விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

விமானங்களில் யெல்லோ கார்டு வாங்கி விட்டால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

விமானங்களை பற்றிய பல்வேறு விஷயங்கள் நமக்கு தெரியும். ஆனால் நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் உள்ளது. அது யெல்லோ கார்டு (Yellow Card). ஆம், கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் அதே யெல்லோ கார்டை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். கால்பந்து விளையாட்டை போன்று விமானங்களிலும் யெல்லோ கார்டு வழங்கப்படுகிறதா? என நீங்கள் ஆச்சரியம் அடையலாம்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

ஆனால் இது உண்மைதான். விமானங்களில் பயணிகளுக்கு ஏன் யெல்லோ கார்டு வழங்கப்படுகிறது? அப்படி யெல்லோ கார்டு பெற்று விட்டால், அதற்கு அடுத்து என்ன நடக்கும்? என்பது போன்ற உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தைதான் நாம் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை, தவறு செய்யும் வீரர்களை எச்சரிக்கை செய்வதற்காக யெல்லோ கார்டு வழங்கப்படுகிறது. ஒரு வீரர் யெல்லோ கார்டு பெற்று விட்டால் உடனே களத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. இந்த எச்சரிக்கை மூலமாக, சம்பந்தப்பட்ட வீரர் மேற்கொண்டு தவறு செய்யாமல், போட்டியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

ஆனால் சிகப்பு கார்டு பெற்று விட்டால் உடனடியாக களத்தை விட்டு வெளியேற வேண்டும். இதனை வீரர்கள் செய்த தவறுக்கான தண்டனையாக கருதலாம். கிட்டத்தட்ட இதே நடைமுறைதான் விமானங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் விமானங்களில் ரெட் கார்டு கிடையாது. யெல்லோ கார்டு மட்டும்தான் வழங்கப்படும்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

முரட்டுத்தனமாகவும், தவறான முறையிலும் நடந்து கொள்ளும் பயணிகளுக்கு விமான பணிப்பெண்கள் யெல்லோ கார்டுகளை வழங்குவார்கள். இந்த யெல்லோ கார்டு நடைமுறை புதியது கிடையாது. சுமார் 25 வருடங்களாக விமானங்களில் இந்த யெல்லோ கார்டு நடைமுறை அமலில் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் பெரும்பாலானவர்களுக்கு இந்த நடைமுறை பற்றி தெரிவதில்லை.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, கால்பந்து விளையாட்டை போன்றே, விமானங்களிலும் தவறு செய்யும் பயணிகளை எச்சரிக்கை செய்வதற்காகதான் யெல்லோ கார்டு வழங்கப்படுகிறது. யெல்லோ கார்டு வழங்கப்பட்ட பிறகும் தவறான நடத்தை தொடர்கிறது என்றால், சம்பந்தப்பட்ட பயணி அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

விமானம் தரையிறங்கிய பிறகு அந்த பயணி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படலாம். அல்லது விமான நிறுவனங்கள் அந்த பயணி மேற்கொண்டு தங்கள் விமானங்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கலாம். விமானத்தின் ஊழியர்களிடமோ அல்லது பயணிகளிடமோ முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், யெல்லோ கார்டு வழங்கப்படலாம்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

அதேபோல் விமானம் பறக்கும் நடைமுறைகளில் தேவையில்லாமல் எந்த இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உடனடியாக யெல்லோ கார்டு வழங்கப்பட்டு விடும். எனவே விமானத்தில் மற்ற பயணிகளுடனும், விமான பணிப்பெண்களுடனும் நீங்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வது முக்கியமானது. இல்லாவிட்டால் யெல்லோ கார்டு பிரச்னையை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

விமானத்தில் பயணிகளுக்கு என்று சில உரிமைகள் இருக்கின்றன. நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அந்த உரிமைகள் என்னென்ன? என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் பெற்று கொள்வதில் எந்த பிரச்னைகளும் இல்லை. ஆனால் விதிமுறைகள் மீறப்பட்டால், யெல்லோ கார்டு பிரச்னையை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

உதாரணத்திற்கு விமான பணிப்பெண்களிடம் நீங்கள் நட்பாக நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக விமான பணிப்பெண்களை கட்டியணைப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. அவர்களின் சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால், முகத்தில் புன்னகையுடன் கண்ணியமான முறையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

அதேபோன்று இரண்டு பயணிகள் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்றால், 2 பேருக்குமே யெல்லோ கார்டு வழங்கப்படலாம். எனவே உங்களுடன் யாராவது சண்டைக்கு வந்தால், அவர்களுடன் மல்லுக்கட்டாதீர்கள். அதற்கு பதில் கூலாக விமான ஊழியர்களுக்கு அந்த பிரச்னையை தெரியப்படுத்துங்கள். மேற்கொண்டு நடக்க வேண்டியதை அவர்கள் கவனித்து கொள்வார்கள்.

விமானங்களிலும் யெல்லோ கார்டு இருக்கா! இதை வாங்கீட்டா என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை கேள்விபட்டதே இல்லயே

அதேபோல் மாஸ்க் அணியாமல் வரும் பயணிகளுக்கும் கூட விமான பணிப்பெண்கள் தற்போது யெல்லோ கார்டுகளை வழங்குகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக விதிமுறைகளை நன்றாக தெரிந்து கொண்டு, அவற்றை முழுமையாக பின்பற்றுங்கள்.

Article Published On: Friday, September 16, 2022, 14:26 [IST]
English summary
What do yellow card mean in airplane
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+