தரையிலும், தண்ணீரிலும் செல்லும் டாப் -10 நீர்நில கார்கள்!!

Written By:

ஹாலிவுட் சினிமாக்களில் தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வாகனங்களை கண்டு வியந்து போவதுண்டு. இதெல்லாம் கனவு வாகனங்களாக கற்பனையில் நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த ஆம்பிபியஸ் எனப்படும் நீர்நில பயன்பாட்டு வாகனங்கள் இரண்டாம் உலகப்போரின்போதிலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

அதன்பிறகு, 1960களில் இந்தவகை கார்கள் அல்லது வாகனங்களுக்கான வடிவமைப்பும் மேம்பட்ட காலமாக கூறலாம். இந்த நிலையில், சிறந்த 10 ஆம்பிபியஸ் கார்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

10.கிப்ஸ் குவாட்ஸ்கி

10.கிப்ஸ் குவாட்ஸ்கி

2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் ஓர் ஆல் டெர்ரெய்ன் வெகிக்கிள் எனப்படும் அனைத்து வித நிலவலமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய ஏடிவி. தண்ணீரிலும் செலுத்துவதற்கான வடிவமைப்பையும் பெற்றது.

கிப்ஸ் குவாட்ஸ்கி தொடர்ச்சி...

கிப்ஸ் குவாட்ஸ்கி தொடர்ச்சி...

இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் தரையிலும், தண்ணீரிலும் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்பதோடு, மணிக்கு 72 கிமீ வேகம் வரை செல்லும். வெறும் 5 வினாடிகளில் தரையிலிருந்து, தண்ணீருக்கு ஏற்ற தகவமைப்புகளை பெறும் வசதி கொண்டது. இந்த காருக்கு 300க்கும் அதிகமான காப்புரிமைகளை கிப்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆம்பிபியஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

09. ஆம்பிகார்

09. ஆம்பிகார்

1961ல் இந்த ஆம்பிகார் வெளியிடப்பட்டது. குவான்த் குழுமத்தால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ஆம்பிகார் அமெரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டது.

ஆம்பி கார் தொடர்ச்சி...

ஆம்பி கார் தொடர்ச்சி...

இதன் டிசைனும் மெச்சத்தகுந்ததாக இருந்ததுடன், மொத்தமாக 4,000 ஆம்பிகார்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று வரை ஒரு வெற்றிகரமான ஆம்பிபியஸ் காருக்கு உதாரணமாகவும் விளங்குகிறது.

08. கிப்ஸ் அக்வாடா

08. கிப்ஸ் அக்வாடா

கிப்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆம்பிபியன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் இது. இது ஒரு அதிவேக ஆம்பிபியஸ் காரும் கூட. 2003ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆம்பிபியஸ் காரில் ஒரு மணிநேரம் 40 நிமிடஹ்கள் 6 வினாடிகளில் ஆங்கில கால்வாயை ரிச்சர்ட் பிரான்சன் கடந்து சாதனை படைத்தார்.

கிப்ஸ் அக்வாடா தொடர்ச்சி...

கிப்ஸ் அக்வாடா தொடர்ச்சி...

தரையில் 160கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் 48 கிமீ வேகம் வரையிலும் செல்லக்கூடியது. வெற்றிகரமான தனிநபர் பயன்பாட்டு ஆம்பிபியஸ் வாகன மாடலாக இன்றளவும் புகழப்படுகிறது.

07.ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ்

07.ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரின்ஸ்பீடு நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார்களை ட்யூனிங் செய்வதில் பிரபலமானது. அதுதவிர, புதுமையான கான்செப்ட் வாகனங்களை வடிவமைத்து அசத்துவதிலும் கெட்டிகார நிறுவனம். 2004ம் ஆண்டு இந்த நிறுவனம் வடிவமைத்த ஆம்பி கார் மாடல்தான் ஸ்ப்ளாஷ்.

ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ் தொடர்ச்சி...

ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ் தொடர்ச்சி...

ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ் தரையில் மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மணிக்கு 50கிமீ வேகம் வரையிலும் செல்லக்கூடியது. இதன் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனம். மேலும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் உலகின் முதல் ஆம்பி காராகவும் கூறலாம்.

06. சீரோடர் லம்போர்கினி கூன்டாச்

06. சீரோடர் லம்போர்கினி கூன்டாச்

ஆம்பிபியஸ் வாகனங்களை வடிவமைப்பில் புகழ்பெற்ற சீரோடர் நிறுவனம் லம்போர்கினி கூன்டாச் காரை நீர்நில வாகனமாக மாற்றி வெளியிட்டது. இதனை நீர்நில வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற மைக் ரியான்தான் நீர்நில வாகனமாக மாற்றினார்.

சீரோடர் லம்போர்கினி தொடர்ச்சி...

சீரோடர் லம்போர்கினி தொடர்ச்சி...

லம்போர்கினி கூன்டாச் காரை நீர்நில வாகனமாக மாற்றுவதற்கு 3,000 டாலர் செலவானதாக தெரிவிக்கப்பட்டது.

05. கிப்ஸ் ஹம்டிங்கா

05. கிப்ஸ் ஹம்டிங்கா

கிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த ஆம்பிபியஸ் வாகனம் ஓர் 5 சீட்டர் மாடல். இந்த வாகனம் 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கிப்ஸ் அக்வாடா போன்றே இதுவும் ஓர் அதிவேக வாகனம். சுனாமி ஏற்படும் சமயங்களில் மீட்பு வாகனமாக பயன்படுத்தும் நோக்கோடு இதனை கிப்ஸ் வடிவமைத்து வெளியிட்டது.

கிப்ஸ் ஹம்டிங்கா தொடர்ச்சி...

கிப்ஸ் ஹம்டிங்கா தொடர்ச்சி...

இந்த நீர்நில வாகனத்தில் 350 பிஎச்பி பவரை அளிக்கும் சக்திகொண்ட வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த வாகனம் தரையில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் 65 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது.

04.ஹைட்ரா ஸ்பைடர்

04.ஹைட்ரா ஸ்பைடர்

இது ஒரு ஓபன் டாப் அதிவேக நீர்நில ஸ்போர்ட்ஸ் கார். இதனை கூல் ஆம்பிபியஸ் மேனுஃபேக்சரர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிமுகம் செய்தது. மிக நவீனமான வடிவமைப்பு கொண்ட இந்த நீர்நில ஸ்போர்ட்ஸ் காரின் சிறப்பம்சங்கள் வியக்க வைக்கின்றன. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

04

ஹைட்ரா ஸ்பைடர் தொடர்ச்சி...

ஹைட்ரா ஸ்பைடர் தொடர்ச்சி...

இந்த நீர்நில ஸ்போர்ட்ஸ் காரில் 40 எச்பி பவரை அளிக்கும் 6.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிரு்ககின்றன. தரையில் அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வேகத்திலும், தண்ணீரில் அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்திலும் செல்லும் ஆற்றல் படைத்தது.

03.டாபர்ட்டின் ஹைட்ரோகார்

03.டாபர்ட்டின் ஹைட்ரோகார்

அலுமினியம் பாடியுடன் கட்டமைக்கப்பட்ட ஆம்பிபியஸ் கார். தரையிலும், தண்ணீரிலும் செல்ல தயாராகும்போது இதன் தோற்றமே மாறும் வகையில் தொழில்நுட்பம் கொண்டது. மேலும், ஒரு சில வினாடிகளில் இந்த மாற்றங்கள் நிகழும்.

டாபர்ட்டின் ஹைட்ரோகார் தொடர்ச்சி...

டாபர்ட்டின் ஹைட்ரோகார் தொடர்ச்சி...

துருப்பிடிக்காத 304 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டமைக்கப்பட்டது. இந்த காரில் 762 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்ட செவர்லே மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

02.சீ லயன்

02.சீ லயன்

இதுவும் ஓர் அதிவேக மாடல். தரையில் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் போலவும், தண்ணீரில் ஸ்பீடு போட் போலவும் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வாகனத்தை விட் என்பவர் வடிவமைத்தார்.

சீ லயன் தொடர்ச்சி...

சீ லயன் தொடர்ச்சி...

தரையில் அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வேகத்திலும், தண்ணீரில் அதிகபட்சமாக 96 கிமீ வேகம் வரையிலும் செல்லும். இந்த கார் டிக் வெல்டு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டது.

01. வாட்டர்கார் பாந்தர்

01. வாட்டர்கார் பாந்தர்

கலிஃபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த ஆம்பிபியஸ் வாகனம். பார்ப்பதற்கு ஜீப் போல காட்சி தரும் இந்த வாகனம்

வாட்டர்கார் பாந்தர் தொடர்ச்சி...

வாட்டர்கார் பாந்தர் தொடர்ச்சி...

தரையில் மணிக்கு 80 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் 45கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது. இதன் தோற்றத்தை வைத்து ஆம்பிபியஸ் எஸ்யூவி என்று அழைக்கின்றனர்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary

 Are you aware of any vehicles that are able to swim? Here is a list of amphibious vehicles that really exist.
Story first published: Tuesday, March 24, 2015, 17:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark