Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 2 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோலில் கலக்கும் அளவை அதிகரிக்கும் மத்திய அரசு... எத்தனால் எரிபொருளில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கா?
பெட்ரோலுடன் கலக்கப்படும் அளவை மத்திய அரசு அதிகரித்து வரும் நிலையில், எத்தனால் எரிபொருளின் பாதகங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை உயர்த்துவதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. வரும் 2022ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 10 சதவீதமாக உயர வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே சமயம் வரும் 2023 அல்லது 2025ம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உலகிற்கே முன்னோடியாக திகழ்கின்றன. 100 சதவீத தூய எத்தனாலை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும். அல்லது பெட்ரோலுடன் 10 சதவீதம், 20 சதவீதம், 85 சதவீதம் மற்றும் 95 சதவீதம் என எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்தும் பயன்படுத்தலாம்.

கரும்பு, மக்காச்சோளம் மற்றும் உருளைகிழங்கு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நன்மை அடைவார்கள். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம். மேலும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

எனவேதான் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. எத்தனாலின் மூலம் கிடைக்கும் நன்மைகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும் பலமுறை செய்திகளில் தெரிவித்துள்ளது. ஆனால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் சில பாதகங்களும் உள்ளன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவி செய்தாலும், எரிபொருளாக பார்த்தால் எத்தனால் அவ்வளவு திறன் மிக்கது கிடையாது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஆற்றல் செறிவு மிக்க எரிபொருட்களாக உள்ளன. ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது எத்தனாலின் ஆற்றல் அளவு மிகவும் குறைவு.

எனவே எத்தனால் எரிபொருள் எரிக்கப்படும்போது குறைந்த சக்தியை மட்டுமே வழங்கும். இதன் விளைவாக வாகனம் அதிக எரிபொருளை நுகரும். அத்துடன் குறைவான மைலேஜ் மட்டுமே கிடைக்கும். அத்துடன் 15 சதவீதத்திற்கும் மேலான அளவில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்தினால், பழைய வாகனங்களில் இன்ஜின் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் எத்தனால் பயன்பாடு அதிகரித்தால், தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அதனை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். அப்படியானால் விவசாய பயிர்களின் உற்பத்திக்கும் அதிகளவு நிலம் தேவைப்படும். இது எத்தனால் எரிபொருளின் ஒரு குறைபாடாக பார்க்கப்படுகிறது. இதுதவிர உணவு பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் இது ஒரு காரணமாக அமையலாம்.

அதாவது மக்காசோளம் மற்றும் உருளைகிழங்கு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை உயரலாம். எனவே எரிபொருள் தவிர உணவு தேவைக்காக அவற்றை சார்ந்துள்ளவர்கள் பாதிக்கப்படக்கூடும். இதுபோன்ற ஒரு சில பாதகங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், எத்தனால் எரிபொருளில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.