்காணிக்க தற்போது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நுகர்வோர் விவகார துறை சார்பில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு இது கண்காணிக்கப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமானங்களுக்கு பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்திருந்தால் அவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் இன்று வரை சுமார் ரூபாய் 30 முதல் 40 கோடி மதிப்பிலான டிக்கெட்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு இந்த மாதம் மூன்றாம் வாரம் வரை கெடு விதிக்கப்பட்டு அதற்குள் டிக்கெட் கட்டணம் முழுவதையும் திரும்ப செலுத்தி விட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பல பயணிகள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமானங்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள் திரும்ப வரவில்லை என நுகர்வோர் மன்றத்தை நாடியுள்ளனர்.

இது குறித்து ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட் கொரோனா காலத்தில் புக் செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணம் முழுவதையும் திரும்ப செலுத்த விட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இதுவரை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஏவியேஷன் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி விமான அமைச்சகம் ஐந்து டிராவல் ஏஜென்சீஸ் மற்றும் ஆறு ஆன்லைன் டிராவல் தளங்கள் ஆகியவை தங்கள் வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்பி செலுத்தி விட்டதா என்று அறிக்கை கேட்டுள்ளது. அதற்கான பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அமைச்சகத்திடம் உள்ள தகவலின் படி இதுவரை ரூபாய் 1437 கோடி திரும்ப மக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுபோக சொற்ப பணம் மட்டுமே திரும்ப செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

வெப் செக்இன் மூலம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து விமான சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இது முற்றிலும் சட்ட வரைமுறைக்கு மீறியதாக கருதப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பல நிறுவனங்கள் தங்கள் வெப் செக்இன் முறையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான பயணிகள் பலருக்கும் இப்படியான ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. அவர்கள் தங்களுக்கு விமானத்தில் வசதியான இடம் வேண்டும் என்பதற்காக கூடுதல் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் வெப் செக்இன் செய்யும்போது இப்படியாக கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும். அடுத்த முறை நீங்கள் விமான பயணத்தில் இப்படியான கட்டணம் செலுத்துவதை தவிருங்கள்.


Click it and Unblock the Notifications









