நாலு செவுத்துக்குள்ள பண்ண வேண்டியத ஓட்ற காரில் செய்த பொண்ணு-மாப்பிள்ளை! விட்டா இதையே ஃபேஷன் ஆக்கீருவாங்க!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்களில் தற்போது சன்ரூஃப் (Sunroof) வசதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் கார்களில் சன்ரூஃப் வசதியை வழங்கி கொண்டுள்ளன. கேபினுக்கு உள்ளே சூரிய வெளிச்சம் மற்றும் புத்துணர்ச்சியான காற்று ஆகியவற்றை கொண்டு வருவதுதான் சன்ரூஃப் வசதியின் முக்கியமான நோக்கம்.
ஆனால் இந்த வசதியை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி கொண்டு பயணம் செய்வதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல முடியும். இப்படி செய்வது பாதுகாப்பான விஷயம் அல்ல. ஆனால் இதன் பின் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்பதை அறிந்திருந்தாலும் கூட, யாரும் மாறுவதாக இல்லை.

இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், 4 ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) கார்கள் அடுத்தடுத்து பயணம் செய்தை நம்மால் பார்க்க முடிகிறது.
யூடியூபர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானா மாநிலம் குர்கான் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அவர் கண்களில் சிக்கிய 4 ஹூண்டாய் வெர்னா கார்களில், 3 கார், பூக்கள் மற்றும் ரிப்பன்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
எனவே திருமணம் முடிந்த கையோடு, மணமகன் மற்றும் மணமகள் சென்ற கார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த 4 கார்களில், 1 காரில், மணமகன் சன்ரூஃப் வழியாக வெளியே உடலை நீட்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு முன்னால் சென்ற மற்றொரு காரில் மணமகள் சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி கொண்டுள்ளார்.
இந்த 2 கார்களுக்கும் முன்னால் சென்ற மற்றொரு காரின் சன்ரூஃப் வழியாக வெளியே இருந்த கேமராமேன், இதை எல்லாம் படம் பிடித்து கொண்டே பயணம் செய்கிறார். ஆக மொத்தத்தில் மிகவும் ஆபத்தான ஒரு போட்டோ ஹூட்-டை இவர்கள் நடத்தியுள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் உணர வேண்டும். கார் ஓடி கொண்டிருக்கும்போது, சன்ரூஃப் வழியாக வெளியே நின்று கொண்டு பயணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. இது ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் மற்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட தயக்கம் காட்டுவார்கள். இல்லாவிட்டால் இது ஒரு 'ஃபேஷன்' ஆக மாறி விடும் என்பதை காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வது நல்லது. உண்மையை சொல்வதென்றால், தற்போதே இது ஒரு 'ஃபேஷன்' ஆக மாறி விட்டது. எனவே விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது சிறந்தது.
பொதுவாக புதுமண ஜோடிகள் திருமண மண்டபங்களுக்கு உள்ளேதான் 'போட்டோ ஷூட்' நடத்துவார்கள் என்றும், ஆனால் இவர்களோ அங்கு செய்ய வேண்டிய விஷயத்தை, ஓடும் காரில் நடத்தியிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








