உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை கண்ணாலே ஸ்கேன் பண்ணுவாங்க! விமான பணிப்பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
விமான பயணம் என்பது சுவாரஸ்யமானது. விமானத்தில் பல விதமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாகப் பயணிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்து கொடுக்கும் பணியில் விமானப் பணிப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயணிகளுக்குச் சேவை செய்வது மட்டுமல்ல பயணிகள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருக்கவும் அனைத்து பயணிகளின் பயணம் இனிமையாக அமையும் பணியாற்றுவார்கள்.
இப்படியாக விமானப் பணிப் பெண்கள் பயணத்தின் போது ஒவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு விதமான சேவைகளைச் செய்ய வேண்டும். சில பயணிகளுக்கு அதிகமாக விமானப்பணிப் பெண்களின் உதவி தேவைப்படாது, சிலருக்கு அதிகம் தேவைப்படும். இப்படியாக எந்தெந்த பயணிகளுக்கு என்னென்ன தேவை என்பதை விமானப் பணிப்பெண்கள் உணர்ந்து செயல்படுவார்கள்.

இப்படியாக ஒரு விமானப்பணிப்பெண் ஒரு பயணி விமானத்திற்குள் ஏறும் போது முதலில் வரவேற்கும் போது அந்த பயணியின் எந்த விஷயங்களை எல்லாம் கவனிப்பார்கள், எதை வைத்து என்ன முடிவுக்கு வருவார்கள் என விரிவாகக் காணலாம் வாருங்கள்.
காலணி
ஒரு பயணி முதலில் விமானத்திற்குள் ஏற வரும் போது அவரது காலணியைத் தான் கவனிப்பார்கள். அதை வைத்து அவர்கள் எதற்காக இந்த பயணத்தைச் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். உதாரணமாகத் தொழிற் சம்பந்தமாகப் பயணிப்பவர்கள் ஃபார்மல் ஷூக்களை அணிந்து செல்வார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள் அதற்குத் தகுந்த காலணிகளை அணிவார்கள். விளையாட்டு சம்மந்தமாக பயணிபவர்ககள் விளையாட்டு தொடர்பான ஷூக்களை அணிந்திருப்பார்கள். அதன் மூலம் பயணிகளை எளிதாக வகைப்படுத்திவிட முடியும்.
உடை/நடை
அடுத்தாக உடையைத் தான் விமானப் பணிப்பெண்கள் கவனிப்பார்கள் ஒருவர் அணிந்துள்ள உடையை வைத்தும் அவரது பயணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் அவர்கள் என்ன மாதிரியான நபர்கள் என்பதும் அவர்களது உடை மற்றும் நடையில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். அதை வைத்து அவர்கள் உங்களை அணுகும் முன்பு உங்களுக்காகத் தயாராகிவிட முடியும்.
உடல் மொழி
பொதுவாக ஒரு பயணி விமானத்திற்குள் நுழையும் போது அவர்களை விமானப் பணிப்பெண்கள் வரவேற்பார்கள். இப்படியாக வரவேற்கும் போது பதிலுக்குப் பயணிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைக் கவனிப்பார்கள். சில பதிலுக்கு வணக்கம் சொல்லுவார்கள். சிலர் அதைக் கண்டு கொள்ளாமல் செல்வார்கள். சிலர் உடல் மொழியிலேயே மதிக்காமல் செல்வதைக் காட்டுவார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பணியின் குணம் ஓரளவிற்குத் தெரிந்துவிடும்.
லக்கேஜ்
அடுத்தாக பயணிகள் விமானத்திற்குள் வரும் போது ஹேண்ட் லக்கேஜ் உடன் தான் வருவார்கள். அந்த லக்கேஜை பாதுகாப்பாக வைக்க வேண்டியது. விமானப் பணிப்பெண்களின் பொறுப்பு அதனால் அவர்கள் பயணிகள் என்ன விதமான லக்கேஜ் உடன் வருகிறார்கள். அதன் வகை என்ன? அதை எங்கு எப்படி வைக்க முடியும் என யோசிப்பார்கள்.
உடல் பருமன்
பொதுவாக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் சீட்களை எகனாமிக் வகுப்புகளில் நெருக்கமாக வைத்திருப்பார்கள். அந்த சீட்களில் புக் செய்த அதிக உடல் பருமன் கொண்ட ஒரு நபரால் அந்த சீட்டில் அமர்ந்து செல்ல சிரமமாக இருக்கும். இதனால் சீட்களை மாற்ற வேண்டியது வருமா என யோசிப்பார்கள்.
குடி போதை
சிலர் விமானத்திற்குள் வரும் போதே செம போதையில் வருவார்கள். பெரும்பாலும் விமானத்தில் போதை ஆசாமிகளால் தான் அதிகமாகப் பிரச்சனை ஏற்படும். இதனால் பயணிகள் யாராவது போதையில் வருகிறார்களா என செக் செய்வார்கள். ஒருவர் அதிகமாகப் போதையில் வந்தால் அவரை விமானத்திற்குள் அனுமதிப்பது குறித்து விமானத்தின் கேப்டனிடம் கேட்பார்கள். அவர் அனுமதி வழங்கிய பின்பே அனுமதிப்பார்கள்.
உடல் நிலை
சில பயணிகள் உடல் நலக்குறைவுடன் பயணம் செய்வார்கள். உதாரணமாகச் சிகிச்சைக்காகப் பயணம் செய்வார்கள். இப்படியான பயணிகளைக் கவனித்து அவர்களுக்குப் பயணத்தின் போது எந்த பிரச்சனையும் ஏற்படாத படி சில விஷயங்களை முன்னேற்பாடாகச் செய்துவிடுவார்கள். சில பயணிகள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான பயண விஷயத்தைக் கவனித்துக்கொள்வார்கள்.
இப்படியாக நீங்கள் விமானத்தில் ஏறும் போது உங்கள் உச்சி முதல் பாதம் வரை விமானப் பணிப் பெண்கள் ஸ்கேன் செய்வார்கள். இதற்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களை அவர்கள் கவனிப்பார்கள். இந்த தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் இதை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








