லாரிகளில் சில வீல்கள் மட்டும் தரையில் படாமல் தூக்கிக்கொண்டிருக்குமே இது ஏன் தெரியுமா?
சில லாரிகளில் மட்டும் வீல்கள் தரையில் படாமல் அந்தரத்தில் தொங்குமே அதை கவனத்திருக்கிறீர்களா? இது என்ன வீல் ஏன் இது தரையில் படாமல் அந்தரத்தில் தொங்குகிறது?இதை ஏன் லாரிகளில் பொருத்தியுள்ளார்கள்? இது லாரிகளின் ஓட்டத்திற்காக பயன்படுத்தப்படுமா? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஏராளமான லாரிகள் சரக்கை ஏற்றி செல்வதை பார்த்திருப்போம். சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் பல விதமான லாரிகள் இருக்கிறது. இதில் ஒரு சில லாரிகளில் மட்டும்சில வீல்கள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் இருப்பதை பார்க்க முடியும். பெரும்பாலும் இது நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் காண முடியும்.

சில நேரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் லாரிகளிலும் இதை காணலாம். இப்படி லாரிகளில் ஏன் தேவையே இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் டயர்களை பொருத்திருக்கிறார்கள் இதனால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி நமக்குள் வரும். இந்த கேள்விக்கான விடையை தான் இங்கே காணப்போகிறோம்.
இப்படியாக தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கும் டயர்களுக்கு எக்ஸ்ட்ரா ஆக்ஸில் என பெயர். இது எப்பொழுதும் தரையில் படாமல் அந்தரத்தில் தூக்கிக்கொண்டு எல்லாம் இருக்காது. இது டிரைவரின் கண்ட்ரோலில் இருக்கும் ஆக்ஸில் இதை தேவைப்படும் நேரத்தில் மட்டும் லாரியின் டிரைவ் இறக்கி விடுவார். மற்ற நேரங்களில் ஏற்றி வைத்துக்கொள்வார்.

சில நேரம் லாரிகளில் கூடுதலான எடை உள்ள பொருட்களை ஏற்றி செல்லவேண்டிய நிலை வரும் இப்படியாக லாரிகளில் கூடுதல் எடையை ஏற்ற வேண்டும் என்றால் அதன் எடை தாங்கும் திறன் லாரியின் வீல்களுக்கு இருக்க வேண்டும். அப்படியாக நேரங்களில் இந்த எக்ஸ்ட்ரா ஆக்ஸிலை இறக்கிவிட்டால் லாரியின் எடையை இந்த வீலும் சேர்த்து தாங்கும்.
தற்போது பலருக்கு அதிக எடையை தாங்கும் என்றால் எப்பொழுதும் அந்த டயரை கீழே இறக்கியே வைக்க வேண்டியதானே என்ற கேள்வி வரும். பொதுவாக வாகனங்களில் ஆக்ஸில் அதிகமாக அதிகமாக அது அதிகமாக ரோட்டில் பதிந்து செல்லும் இதனால் வாகனத்தின் வேகம் குறையும், மைலேஜூம் குறையும்.
லாரிகளில் எப்பொழுதும் அதிகமான எடையை ஏற்ற வேண்டிய சூழ்நிலை வராது. அதனால் அந்த நேரத்தி்ல வாகனம் நல்ல மைலேஜ் குடுக்க வேண்டும் என்றால்இந்த எக்ஸ்ட்ராவ வீல்கள் தரையில் படாத வாறு ஏற்றி விட்டுக்கொள்ளலாம். இதனால் பெட்ரோல் செலவை குறைக்க முடியும். லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் செலவு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மோட்டார் வாகன சட்டத்திலும் எத்தனை ஆக்ஸில் கொண்ட லாரிகளுக்கு எவ்வளவு எடையை ஏற்றிச்செல்லலாம் என்ற வரையறை இருக்கிறது. அதன்படி தான் சரக்குகளை ஏற்றி செல்லும் போது ஆக்ஸில்களை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் டிராஃபிக் போலீசாரால் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் இதை பார்க்க அழகாகவும் வித்தியசமாகவும் இருக்க வேண்டும் என பொருத்தியிருப்பார்கள் என நினைத்திருப்பாம். சிலர் இதை ஸ்டெப்னி டயர் அதற்காக தான் இப்படி பொருத்தியுள்ளார்கள் என நினைப்போம். தற்போது பலருக்கு இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








