காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரத்தை கண்டுபிடிப்பதற்காக கணவர் செய்த காரியம், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பொருள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அது திருமண மோதிரமாகவோ அல்லது மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் வழங்கிய பரிசாகவோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு பொருள் தொலைந்து விட்டால் மனம் சந்திக்கும் கஷ்டத்தை வார்த்தைகளில் கூற முடியாது.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

அதேபோல் அப்படி தொலைந்து போன ஒரு முக்கியமான பொருள் மீண்டும் திரும்ப கிடைத்து விட்டால், மனம் அடையும் மகிழ்ச்சியையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியைதான் ஆண்ட்ரியாஸ் டிசோசாவும், அவரது மனைவியும் தற்போது அனுபவித்து கொண்டுள்ளனர். எதிர்பாராமல் தொலைந்து போன அவர்களின் காதல் நினைவு சின்னம் அவர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரை ஆண்ட்ரியாஸ் டிசோசா வைத்துள்ளார். சமீபத்தில் அவரது மனைவியின் திருமண மோதிரம், அவரது விரலில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி காருக்குள் விழுந்து விட்டது. நீண்ட நேரம் தேடிய பிறகும், திருமண மோதிரம் கண்ணில் தென்படவில்லை.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

எனவே மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஜீப் சர்வீஸ் ஒர்க் ஷாப்பிற்கு கார் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்த ஊழியர்கள் கார் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். காரின் இன்டீரியர் பகுதி முழுவதும் அகற்றப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருக்கைகளை கூட கழற்றி வெளியே வைத்து விட்டு திருமண மோதிரத்தை தேடியுள்ளனர்.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

ஊழியர்களின் விடாமுயற்சியின் பலனாக சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு, ஆண்ட்ரியாஸ் டிசோசாவின் மனைவியுடைய திருமண மோதிரம் மீண்டும் கிடைத்தது. காருக்கு உள்ளே இருந்த ஒரு இடுக்கில் மோதிரம் சிக்கி கொண்டிருந்தது. எப்படியோ ஊழியர்கள் ஒருவழியாக அதனை பத்திரமாக மீட்டு விட்டனர். இதன் காரணமாக ஆண்ட்ரியாஸ் டிசோசாவும், அவரது மனைவியும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

இந்த நிகழ்வு குறித்த தகவல்களை ஆண்ட்ரியாஸ் டிசோசா முகநூலில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: விலை மதிப்பற்ற எனது மனைவியின் திருமண மோதிரம் காருக்குள் தவறி விழுந்து விட்டது. நீண்ட நேர தேடுதலுக்கு பின் தானேவில் உள்ள ஜீப் சர்வீஸ் ஒர்க் ஷாப்பிற்கு காரை கொண்டு சென்றோம்.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

சுமார் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் மோதிரம் பத்திரமாக கிடைத்தது. இதற்காக சேவை மேலாளர் நிரஞ்சன் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ஆதரவு மற்றும் விடாமுயற்சியின் மூலமே, இது சாத்தியமானது. நாங்கள் மோதிரங்களை மீண்டும் ஒரு முறை மாற்றி கொண்டோம்.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

எங்கள் திருமணம் நடைபெற்றபோது கிடைத்த பேரின்பத்தை மீண்டும் ஒரு முறை அனுபவிக்கும் வாய்ப்பு இதன் மூலம் எங்களுக்கு கிடைத்தது. இவ்வாறு ஆண்ட்ரியாஸ் டிசோசா கூறியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 20) இந்த பதிவு முகநூலில் பதியப்பட்டுள்ளது. இதற்காக ஆண்ட்ரியாஸ் டிசோசாவை பெரும்பாலானோர் பாராட்டி வருவதுடன், தங்கள் வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

ஆண்டரியாஸ் டிசோசா தனது மனைவியையும், அவர் சார்ந்த நினைவுகளையும் எவ்வளவு நேசிக்கிறார்? என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். ஜீப் காம்பஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி கார்களில் ஒன்று. டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் ஜீப் காம்பஸ் போட்டியிட்டு வருகிறது.

காருக்குள் தொலைந்து போன மனைவியின் மோதிரம்... கண்டுபிடிக்க கணவர் செய்த காரியத்தால் மெர்சலான மக்கள்...

மோதிரத்தை கண்டுபிடிப்பதற்காக, கிட்டத்தட்ட அந்த காரை பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இதற்கு கணிசமான தொகை செலவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் செலவை எல்லாம் பொருட்படுத்தாமல், மோதிரத்தை மீண்டும் மனைவியின் கைகளுக்கு கொண்டு செல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு, ஆண்டரியாஸ் டிசோசா செயல்பட்டுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Wedding Ring Recovered In Jeep Compass Cabin After 2 Days Of Search - Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X