படகு திடீரென மூழ்க நேரிட்டால் என்ன செய்வது? தயவு செய்து இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!

படகு மூழ்க நேரிட்டால் நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதற்கான விழிப்புணர்வு தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். மேலும், சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே விபத்துகள் ஏற்படும், சாலை போக்குவரத்து மட்டுமே ஆபத்தானது என நினைத்தால் நம்முடைய அறியாமை. அதிக பாதுகாப்பானது என கருதப்படும் கப்பல்களிலும் விபத்தினால் கடுமையான இழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சாலை போக்குவரத்தைக் காட்டிலும் அதிக ஆபத்துகளைக் கொண்ட கப்பல் பயணங்கள் இருக்கின்றன.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

எனவேதான் எதிர்பாராத விதமாக ஏற்படும் கப்பல் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்கிற வழிக்காட்டுதல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். குறிப்பாக, நாம் சென்றுக் கொண்டிருந்த படகு திடீரென மூழ்க நேரிட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

புகழ்பெற்ற அமெரிக்க கடலோர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி கொடுத்த வழிக்காட்டுதல்களின் அடிப்படையிலேயே இந்த தகவலை இங்கு வழங்கியிருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

கப்பல் பயணத்தின்போது இருக்க வேண்டிய கருவிகள்:

கப்பல் அல்லது படகில் உங்கள் பயணத்தை மேற்கொள்ளும்போது லைஃப் ஜாக்கெட்டுடன் சில முக்கிய கருவிகள் இருப்பது மிக முக்கியமானது. குறிப்பாக, ஒளிரும் மற்றும் மின்னும் தன்மைக் கொண்ட பொருட்கள் உங்கள் வசம் இருப்பது நல்லது. இல்லையெனில் ஸ்போர்ட்ஸ் வாட்சை நீங்கள் பயன்படுத்துவராக இருந்தாலும் சரி. இந்த வாட்சில் உதவி கோருவதற்கான பல வசதிகள் உள்ளன. மேலும், காணாமல் போனபவர்களைக் கண்டுபிடிக்க உதவக் கூடிய ஜிபிஎஸ் அம்சமும் அதில் இருக்கின்றது.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

ஆகையால், ஒரு வேலை பயணத்தின்போது உங்களுடைய படகு அல்லது கப்பல், விபத்தில் சிக்குதல் அல்லது காணாமல் போகுமானால் இந்த கருவியைக் கொண்டு கண்டுபிடிக்க முடியும். இந்த வாட்ச் மட்டுமின்றி உங்களிடத்தில் ஃபிளாஷ் லைட்ஸ், மிர்ரர்கள், விசில்கள், ஃபிளார்கள், ரெட்ரோ ரெஃப்ளெக்டிவ் டேப்புகள் உள்ளிட்ட அம்சங்களையம் கை வசம் வைத்திருப்பது நல்லது. இவை ஹெலிகாப்டரைக் கொண்டு மீட்புப் படையினர் உங்களைத் தேடும் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

விஎச்எஃப் சேனல் 16:

நீங்கள் பயணிக்கும் படகில் ரேடியோ இருக்கும் பட்சத்தில் அதைகூட உங்களை பாதுகாக்கும் கருவியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, உதவியை கேட்பதற்கான கருவியாக ரேடியோவை பயன்படுத்திக் கொள்ள முடியும். சர்வதேச உலக சந்தையில் இதற்கென பிரத்யேகமாக சேனல் 16-ஐ தயார் செய்திருக்கின்றனர். படகில் பயணிப்பவர்களுக்கு என்றே சில உலக நாடுகள் இந்த சேனலின் அலைவரிசையை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றது. இதை ட்யூன் செய்யும் பட்சத்தில் உதவிக்கான கரங்கள் தானாக தேடி வரும்.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

படகிற்கு அருகிலேயே தங்கியிருக்க முயற்சி செய்யுங்கள்:

படகில் நீண்ட தூரம் பயணிக்க நேரிட்டால் கரை கண்களில் படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மேலும், அவ்வளவு நீண்ட தூரத்தை நீந்தியே சென்றடையுமா என்பதும் கேள்விக் குறியே. ஆகையால், உதவிக் கிடைக்கும் வரை கவிழ்ந்த படகின் அருகில் அல்லது அதன் மீது ஏறி காத்திருப்பது நல்லது. அதன் மீது ஏறி இருக்கும்போது உங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

உங்களை படகு மிகப் பெரிய உருவம் கொண்டிருக்கும் என்பதால் மீட்பு பணியாளர்களால் அதை எளிதில் கண்டறியும். இவ்வாறு செய்யாத காரணத்தினாலேயே பலர் இதற்கு முன்னதாக தொலைந்து போயிருக்கின்றனர். அவர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால், படகு நல்ல நிலையில் மிதந்துக் கொண்டிருக்குமானால் அதை உயிர் காக்கும் கவசமாக பயன்படுத்திக் கொள்வது மிக சிறந்தது.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

உங்கள் படகு சவாரி திட்டத்தை நாளு பேருக்கு சொல்லிட்டு போறது நல்லது:

நாம் படகில் செல்லும் முன் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் நம்முடைய பயணம் பற்றி தெரிவித்துவிட்டு செல்வது நல்லது. ஒரு வேலை எதிர்பாராத விதமாக படகு விபத்தில் சிக்கி, நம்மால் கரை சேர முடியவில்லை எனில், நாம் வெளியில் வராதது குறித்த தகவல் நண்பர்கள் வாயிலாக மீட்புக் குழுவுக்கு சென்று சேர வாய்ப்பு உள்ளது. ஆகையால், உங்கள் படகு சவாரி குறித்த தகவலை அக்கம் பக்கத்தினரிடத்தில் தெரிவிப்பது நல்லது.

படகில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அது மூழ்க நேரிட்டல் என்ன செய்வது?.. தயவு செய்து இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க!

அமெரிக்க போன்ற உலக நாடுகளில் இதற்கென பிரத்யேக செல்போன் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. இது படகு பயணம்குறித்த தகவலை அறிவிக்கவும், உதவிக்கான அறிவிப்பை வழங்கும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What else do you need if your boat sinks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X