லாரிகளுக்கு பின்னால் "Horn Ok Please" என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

லாரிகளுக்கு பின்னால் "Sound Horn", "Horn Ok Please" என விதவிதமாக எழுதுகிறார்களே அதற்கு என்ன அர்த்தம்? இதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இன்று நாம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது எல்லாம் நாம் அதிகம் பார்க்கும் வாகனங்கள் லாரிகள், ஒரு ஊரிலிருந்து பொருட்களை எற்றி மற்ற ஊருக்குக் கொண்டு செல்வதில் லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலகில் லாரிகளின் வரலாறு மிகவும் பெரியது. உலகப்போரில் ராணுவ வீரர்களை அழைத்துச் சென்றதில் துவங்கி இன்று இந்தியாவின் பொருளாதாரத்திற்கே லாரிகள் முக்கியமானது.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இன்று இந்தியாவில் லாரிகள் ஒரு நாள் இயங்கவில்லை என்றாலும் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும். பல ஆயிரம் கோடி பொருட்கள் தேக்கம் ஏற்படும். அதனால் இந்தியாவில் லாரிகளின் ஓட்டம் மிக முக்கியமானது. இதனால் தான் நெடுஞ்சாலைகள் கட்டமைக்கும் போதே அதன் மூலம் ஒரு நாளுக்கு எத்தனை கமர்ஷியல் வாகனங்கள் இயங்கும் என்ற ஆய்வுகள் எல்லாம் நடக்கும்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இந்நிலையில் நாம் எல்லோரும் சாலைகளில் செல்லும் போது லாரிகளுக்கு பின்னால் செல்லும் போது நாம் ஒரு விஷயத்தை பார்த்திருப்போம். எல்லா லாரிகளுக்கு பின்னாலும் "Sound Horn", "Horn Ok Please", "Blow Horn", "O Horn Please K" என ஒவ்வொரு வாகனத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டிருக்கும். இது ஏன் எழுதப்பட்டுள்ளது? இதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன? இதற்கு என்ன அர்த்தம் எனக் காணலாம் வாருங்கள்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இப்படியாகச் சரக்கு வாகனங்களுக்குப் பின்னால் இப்படியாக எழுதும் பழக்கம் எந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது என்கிற தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு பொதுவாகக் கூறப்படும் காரணம் ஒன்று இருக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் கட்டமைக்கப்படும் போது சாதாரண ஒன்றைச் சாலைகள் மட்டுமே இருந்தன.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

அப்பொழுது ஒரு லாரி அல்ல நீளமான டிரக் சென்றால் பின்னால் செல்லும் வாகனங்கள், அந்த லாரி அல்லது டிரக் வழிவிட்டால் மட்டுமே வாகனத்தை முந்தி செல்ல முடியும். பொதுவாகச் சிறிய வாகனங்களில் என்றால் அன்று வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட்கள் நீளமாக உயரமாக இருக்கும் லாரிகளில் அமர்ந்திருக்கும் டிரைவர்களுக்கு தெரியாது.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

அதனால் பின்னால் வரும் வானகங்கள் முன்னால் செல்ல வேண்டும் என்றால் ஹாரன் சத்தம் எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் பின்னால் வாகனம் வருவது லாரிகளில் இருக்கும் டிரைவர்களுக்கு தெரியும். அப்பொழுது உள்ள லாரிகளில் பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்கப் பெரிய கண்ணாடிகளும் தொழிற்நுட்ப வசதிகளும் கிடையாது.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இதனால் இது எழுதப்படுவது ஒரு பழக்கமாக இருந்தது. இது பொதுவாக நீளமான வாகனங்களில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் சரக்கு ஏற்றிச் செல்லும் சிறிய வாகனங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்காது. இது குறித்துக் கடந்த 2015ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாகனங்களில் பின்னால் இப்படி எழுத வேண்டாம் இதனால் சாலைகளில் ஒலி மாசு ஏற்படும் என உத்தரவிட்டிருந்தது.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

அதாவது அன்றைய காலகட்டங்களில் சாலை கட்டுமான வசதிகள் முறையாக இல்லாததால் வாகனங்களை முந்தி செல்லும் போது ஹாரன் சத்தம் தேவைப்படும் என்பதால் எழுதப்பட்டது. ஆனால் இன்று நெடுஞ்சாலைகள் 6-8 என லேன்களில் வந்துவிட்டது. மேலும் டிரக்களிலும் மற்ற வாகனங்களிலும் தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டதால் இது தேவையில்லை என கோர்ட் உத்தரவிட்டது. இருந்தாலும் அது ஒரு வழக்கமான நடைமுறையாக புதிய டிரக்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்களே இதைச் செய்து விடுகின்றனர்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இப்படியாகச் சத்தம் எழுப்புவதற்காக "Sound Horn", "Horn Please", "Blow Horn" ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் சில வாகனங்களில் OK என்ற ஆங்கில சொல் இதில் இடம் பெற்றிருக்கும். இதற்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் ராணுவ வீரர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டிச் செல்ல டிரக்கள் தான் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுது மண்ணென்னையில் இயங்கும் டிரக்கள், பெட்ரோலில் இயங்கும் டிரக்கள் என இரண்டு விதமான டிரக்கள் பயன்படுத்தப்பட்டன.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இதில் மண்ணெண்ணெய்யில் இயங்கும் டிரக்களை அடையாளம் காண டிரக்களின் பின்னால் OK என எழுதினர். இதற்கு அர்த்தம் on Kerosene அதாவது மண்ணெண்ணெய்யில் இயங்கும் வாகனம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதுவே ஒரு ஃபேஷனாக மாறி இன்று இந்தியாவின் மண்ணெண்னையில் இயங்கும் வாகனங்களே இல்லை என்கிற போதும் OK என்பதற்கு அர்த்தமே தெரியாமல் இதை எழுதி வருகின்றனர்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

இதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. கடந்த 20ம் நூற்றாண்டில் டாடா ஆயில் மில்ஸ் என்ற நிறுவனம் OK என்ற பெயரில் புதிய சோப் ஒன்றைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இந்த சோப்பிற்கு OK எனப் பெயர் வைத்து அதற்குத் தாமரை படத்தை லோகோவாகவும் வடிவமைத்திருந்தனர். டாடா குழுமம் அப்பொழுது அந்த சோப் குறித்து மக்களுக்குப் பிரபலமாக்கும் வகையில் டிரக்களின் பின்னால் OK என எழுதப்படும் போது அந்த தாமரை லோகோவையும் சேர்த்து வரையும்படி டிரக் ஓனர்களிடம் பேசினர்.

லாரிகளுக்கு பின்னால் Horn Ok Please என எழுதப்பட்டுள்ளதே அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா . . .

அப்பொழுது தான் OK என்ற சொல்லுக்கு அருகே தாமரை லோகோவை வரையத் துவங்கினர். இன்று அந்த சோப்பே இல்லை இருந்தாலும் டிரக்களில் அதற்கு அர்த்தம் தெரியாமல் இன்றும் பலர் லோகோவை வரைந்து வருகின்றனர். இது முற்றிலும் இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாததது தான். இந்த இடம் மக்கள் பார்வையில் படும்படியான இடம் என்பதால் இந்த இடத்தில் வேறு பயனுள்ள தகவல்களை வரைவது பயனுள்ளதாக இருக்கும்.

Article Published On: Friday, August 26, 2022, 11:43 [IST]
English summary
What Does sound Horn OK Please written On backside of Trucks Mean
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+