மோட்டார் சைக்கிள்கள் மூலம் படைக்கப்பட்ட வினோத உலக சாதனைகள்...!!!
மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது என்பதே அலாதி இன்பம் தரக்கூடியதுதான். அப்படி மோட்டார் சைக்கிள்களை ரசிக்க கூடிய சிலர், மோட்டார் சைக்கிள்களை வைத்து சில விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகளை செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது என்பதே அலாதி இன்பம் தரக்கூடியதுதான். அப்படி மோட்டார் சைக்கிள்களை ரசிக்க கூடிய சிலர், மோட்டார் சைக்கிள்களை வைத்து சில விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகளை செய்துள்ளனர். இதுகுறித்த ருசிகரமான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டே நீண்ட பயணம்...!!!
இந்தியாவை சேர்ந்தவர் ரத்னேஸ் பாண்டே. இவர் தனது ஹோண்டா யுனிகார்ன் மோட்டார் சைக்கிளின் சீட்டில் நின்று கொண்டவாறே, 32.3 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இந்த பயணம் முழுவதும் அவர் சீட்டில் அமரவில்லை. ஹேண்டில் பாரையும் தொடவே இல்லை...!!! கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

49 சிசி மொபட்டில் நெடுந்தூர பயணம்...!!!
அமெரிக்காவை சேர்ந்தவர் லாய்டு வீமா. ஆர்கன் மாகாணத்தின் போர்ட்லேண்ட் பகுதியில் இருந்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு 49 சிசி மொபட்டில் சென்றார். அவர் கடந்த தூரம் 1894.1 கிலோ மீட்டர். குறைந்த சக்தி கொண்ட மொபட்டில் இவ்வளவு பெரிய தூரத்தை கடப்பது எவ்வளவு பெரிய சிரமம்? கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளை நீண்ட நேரம் தலையில் சுமந்தவர்...!!!
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரார்டு ஜெஸி. கடந்த 2015ம் ஆண்டு மே 15ம் தேதி, ஒரு சாதனையை நிகழ்த்தினார். தனது தலை மீது ஒரு மோட்டார் சைக்கிளை சுமந்து கொண்டு, 14.93 வினாடிகள் அப்படியே நின்றார். இந்த சாதனையை உடைக்க பலர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

ரயிலை இழுத்த மோட்டார் சைக்கிள்...!!!
அமெரிக்காவை சேர்ந்த 18 பேர் அலுவலக சேர்களில், ரயில் போல் வரிசையாக அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு சேர இழுத்து சென்றது.
மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுக்கப்பட்ட நீண்ட அலுவலக சேர் டிரெய்ன் இதுதான். கின்னஸ் நிறுவனம் இதற்கும் கூட உலக சாதனை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏனெனில் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை மக்கள் விளையாடதான் செய்கின்றனர்.

மற்றொரு இந்தியரின் சாதனை...!!!
இந்தியாவை சேர்ந்தவர் மோண்டிஸ்டர் அகர்வால். 110 கிலோ எடை கொண்ட ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு 8 படிகளில் மேலும் கீழும் இறங்கினார். இவருக்கு இப்படி ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? என தெரியவில்லை...!!! ஆனால் செய்துள்ளார்.

உலகின் நீண்ட மோட்டார் சைக்கிள்...!!!
பஜாஜ் டிஸ்கவர் 125தான் உலகின் மிக நீண்ட மோட்டார் சைக்கிள். குஜராத்தை சேர்ந்த பரத் சின் பர்மார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சில மாற்றங்களை செய்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, பஜாஜ் டிஸ்கவர் பைக்கின் பின்புற சக்கரம் கழற்றப்பட்டு விட்டது. அந்த இடத்தில் வெல்டிங் வைத்து மிக நீண்ட உலோக சட்டம் ஒன்று இணைக்கப்பட்டது. அதன்பின் கடைசியாக பின்புற சக்கரம் சேர்க்கப்பட்டு விட்டது. இதன்மூலம் இது உலகின் மிக நீண்ட மோட்டார் சைக்கிளாக மாறி விட்டது.

இப்படி உலகின் ஏதேனும் ஒரு மூளையில் எப்போதுமே ஏதாவது ஒரு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. மோட்டார் சைக்கிள்களை வைத்து செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனைகள் பெரும்பாலானவற்றில் இந்தியர்களின் பங்கு இருப்பது பெருமைபட கூடியதே...!!!


Click it and Unblock the Notifications