இந்தியாவை நாம எங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கோம் பாத்தீங்களா! ஒவ்வொருத்தரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது!
உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் நம் இந்திய நாடு 28.7 புள்ளிகளைப் பெற்று, 111-வது இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்தமாக 125 நாடுகளின் பட்டியலிலேயே இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. இந்த புள்ளி விபரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் இந்தியா, ஏதோ ஒரு சிலரிடம் விபரங்களைக் கேட்டுவிட்டு இந்த இடத்தை கொடுத்து இருப்பதாக தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கின்றது.
அதேவேளையில், சென்ற ஆண்டு இதே நமது இந்தியா 107வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மற்றுமொரு அதிர்ச்சியான தகவல் இந்தியாவை பற்றி வெளியாகி இருக்கின்றது. "இந்தியாவை நாம எங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கோம் பாத்தியா" என கேட்க செய்யும் அளவிற்கு இந்த தகவல் அமைந்து உள்ளது.

Source: TOI அதாவது, ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு உயிர் இந்தியாவில் சாலை விபத்து காரணமாக பலியாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்து காரணமாக பலியானோரின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களே தற்போது வெளியாகி இருக்கின்றது.
இந்த ஒற்றை ஆண்டில் மட்டும் சுமார் 1.68 லட்சம் பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். இதை ஒரு நாளுக்கு என கணக்கிட்டு பார்த்தால், ஒவ்வொரு நாளும் சாலை விபத்தில் 462 பேர் இறந்திருக்கின்றனர் அல்லது ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்தால் இறந்திருக்கின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகம் ஆகும். அதேவேளையில், கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 11.5 சதவீதமாக உள்ளது. ஆகையால், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியானோர் சாலை விபத்தால் இறந்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் விபத்தைத் தவிர்க்கின்றன விதமான முயற்சிகளையே அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது.

இருப்பினும், இந்தியாவில் சென்ற 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியானோர் விபத்தில் இறந்துள்ளனர். ஆகையால், அரசின் நடவடிக்கைகள் தோல்வியுற்றிருக்கின்றதா என்கிற சந்தேகமே இப்போது பலருக்கு எழும்பி இருக்கின்றது. விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மட்டுமல்ல, விபத்தால் பெரும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
சென்ற 2021 ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.84 லட்சமாக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் அது 4.43 லட்சமாக உயர்ந்து உள்ளது. இது சுமார் 15 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு விபத்துகளால் அரங்கேறும் உயிரழப்புகளும், காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவது கவலையளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
இந்த விஷயத்தில் குறை கூறுவதற்கு பதிலாக இந்தியர்களாகிய நாம்தான் நம் மீதே குறைகூறிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முறைபடி கடைப்பிடித்தாலே விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். இதைச் செய்யும் தவறிய பட்சத்திலேயே நாட்டில் அரங்கேறிய விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகளாகிய நாம் ஒவ்வொருவரும் போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம் என உறுதிப் பூண்டால் மட்டுமே இந்தியாவை வரும் காலத்திலாவது விபத்தில்லா நாடாக அல்லது குறைவான விபத்தை மட்டுமே சந்திக்கும் நாடாக நமது இந்தியாவை மாற்ற முடியும். ஏதேதோ விஷயங்களுக்கு கோஷங்களையும், குரலையும் எழுப்பிக் கொண்டிருக்கும் நாம் இந்த விஷயத்திலும் நம்முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும்.


Click it and Unblock the Notifications
