பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சுற்று பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் உள்பட மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் போட்டியிட்டது. இதில் குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

இது இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடியதற்காக டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில், நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர் மற்றும் மொஹமது சிராஜ் என 6 இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக புதிய தலைமுறை தாரை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார்.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

அதன்படி கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்பிய இந்த 6 வீரர்களுக்கு 2020 மஹிந்திரா தார் அவர்களது பகுதியில் இருக்கும் டீலர்கள் மூலமாக டெலிவிரி செய்யப்பட்டது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

அவ்வாறு மஹிந்திரா தார் வாகனத்தை பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தனது தாரை சேறு சகதிகள் மிகுந்த ஆஃப்-ரோட்டில் இயக்கி பார்த்துள்ளார். இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணலாம்.

"நான் அழுக்கு சாலையில் குளிக்கிறேன்" என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் கற்கள் நிறைந்த கரடுமுரடான சாலையிலும், தண்ணீர் குட்டைகளிலும் சைனி அவரது தாரை ஓட்டுவதை பார்க்க முடிகிறது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

இதில் வாகனம் சேறினால் அழுக்கு மட்டுமே ஆகியுள்ளதே தவிர்த்து எந்த இடத்திலும் வாகனம் நிற்பதோ அல்லது ஸ்டார்ட் ஆகாமல் போவதோ அல்லது சேற்றில் சிக்கி கொள்வதோ நிகழவில்லை. வாகனத்தின் மீது படிந்த சேற்றையும் இறுதியில் சைனி கழுவுவது வீடியோவின் இறுதியில் காட்டப்பட்டுள்ளது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

சைனியின் மஹிந்திரா தார் கருப்பு நிறத்தை கொண்டது. இதனை டெலிவிரி எடுக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு இருந்ததன் காரணமாக நவ்தீப் சைனி இல்லை. அவரது குடும்பத்தினர் டெலிவிரி பெற்றனர்.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

ஆனால் சிறிது நேரத்திலேயே தாரை டெலிவிரி பெற்றது குறித்து மகிழ்ச்சியுடனும், மஹிந்திரா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தும் சைனி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவு செய்தார். இது 2020 மஹிந்திரா தாருக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்து போனது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

தார் வாகனம் தான் தற்போதைக்கு மஹிந்திராவின் அதிகப்படியான விற்பனை மாடலாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், இப்போது முன்பதிவு செய்ததால் இந்த வருட இறுதியில் தான் டெலிவிரி எடுக்க முடியும், சில வேரியண்ட்களுக்கு அடுத்த ஆண்டு வரையில் கூட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

சைனி தற்போது பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு, இந்த வாகனத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்கிற கேள்வியே எழ வாய்ப்பில்லை. இத்தகைய பெயரை பெறுவதற்காகவே திருத்தியமைக்கப்பட்ட சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் புதிய தார் உருவாக்கப்பட்டுள்ளது.

பரிசாக கிடைத்த வாகனம் தான் அதற்காக இப்படியா!! தாறுமாறாக மஹிந்திரா தாரை ஓட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்

2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, நேரடி-இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் என்ஹாவ்க் டீசல் என்ஜின் என இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தாரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.11.90 லட்சத்தில் இருந்து ரூ.13.75 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What cricketer Navdeep Saini is doing with his new Mahindra Thar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X