குட்டி கார்களுக்கான வாழ்நாள் வரியை குறைத்த அரசு! ஏழைகளின் வயிற்றில் பாலை வார்த்த மாநில அரசு...
சிறிய கார் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் சாலை வரியில் இருந்து விளக்கு அளிக்கும் விதமான நடவடிக்கையை இந்தியாவில் உள்ள ஓர் மாநில அரசு மேற்கொண்டிருக்கின்றது. அது எந்த மாநிலம்? என்ன மாதிரியான நடவடிக்கையை அது எடுத்திருக்கின்றது? இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவிலேயே முதல் மாநில அரசாக மேற்கு வங்க மாநில அரசு வாழ்நாள் சாலை வரியில் இருந்து சிறிய வகை கார்களுக்கு விளக்கு அளித்து இருக்கின்றது. இதற்காக அது புதிய வரி திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. மேற்கு வங்கம் மோட்டார் வாகனங்கள் வரி சட்டம் 2024 என்கிற பெயரிலேயே அது புதிய வரி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.

இதுவே சிறிய கார் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் வரியில் இருந்து வளக்கை அளிக்கின்றது. இந்த புதிய சட்டம், சிறிய கார் உரிமையாளர்கள் சாலைக்கான வரியை குறைவாக செலுத்தினாலே போதும் என்பதையே வலியுறுத்துகின்றது. இதுதவிர, முன்கூட்டியே வரி செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி வழங்கவும் இந்த புதிய சட்டத்தில் வழி வகைச் செய்யப்பட்டு இருக்கின்றது.
புதிய திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தனிநபர் கார், 14 பேர் வரை பயணிக்கும் வசதிக் கொண்ட தனி நபர் பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் மற்றும் டி-போர்டு பதிவுச் செய்யப்படாத வாகனங்கள் ஆகியவை முதலில் செலுத்த வேண்டிய வாழ்நாள் வரியை இதுவரை செலுத்தவில்லை என்றால், உடனடியாக இப்போது செலுத்த முடியும் என தெரிவித்து இருக்கின்றது.

7.5 சதவீத கட்டணத்துடன் அதை செலுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை மேற்கு வங்கம் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. இதுவே, வாகனத்தை பதிவு செய்யும்போதே செலுத்தி இருந்தால் வாகனத்தின் விலையில் இருந்து 5.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இது ஐந்தாண்டுக்கான வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த திருத்தத்திற்கு முன்னதாக கார் உரிமையாளர் 10ஆண்டுகள் வைத்திருந்தால், அந்த பழைய வாகனத்திற்கு 11சதவீதம் வரை சாலை வரி செலுத்த வேண்டும். இதையே தற்போதைய புதிய விதிகள் மாற்றியமைத்திருக்கின்றது. அதாவது, நீங்கள் பெட்ரோல் காரை வாங்க விரும்புகிறீர்கள் வைத்துக் கொள்வோம், மேலும், அதற்கு 15ஆண்டுகளுக்கு வாழ்நாள் வரியைச் செலுத்த திட்டமிட்டீர்கள் என்றால், அந்த வாகனத்தின் மதிப்பிலிருந்து 7.5சதவீதத்தை வாழ்நாள் வரியாக செலுத்திக் கொண்டு தடையில்லாமல் அந்த காரை ஓட்டிக்கொள்ள முடியும்.
அதுவே பழைய விதியாக இருந்தால் 15 ஆண்டுகளுக்கு பெட்ரோல் வாகனங்களை வைத்திருந்தால் 16.5 சதவீதம் வரை வரியைச் செலுத்த வேண்டும். இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளும் ஆயுட்காலம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காலக்கெடுவைத் தாண்டிய வாகனங்கள் சாலையில் நடமாட அனுமதியில்லை.
அதேவேளையில், அவை சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனில், முறையான அனுமதியைப் பெற்று அந்த வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. இந்த புதிய மாற்றத்தால் மாநிலத்திற்கான வருவாய் அதிகரிக்கும் என மேற்கு வங்க மாநில அரசு நம்புகின்றது.
மேலும், இந்த நடவடிக்கையால் வாகன உரிமையாளர்களும் அதிக பலனை அடைவார்கள் என மேற்கு வங்க அரசு நம்புகின்றது. இதுதவிர, வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கையும் இதன் வாயிலாகக் குறைக்க முடியும் என்றும் மேற்கு வங்க அரசு நம்புகின்றது. தனிநபர் சிறிய கார்களுக்கு மட்டுமல்ல டி-போர்டு வாகனங்களுக்கும் புதிய வாகன வரி சட்டத்தின் வாயிலாக சில சிறப்பு சலுகைகளை மேற்கு வங்க அரசு அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கு வங்க மாநில அரசின் புதிய வாகன வரி கொள்கை திட்டம் சிறிய கார் பயன்பாட்டாளர்களுக்கு ஆதரவாக அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் அம்மாநிலத்தில் சிறிய கார் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை லேசாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆமாங்க, மாநில அரசின் இந்த நடவடிக்கையால் குட்டி கார்களின் விலையைக் குறையும் சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








