Just In
- 4 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 5 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 16 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 19 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Finance
டாலர் முதல் ஜி7 வரையில்.. அடுத்த வாரம் தங்கம் விலையினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்!
- Movies
எங்களோட வாழ்க்கை அவ்வளவு ஈசி கிடையாது.. வருத்தத்தை தெரிவித்த சிவாங்கி!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இவங்க மட்டும் இல்லேனா இந்தியாவில் விமானங்களே பறக்காது... யாரு இவங்க? அப்படி என்ன பண்றாங்க தெரியுமா?
விமான போக்குவரத்தை ஒழுங்கு முறைப்படுத்தும், சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் என்ன வேலை செய்கிறது. இது எப்படி இந்தியாவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனால் பயணிகள் எப்படிப் பயனடைகிறார்கள் எனக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் விமானச் சேவை என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் விமானங்களில் பயணிக்கிறார்கள். முக்கியமான வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமானங்களையே தேர்வு செய்கிறார்கள். இதனால் தொடர்ந்து விமானங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

சாலைகளில் நாம் வாகனங்களில் பயணித்தால் அவ்வப்போது விபத்துக்களைச் சந்திப்போம். ஆனால் வாகன விபத்துக்கள் பெரும்பாலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் நடுவானில் விமானங்கள் விபத்துக்களைச் சந்தித்தால் என்ன நடக்கும்? அவ்வளவுதான் விமானத்தில் உள்ள அத்தனை பேரின் உயிரும் காலி தான்.

அதனால் விமான விபத்துக்கள் என்பது நடக்கக்கூடாது எனப் பல முன்னேற்பாடு வசதிகள் செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் அது எல்லாம் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது பலருக்குத் தெரியாது. இந்தியாவில் தற்போது தனியார் நிறுவனங்களால் தான் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பலர் செலவுகளைக் குறைக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது.

இது பெற்றி தெளிவாகவும் அரசு எப்படிப் பொறுப்பாக விமான நிறுவனங்களைக் கண்காணிக்கிறது? என்னென்ன விஷயங்களை விமான நிறுவனங்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டும். இதனால் பயணிகளின் பயணம் எப்படிப் பாதுகாப்பாக அமைகிறது உள்ளிட்ட விஷயங்களைக் காணப்போகிறோம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது தனியார்களிடம் இருந்த இந்திய விமான போக்குவரத்தை எல்லாம் கடந்த 1953ம் ஆண்டு இந்தியா அரசுடைமையாக்கியது. அப்பொழுது முதல் இந்தியாவிற்குச் சொந்தமாக இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் விமானச் சேவைகளை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு இந்தியா தனது வான் வெளியைத் திறந்துவிட்டது. அதற்கான ஓப்பன் ஸ்கை என்று தனது கொள்கையை மாற்றியது. இதன்படி 1994ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் விமானச் சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் பயணிகள், விமானம், திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத விமானம், டாக்ஸி முறையிலான விமானம் திட்டம், சரக்கு விமானம் என எல்லாவற்றிற்கும் அனுமதி வழங்கியது.

அதுவரை தனிக்காட்டு ராஜாவாகச் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்கத் துவங்கிவிட்டனர். இதில் இந்தியா வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்திருந்தது.

இப்படியாக இந்தியாவில் விமானச் சேவை பெருகிய நிலையில் இந்த விமானங்கள் எல்லாம் பாதுகாப்பாக இயங்க இந்தியா சிவில் ஏவியேஷன் என்ற தனி அமைச்சகத்தையே அமைத்தது. அதில் இந்தியா விமானம் தொடர்பான விவகாரங்களை எல்லாம் அந்த அமைச்சகத்தின் மூலம் செய்தது. இதில் விமான விபத்துக்களைத் தவிர்க்க இந்தியா ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தது.

இதற்காக சிவில் ஏவியேஷன் அமைச்சகத்தின் கீழ் ஒரு இயக்குனரகத்தை உருவாக்கியது. இன்று வரை அந்த இயக்குனரகம் தான் இந்தியாவில் விமானச் சேவையை தொடர்ந்து கண்காணிப்பது, ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது. இன்று இந்தியாவில் விமானங்கள் எல்லாம் விபத்தில்லாமல் பணிக்கிறது என்றால் அதற்கு இந்த இயக்குனரகம் முக்கியமான காரணம் இதன் பணிகளைப் பற்றித் தான் இங்கே காணப்போகிறோம்.

இந்த இயக்குனரகத்தின் முக்கியமான பணி சிவில் ஏவியேஷனை ஒழுங்குபடுத்துவது மற்றும் கண்காணிப்பது தான். இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் எல்லாம் எந்த மாதிரியான விமானங்களைப் பயன்படுத்த வேண்டும். எப்படிப் பயன்படுத்த வேண்டும். விமான பணத்திற்கு முன்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும். பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் இந்த இயக்குனரகம் தான் விதிகளை வகுத்துள்ளது.

தற்போது ஒரு நிறுவனம் இந்தியாவில் தன் விமானச் சேவையைத் துவங்குகிறது என்றால் அந்நிறுவனம் இந்திய இயக்குனரகத்தின் அனுமதி பெற்ற விமானத்தைத் தான் பயன்படுத்த முடியும். இந்தியாவில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விமானத்திற்கும் இந்த இயக்குனரகம் தான் சான்று வழங்குகிறது.

அடுத்தாக விமானிகளும் இந்த இயக்குனரகத்தின் கீழ் தான் பதிவு செய்யப்படுகிறார்கள். விமானிகளுக்குச் சோதனை வைத்து லைசென்ஸ் வழங்குவது, இதே போல விமான பராமரிப்பு இன்ஜினியர்கள், விமான இன்ஜினியர்கள், ஆகியோருக்கு லைசென்ஸ் வழங்குவதும் இந்த இயக்குனரகம் தான். மேலும் இவற்றை அவ்வப்போது சோதனை செய்யவும் இந்த இயக்குனரகத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

இது மட்டுமல்ல விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளுக்கும் இந்நிறுவனம் தான் லைசென்ஸ் வழங்குகிறது.விமான நிலையங்களுக்கும் இந்த இயக்குனரகத்தின் அனுமதி தேவைப்படுகிறது. அது இருந்தால் தான் விமான நிலையமும் செயல்பட முடியும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் மட்டுமல்ல இந்தியாவிற்குச் சேவை வழங்கும் நிறுவனங்களும் தனியாக அனுமதி பெற வேண்டும். அதாவது இந்தியாவிற்கு வரும் விமானங்கள், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள், இந்தியாவிற்குள்ளேயே பயணிக்கும் விமானங்கள், இந்தியா வழியாகத் தரையிறங்காமல் வான் வழியே பயணிக்கும் விமானங்கள் என எல்லாவற்றிற்கும் தனித்தியாக அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த இயக்குனரகத்திற்கு விமான விபத்துக்கள் நடக்காமல் பாதுகாக்கும் பொறுப்பும் இருக்கிறது. விமான செயல்பாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களை ஆய்வு செய்து தவறு நடக்காமல் விதிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும் விமான பாதுகாப்பு மேலாண்மை விதிமுறை அமல்படுத்துவதும் இந்த இயக்குனரகத்தின் வேலை தான்.

இது மட்டுமல்ல விமான பயன்பாடு குறித்த சட்டங்கள் மற்றும் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் இந்த இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து மற்றும் இந்திய ராணுவ விமான போக்குவரத்து அமைப்புடனும் சேர்ந்து அவர்கள் கேட்கும் விஷயங்களையும் செய்து தர வேண்டும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் எவ்வளவு சத்த மாசு ஏற்படுத்துகிறது. எவ்வளவு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும் இதற்காகச் சர்வதேச அமைப்பு சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதை அமல்படுத்துவதையும் உறுதி செய்யும்.
-
மாருதி ஆல்டோ புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரப்போகுது... அது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு!
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!