திருஷ்டி கயிறுகளை கட்டுவதால் அல்ல! லாரிகளுக்கு பின்னால் உள்ள கம்பிகள் தான் நம் உயிரை காப்பாற்றுகிறது! எப்படி?
லாரிகளுக்கு பின்னால் திருஷ்டி கயிறு கட்டப்பட்ட ஒரு கம்பி இருக்குமே அது எதற்காக இருக்கிறது. அதன் பயன்பாடு என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? நிஜமாலுமே இது உயிரைக் காக்கும் கம்பி தான். இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுவது லாரிகள்தான். கமர்ஷியல் வாகனங்களின் கண்டுபிடிப்பு மட்டும் இல்லை என்றால் இன்று உலகம் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கவே முடியாது. அப்படியான லாரிகளில் இன்று ஏராளமான லாரிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

அதே போல நெடுஞ்சாலைகளில் அதிகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அதுவும் லாரிகள் டிரக்கள்தான். இந்த வாகனத்தைப் பார்க்கும் போது அதன் பிரம்மாண்டமான லுக் சில குழந்தைகளைக் கூட பயமுறுத்தும் வகையில் இருக்கும். இன்று நாம் பார்த்தாலும் லாரிகள் எல்லாம் ஏதோ எமனின் வாகனமாக நமக்குத் தோன்றும் அதற்கு முக்கியமான காரணம் அடிக்கடி இந்த வாகனம் விபத்தில் சிக்குவது தான்.

பொதுவாக இரண்டு கார்கள் விபத்தில் சிக்கினால் உயிரிழப்பு ஏற்படுவது அரிது தான் காரிலிருந்தவர்களுக்கு படுகாயம் ஏற்படலாம். ஆனால் ஒரு காரும் ஒரு லாரி அல்லது டிரக் விபத்தில் சிக்கினால் காரில் வந்த அனைவரும் உயிரிழந்த சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் லாரியின் உயரம் தான் லாரி அதிக லோடுகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக அதிகமான உயரத்தில் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால் லாரிக்கு பொருத்தப்படும் வீல் உயரத்திற்குத் தான் சிறிய ரக கார்களே இருக்கின்றன. இதனால் லாரியுடன் சிறிய ரக கார்கள் மோதினால் அது லாரிக்குள் முழுவதுமாக சிக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து நடந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் சமீப காலமாக லாரிக்கும் முழு காரும் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதில்லை. ஏன் தெரியுமா?

இதற்கு முக்கிய காரணம் தற்போது லாரிகளில் பின் பகுதியிலும், பக்கவாட்டு பகுதிகளிலும், அதாவது லாரிக்குள் கார்கள் அல்லது மற்ற வாகனங்கள் செல்லும் அளவிற்கு எங்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் Under Ride Guards என அழைக்கப்படும் கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் விபத்து நடந்தாலும் அதனால் வாகனங்கள் லாரிக்குள் சென்று பெரும் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

நாம் இன்று லாரிகளை பார்க்கும் போது இப்படியான கம்பிகள் பல இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இது எதற்காக என்று நமக்கு என்று தெரியாமல் இருப்போம். பலருக்கு இந்த கம்பிகளைப் பார்த்தாலே ஏதோ விபத்து ஏற்படுத்தப்போகும் கம்பி என்ற பயத்தை ஏற்படுத்தும். அதில் திருஷ்டி கயிறு எல்லாம் சுற்றப்பட்டுப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். ஆனால் உண்மையில் இது நம் உயிரைக் காக்கும் கம்பி தான். அதற்குத் திருஷ்டி கயிறு காரணம் அல்ல வேறு ஒரு காரணம் இருக்கிறது.

இந்தியாவில் ஓடும் அனைத்து லாரிகளுக்கும் இந்த Under Ride Guards கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை RUPD (RUPD Bar or Rear Under Run Protection Device) எனவும் அழைக்கிறார்கள். தற்போது இது பெரும்பாலான லாரிகளில் வந்துவிட்டது. இதன் காரணமாகவே லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவம் குறைத்து வருகிறது.

இந்தியாவில் முன்பு நடந்த ஒரு ஆய்வில் இந்தியாவில் நடக்கும் 1000 விபத்துக்களில் ஒரு விபத்து இப்படியாக லாரிக்குள் வாகனம் சிக்கும் விபத்தாகத் தான் இருக்கிறது. ஆனால் இவ்வாறான விபத்துக்களில் அதிகமாக உயிரிழப்புகள் நடப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்பு தான். இந்த Under Ride Guards லாரிகளில் பொருத்தப்பட்டது. லாரி போக்குவரத்துத் துறையில் இருப்பவர்கள் பலருக்கே இந்த விஷயம் தெரியாது இந்த விஷயம் உங்களுக்குப் புதிதாகத் தெரிந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் இது போல ஏதாவது சுவாரஸ்யமான விஷயம் உங்களுக்குத் தெரியும் என்றால் அதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்


Click it and Unblock the Notifications








