தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

திங்கள் கிழமைகளில் டீசல் வாங்கப்போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை விட டீசலின் விலை 1 ரூபாய்க்கும் மேல் அதிகம் ஆனது. மேலும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் குறைந்து வருகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

எனவே டீசல் கார் வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் தனியார் பேருந்து தொழில் ஏற்கனவே விழி பிதுங்கி நிற்கும் நிலையில், மறுபக்கம் டீசல் விலை உயர்வும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணிக்க மக்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பதைதான் மக்கள் விரும்புகின்றனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

ஒருவேளை மக்கள் பயணிக்க முன்வந்தாலும் கூட, பேருந்துகளில் இவ்வளவு பயணிகளை மட்டும்தான் ஏற்றி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில்தான், டீசல் விலையும் உயர்ந்து தனியார் பேருந்து உரிமையாளர்களை பாடாய்படுத்தி வருகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

இதனால் கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அம்மாநில அரசு செவி சாய்க்காத காரணத்தால், வித்தியாசமான போராட்டம் ஒன்றை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

இதன்படி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் இனி திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்கள். வரும் ஜூலை 27ம் தேதி முதல் (திங்கள்) இந்த போராட்டம் தொடங்குகிறது. இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

எனவே கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கை குறித்து மாநில அரசு எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து தொழில் திவாலாகி விடும். தற்போது வரும் வசூலை வைத்துக்கொண்டு அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியவில்லை.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திங்கள் கிழமைகளில் டீசல் வாங்க மாட்டார்களாம்... ஏன் தெரியுமா?

எரிபொருள் செலவு, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் சம்பளம், காப்பீடு, வங்கி தவணை, பேருந்து பராமரிப்பு செலவு மற்றும் இதர செலவுகள் என எங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளன. இதை எல்லாம் தற்போது வரும் வசூலை வைத்துக்கொண்டு மேற்கொள்ள முடியவில்லை. எனவேதான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்'' என்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
West Bengal: Private Bus Owners Decided Not To Buy Diesel On Mondays - Here Is Why. Read in Tamil
Story first published: Friday, July 24, 2020, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X