இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

ஏர் ஃபில்டர்களை சரியான நேரத்தில் மாற்றினால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

காரின் ஏர் ஃபில்டர்களை நம்மில் பலரும் கவனிப்பதே கிடையாது. ஆனால் அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும். மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால், உடனடியாக மாற்றி விடவும் வேண்டும். உங்கள் காரின் இன்ஜினுக்கு உள்ளே சிறிய துகள்கள் நுழைவதை, ஏர் ஃபில்டர்கள் தடுக்கின்றன.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

இதன் மூலம் இன்ஜினை அவை பாதுகாக்கின்றன. ஆனால் ஏர் ஃபில்டர்களால் கிடைக்கும் ஒரே ஒரு நன்மை இது மட்டும்தான் என நீங்கள் நினைத்து விட வேண்டாம். ஏர் ஃபில்டர்களை சரியான கால இடைவெளிகளில் மாற்றினால், உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

இன்ஜினின் ஆயுள் அதிகரிக்கும்

சேதமடைந்த ஏர் ஃபில்டர்கள் வழியாக சிறிய துகள்கள் இன்ஜினுக்கு உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சிலிண்டர்கள் மற்றும் பிஸ்டன்கள் போன்ற இன்ஜினின் உட்புற பாகங்களில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்படலாம். இந்த சேதத்தை சரி செய்ய வேண்டுமென்றால், அதற்கு அதிக செலவு ஆகும்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

ஏர் ஃபில்டர்களை சரியான நேரத்தில் மாற்றி விட வேண்டும் என்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. ஏர் ஃபில்டர்களை நீங்கள் சரியான நேரத்தில் மாற்றினால், இந்த பிரச்னையே வராது. இன்ஜின் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். ஒரு சுத்தமான ஏர் ஃபில்டர், வெளிப்புற காற்றில் இருக்கும் சிறிய துகள்களை பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய சிறிய துகள்கள், இன்ஜின் கம்பஸன் சேம்பரை (Combustion Chamber) அடைவதை ஏர் ஃபில்டர்கள் தடுக்கின்றன. இதன் மூலம் உங்கள் கார் இன்ஜின் அதிக செலவு வைப்பதற்கான வாய்ப்புகளை அவை குறைக்கின்றன. உங்கள் கார் இன்ஜின் தேவையில்லாமல் பெரிய செலவை வைக்க கூடாது என நீங்கள் விரும்பினால், ஏர் ஃபில்டர்களை சரியான நேரத்தில் மாற்றி விடுங்கள்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

அதிக மைலேஜ்

ஏர் ஃபில்டர்களை நீங்கள் சரியான நேரத்தில் மாற்றினால், உங்கள் காரின் மைலேஜ் அதிகமாகும். அத்துடன் ஆக்ஸலரேஷனும் மேம்படும். காரின் மைலேஜில் ஏர் ஃபில்டர்கள் எப்படி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அழுக்கு படிந்த அல்லது சேதமடைந்த ஏர் ஃபில்டர், உங்கள் காரின் இன்ஜினுக்கு உள்ளே செல்லும் காற்றின் அளவை கட்டுப்படுத்தி விடும்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

இதன் காரணமாக இன்ஜின் வேலை செய்ய சிரமப்படும். அத்துடன் அதிக எரிபொருளை நுகரும். ஆனால் ஏர் ஃபில்டரை நீங்கள் சரியான நேரத்தில் மாற்றி விட்டால், இந்த பிரச்னையே வராது. எனவே உங்கள் கார் சிறப்பான மைலேஜை வழங்கும் என்பதால், அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. எரிபொருள் விலை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், ஒவ்வொரு சொட்டும் முக்கியம்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

காற்று மாசுபாட்டை குறைக்கும்

அழுக்கான அல்லது சேதமடைந்த ஏர் ஃபில்டர்கள், நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இன்ஜினுக்கு உள்ளே செல்லும் காற்றின் அளவை குறைத்து விடும். இதன் காரணமாக உங்கள் காரின் ஏர்/ஃப்யூயல், அதாவது காற்று/எரிபொருள் சமநிலை மாற்றமடையும். காற்று/எரிபொருள் கலவையில் ஏற்படும் இந்த ஏற்றத்தாழ்வானது, உங்கள் காரின் எக்ஸாஸ்ட் உமிழ்வுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

இதன் காரணமாக உங்கள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். ஆனால் சரியான நேரத்தில் நீங்கள் காரின் ஏர் ஃபில்டர்களை மாற்றி விட்டால், இந்த பிரச்னையும் ஏற்படாது. இந்தியாவில் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசடைந்து வரும் இந்த நேரத்தில், ஏர் ஃபில்டர்களை சரியான நேரத்தில் மாற்றுவதன் மூலம், காற்று மாசுபாட்டை தவிர்க்க முடியும் என்பது அனைவரின் மனதிலும் இருக்க வேண்டிய விஷயம்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

ஏர் ஃபில்டரை எப்போது மாற்ற வேண்டும்?

பொதுவாக சேதம் அடைந்து விட்டால் உங்கள் காரின் ஏர் ஃபில்டரை மாற்ற வேண்டும். இருப்பினும் உங்கள் கார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒவ்வொரு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மைல்களுக்கும் ஏர் ஃபில்டர்களை மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது சுமார் 19 ஆயிரம் முதல் 24 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை ஏர் ஃபில்டர்களை மாற்ற வேண்டும்.

இதை மட்டும் செய்தால் அடிக்கடி பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! ஏர் ஃபில்டரை ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டோமே!

செலவு குறைவு, விரைவாக மாற்றி விடலாம்!

ஏர் ஃபில்டர்களை மாற்றுவது மிகவும் எளிமையான வேலைதான். எனவே அதனை விரைவாக செய்து விடலாம். அத்துடன் இதற்கான செலவும் கூட குறைவுதான். ஆனால் சந்தையில் நிறைய ஏர் ஃபில்டர்கள் கிடைக்கின்றன. எனவே உங்கள் காருக்கு ஏற்ற சரியான ஏர் ஃபில்டரை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. நிறைய நன்மைகள் இருப்பதால், தரமான ஏர் ஃபில்டர்களை தேர்வு செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 5, 2022, 23:03 [IST]
English summary
What are the benefits of replacing a car air filter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+