ஞாயிற்றுக்கிழமையில கார் கழுவுறது குத்தமாய்யா... உலகின் விந்தையான சாலை விதிகள்!

சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடுமையான போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். சிறை தண்டனை, அபராதம் போன்ற விஷயங்கள் கூட தெரிந்த விஷயம்தான்.

ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமது போன்று தோன்றும் இந்த விந்தையான சாலை விதிகள் ஏதோ காரணத்தை வைத்து ஆரம்பித்து இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வாறு, உலகின் பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்படும் விந்தையான சில சாலை விதிகள் பற்றி இங்கே காணலாம்.

அவ்வளவுதான்...

அவ்வளவுதான்...

டென்மார்க் நாட்டில், காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னர், காரின் அடியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டுதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும். பார்க்காமல் யாராவது காருக்கு அடியில் இருக்கும்போது ஸ்டார்ட் செய்வது பெரிய குற்றமாக கருதப்படுகிறது. மீறினால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

டவுசர் பாண்டிகள் ஜாக்கிரதை

டவுசர் பாண்டிகள் ஜாக்கிரதை

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் டவுசர் அல்லது உள்ளாடையை கொண்டு காரை துடைப்பது குற்றமாக பாவிக்கப்படுகிறது.

மதுவுக்கு அனுமதி

மதுவுக்கு அனுமதி

கோஸ்டரிகா நாட்டில் வாகனத்தை ஓட்டும்போது மது அருந்துவது தவறில்லை. ஆனால், இரத்தத்தில் மது அளவு 0.75 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அடக்கி வாசிக்கவும்

அடக்கி வாசிக்கவும்

இத்தாலியின் எபோலி நகரில் கார் நகர்ந்து கொண்டிருக்கும்போது அல்லது சென்று கொண்டிருக்கும்போது முத்தமிடுவது குற்றமாக கருதப்படுகிறது. மீறி முத்தம் கொடுத்தால் 415 யூரோ அபராதம் செலுத்த வேண்டும். இதுக்கும் மேலேயும் ரொமான்ஸ் மூடு வருமா என்ன?

முகமூடிக்கு தடா

முகமூடிக்கு தடா

அமெரிக்காவின் அலபாமா நகரில் முகமூடி அணிந்து வாகனம் ஓட்டுவது குற்றமாகும். இதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கறுப்புக்கு கட்டுப்பாடு

கறுப்புக்கு கட்டுப்பாடு

டென்வர் நகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் கறுப்பு கார்களை ஓட்டுவதற்கு தடை அமலில் உள்ளது.

மேலாடை கட்டாயம்

மேலாடை கட்டாயம்

தாய்லாந்து நாட்டில் ஆண், பெண் யாராக இருந்தாலும் பைக், கார்களில் செல்லும்போது மேலாடை இல்லாமல் செல்லக்கூடாது. இது வாடகை கார்களுக்கும் பொருந்தும். இல்லையெனில், அபராதத்தை செலுத்த தயாராக இருக்க வேண்டும்.

 எச்சில் துப்பாதீர்

எச்சில் துப்பாதீர்

ஜார்ஜியா நாட்டிலுள்ள மேரிட்டா நகரில் கார் மற்றும் பஸ்களிலிருந்து எச்சில் துப்பக்கூடாது. அதேநேரத்தில், டிரக்குகளில் இருந்து எச்சில் துப்பலாமாம்.

கெட்டியாக பிடிச்சுக்கோ...

கெட்டியாக பிடிச்சுக்கோ...

சைப்ரஸ் நாட்டில் வாகனங்களை ஓட்டும்போது ஸ்டீயரிங் வீலை விட்டு கைகளை எடுக்கக்கூடாது. கைகளை விட்டு ஹாயாக ஓட்டினால், அபராதத்திற்கு தயாராக செல்ல வேண்டும்.

சேற்றை வாரி இறைத்தால்...

சேற்றை வாரி இறைத்தால்...

மழை நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் சேற்றை வாரி இறைத்து செல்வது ஜப்பானில் குற்றமாக கருதப்படுகிறது. இதற்காக, தனி சட்டமும் அமலில் உள்ளது.

அழுக்கு கார்

அழுக்கு கார்

ரஷ்யாவில் தூசி தும்பட்டிகள் படிந்து, அழுக்கான நிலையில் காரை சாலையில் ஓட்டுவது குற்றம். இதற்கு இந்திய மதிப்பில் ரூ.3,500 வரை அபராதமாக விதிக்கப்படும். அதற்காக, இப்படி பளபளன்னு துடைத்துத்தான் தினசரி எடுத்துச் செல்ல வேண்டும்.

அடப்பாவிகளா...

அடப்பாவிகளா...

சீனாவில், பாதசாரிகளுக்காக காரை திடீரென நிறுத்துவது குற்றமாம். பாதசாரிகள் குறுக்கே கடந்து கொண்டிருந்தால் கூட காரை நிறுத்தக்கூடாதாம்.

பகலிலும் முகப்பு விளக்கு

பகலிலும் முகப்பு விளக்கு

ஸ்வீடன் நாட்டில் பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். தவறினால், அபராதத்தை சந்திக்க நேரிடும்.

 என்ன காரணமோ... ?

என்ன காரணமோ... ?

பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில் 1 அல்லது 2 ஆகிய எண்களில் முடியும் நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் திங்கட்கிழமைகளில் சாலையில் இயக்க முடியாது.

உலகின் விந்தையான சாலை விதிகள்

உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Weird driving rules Around The World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X