கேட்கும்போதே திக்... திக்குனு இருக்கு, விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
விமானங்கள் நடுவானில் பறக்கும் போது லேண்ட்டிங் கியர் திடீரென வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? அப்பொழுது விமானிகள் எப்படிச் செயல்பட வேண்டும்? லேண்டிங் கியர் விமானங்களுக்கு எவ்வளவு முக்கியம் அதன் வரலாறு என்ன? முழு விபரங்களைக் கீழே காணலாம்.

நாம் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்குப் பயணிக்கப் பயன்படும் வாகனத்திலேயே வித்தியாசமானது விமானம் தான். தரையிலும் இல்லாமல் தண்ணீரிலும் இல்லாமல் அந்தரத்தில் பறந்தே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. இது வித்தியாசமானது மட்டமல்ல அதிசயமானது என்று கூட கூறலாம். விமானங்கள் பறக்கும் தொழிற்நுட்பத்தை அதிசயம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும் சொல்லுங்கள்?

ஆனால் அதைவிட அதிசயம் என்ன தெரியுமா விமானத்தைத் தரையிறக்குவது தான். ஆம் விமானத்தைப் பறக்க வைப்பதுடன் அதைப் பத்திரமாகத் தரையிறக்க வைப்பது மிகப்பெரிய ஆச்சரியமான அறிவியல் எனச் சொல்லிவிடலாம் ரைட் பிரதர்ஸ் முதன் முறையாக விமானத்தைக் கண்டு பிடித்த போது விமானம் பறந்ததே தவிர அதைப் பத்திரமாகத் தரையிறக்க அதில் போதுமான வசதிகள் இல்லை. விமானம் தரையில் உரசி வழுக்கி இப்படியாகத் தான் தரையிறக்கப்பட்டது.

அதன்பின்பு தான் விமானங்களுக்கு வீல்களை பொருத்தும் யோசனை வந்தது. விமானங்களில் வீல்களை பொருத்துவது மூலம் விமானம் தரையிறங்குவதற்கு மட்டுமல்ல விமானத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கும், விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கும் வசதியாக இருக்கும் என விமானத்தில் வீல்கள் பொருத்தப்பட்டன. அதன் பின் விமானத்தில் லேண்டிங் சற்று சுலபமானது. ஆனால் அதில் பல ஆபத்துக்கள் இருந்தது.

ஆரம்பக் கட்டத்தில் விமானங்கள் தயாரிக்கப்படும் போது அதில் 3 சக்கரங்கள் அதாவது விமானத்தின் நோஸ் பகுதியில் ஒரு சக்கரமும், பெல்லி பகுதியில் இரண்டு சக்கரங்களும் பொருத்தப்பட்டன. இந்த சக்கரங்கள் எல்லாம் எப்பொழுதும் விமானத்திற்குள் கீழேயே இருப்பது போலவே டிசைன் செய்யப்பட்டிருந்தது. 1930 வரை அந்த மாடல் விமானங்கள் மட்டுமே இருந்தன.

ஆனால் அதில் சில பிரச்சனை இருந்தது. விமானத்தின் சக்கரங்கள் வெளியே இருப்பதால் விமானங்களில் அதன் முழு திறனில் பறக்க முடியவில்லை. அந்த சக்கரங்களுக்காக வேகத்தைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் காற்றின் அழுத்தமும் அதிகமாவதால் விமானம் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் செலவு செய்தது. இதற்குத் தீர்வு ஒன்று ஏற்படுத்த விரும்பினர். அதன்பின்னர் வந்த மாற்றமே விமானத்தின் வீல்களை மடக்கிக் கொள்ளும் தொழிற்நுட்பம்

அந்த தொழிற்நுட்பத்தின் படி விமானங்களுக்குச் சக்கரம் என்பது டேக்ஆஃப் செய்யும் போது லேண்டிங் செய்யும்போது மட்டுமே தேவைப்படும் ஒரு விஷயம் அதனால் விமானங்கள் டேக் ஆஃப் ஆனவுடன் வீல்களைமடக்கி கொண்டும், லேண்ட் ஆவதற்கு முன்னர் அதை மீண்டும் இறக்கிக்கொள்ளும் வசதி இதில் வந்தது. இந்த தொழிற்நுட்பத்திற்கு பெயர் retractable gear என அழைக்கப்பட்டது. இன்று அனைத்து விமானங்களிலும் இந்த தொழிற்நுட்பம் தான் பின்பற்றப்படுகிறது. இதனால் விமானங்களுக்கு ஏகப்பட்ட நன்மை கிடைத்தது.

ஒரு விமானத்தில் மொத்தம் 3 வீல்கள் இருக்கும் ஒரு வீலின் எடையே சுமார் 250 டன் இருக்கும். அதில் விமானத்தில் மையப்பகுதியில் 2 வீல்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு வீல்களிலும் குறைந்த பட்சம் 2 முதல் 8 டயர்கள் கூட பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் எடை பொருத்து இது மாறுபடும். முன்பக்கம்1 முதல் 4 வீல்கள் கூட பொருத்தப்பட்டிருக்கும். இது மட்டுமல்லாமல் விமானத்தின் சஸ்பென்ஸனிற்காக லேண்டிங் கியரில் oleo strut என் பாகம் இருக்கும். இது முழுவதும் கம்பிர
ஷ்டு காற்று மற்றும் ஹைட்ராலிக் ஃப்ளூயிட் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இது விமானத்தின் சஸ்பென்ஸனாக பயன்படும்.

இந்த வீல்கள் தான் விமானத்தின் லேண்டிங் கியர் என அழைக்கப்படுகிறது. இதன் கட்டுப்பாடு நேரடியாக விமானிகள் கையில் இருக்கும். இரண்டு விமானிகளில் யார் வேண்டுமானாலும் எளிதாக இதைப் பயன்படுத்தும் வகையில் மத்தியில் இந்த லேண்டிங் கியர்களின் கண்ட்ரோல்கள் இருக்கும். இது மட்டுமல்ல இந்த வீல்களில் எல்லாம் பிரேக்குகள் இருக்கும். இது விமானம் தரையிறங்கும் போது அல்லது விமானம் மேலே பறக்கத் துவங்கியதும் பயன்படுத்தப்படும்.

அதாவது விமானம் ஓடுபாதையில் வேகமாக ஓடிப் பறக்கத் துவங்கியதும். இந்த லேண்டிங்கியர் வீல்கள் 180 கி.மீ வேகத்திற்கும் குறையாமல் சுற்றிக் கொண்டிருக்கும். விமானங்கள் உடனடியாக இந்தலேண்டிங் கியரை மடக்கி வைப்பார்கள். அப்பொழுது விமானத்திற்குள் வந்தும் இந்த டயர் சுற்றினால் விமானத்திற்கும் இருக்கும் பயணிகளுக்கு பெரும் அதிர்வு ஏற்படும் அதனால் விமானம் பறக்கத் துவங்கியதும். விமானிகள் இந்த டயரை அதன் பிரேக்கை பயன்படுத்தி அதன் சுழற்சியை நிறுத்திவிடுவார்கள் பின்னர் வீலை ஹைட்டாலிக் சிஸ்டம் கொண்டு மடக்கி வைப்பார்கள். அதற்காக இந்த பிரேக் பயன்படுகிறது. வீல்கள் மடங்கியதும் லேண்டங்கியர் டோர் அடைக்கப்படும்

ஆனால் லேண்டிங்கின் போது அப்படி அல்ல, லேண்டிங்கியரை ஆக்டிவேட் செய்ய வீல்கள் மடங்கியவுடன் லேண்ட்டிங் டோரில்தான் வீல்கள் இருக்கும். விமானிகள் லேண்டிங்கின் போது அந்த டோர்களை தான் திறப்பார்கள். அது திறந்ததும் லேண்டிங் வீல்கள் தானாகக் கீழே இறங்கி அதன் போசினிற்கு வந்து லாக் ஆகிவிடும். பின்னர் பத்திரமாக லேண்டிங் நடை பெறும் இது தான் லேண்டிங் கியர் வேலை செய்யும் முறை.

ஆனால் இந்த லேண்டிங் கியர் ஃபெயிலியர் ஆனால் அல்லது வேலை செய்யாமல் போனால் என்ன செய்யப்படும் தெரியுமா? ஒரு விமானம் லேண்டிங் கியர் இல்லாமல் செயல்பட முடியுமா? விமான பயணத்தின் பாதியில் லேண்டிங் கியரில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன நடக்கும்? விரிவாகக் காணலாம் வாருங்கள்

பொதுவாக விமானங்களில் லேண்டிங் கியர் பிரச்சனை என்பது மிகவும் அரிதான பிரச்சனை தான். ஏன் என்றால் விமானங்களைப் பயணத்திற்குத் தயார் செய்யும் போது லேண்டிங் கியர் தான் மிக முக்கியமாக செக் செய்யப்படும். லேண்டிங் கியர் சரியாக இருப்பதை ஒன்றுக்கு பலர் செக் செய்பவர்கள் இதற்காகப் பல நடைமுறை சோதனைகள் உள்ளன. இதனால் லேண்டிங் கியர் ஃபெயிலியர் அபூர்வம் தான். ஆனால் சில நேரங்களில் அந்த பிரச்சனையும் நடந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையாகக் காணலாம் வாருங்கள்

முதலில் டேக் ஆஃப் ஆனதும் லேண்டிங்கியர் பிரச்சனை ஏற்பட்டால் என்ன நடக்கும் எனப் பார்க்கலாம். விமானம் ஓடுபாதையில் ஓடி டேக் ஆஃப் ஆனவுடன் விமானத்தின் லேண்டிங் கியரை விமானிகள் மடக்கிவிடுவார்கள் எனப் பார்த்திருப்போம் ஆனால் விமானிகள் அப்படியாக மடக்க முயற்சிக்கும் போது லேண்டிங் கியர் மடங்கவில்லை என்றால் பிரச்சனை தான். ஏன் மடக்கவில்லை என முதலில் விமானங்கள் கேமரா மூலம் பார்க்க வேண்டும் இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானதாக இருக்ககூடும் ஒன்ற விமானத்தின் லேண்டிங் கியர் லாக் ஆகி இருப்பது. மற்றொன்று லேண்டிங்கியரில் ஏதாவது சிக்கியிருப்பது.

பொதுவாக விமான நிலையங்களில் விமானங்கள் டோ செய்யப்படும். இப்படியான நேரங்களில் விமானத்தின் லேண்டிங் கியரில் தான் டோவின் கருவிகள் பொருத்தப்பட்டு டோ செய்யப்படும். அந்த நேரத்தில் விமானத்தின் லேண்டிங் கியர் மடங்காமல் இருக்க லாக் ஒன்று பொருத்தப்படும். இந்த லாக்கை டோ முடிந்த வும் அவர்கள் எடுக்க மறந்தால் விமானிகளுக்கு டேக் ஆஃப் முன்பு சிக்னல் கொடுக்கும். அதை விமானிகள் கவனிக்க வில்லை என்றால் அப்பொழுது விமானத்தின் டேக் ஆஃப்பின் போது லேண்டிங் கியர் மடங்காமல் போகும்.

அல்லது லேண்டிங் கியரில் விமானத்தின் டேக் ஆஃப் நேரத்தில் ஏதாவது பறவைகள் அல்லது அல்லது வேறு தாவது விஷயங்கள் சிக்கிக் கொண்டாலும் லேண்டிங் கியர் மடங்க முடியாமல் திணறும். இது போன்று நிகழ்ந்துவிட்டால் விமானங்கள் முதலில் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பின்னர் உடனடியாக ஏடிசி எனப்படும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது விமானத்தின் டயர் சுழல்கிறதா என்பதை விமானிகள் செக் செய்ய வேண்டும்.

விமானத்தின் டயர் சுற்றினால் பிரச்சனையில்லை விமானத்தைக் கிளப்பிய இடத்திலேயே மீண்டும் லேண்ட் செய்ய அனுமதி பெற்று மீண்டும் அதே விமான நிலையத்தில் லேண்ட் செய்யலாம். இதனால் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இருக்காது. லேண்ட் செய்யப்பட்டவுடன் பிரச்சனை சரி செய்யப்பட்டு விமானம் மீண்டும் டேக் ஆஃப் ஆகலாம் ஒரு வேலை வீல் சுற்றவில்லை என்றால் ஏதாவது சிக்கியிருக்கிறதா என செக் செய்வார்கள் வீல் ஏன் சுற்றவில்லை என செக் செய்வார்கள். இது சற்று சிக்கலான லேண்டிங்கில் முடியும். பெரும்பாலும் வீல் அந்தரத்தில் சுற்றாமல் இருந்தாலும் தரையைத் தொட்டதும் வேகம் மற்றும் அதிக பரஷர் காரணமாக என்ன சிக்கியிருந்தாலும் அதை அறுத்து எரிந்துவிட்டு வீல் சுற்றத் துவங்கிவிடும். இது டேக் ஆஃப் செய்யும் போது வரும் பிரச்சனை

லேண்டிங்கில் பிரச்சனை ஏற்பட்டால் அது சற்று சிக்கலான விஷயம் தான். விமானம் தரையிறங்கும் போது விமானிகள் லேண்ட்டிங் கியரை இறக்க முதலில் டோரை திறந்துவிடுவார்கள் என முன்னரே பார்த்தோம். டாரை திறந்தும் விமானத்தின் லேண்டிங் கியர் கீழே இறக்கி லாக் போசிஷனிற்கு வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் லேண்டிங் கியர் உட்புறமாக எதிலாவது சிக்கியிருக்கிறது என அர்த்தம். உடனடியாக விமானிகள் கேமரா மூலம் இதைப் பார்க்க வேண்டும். சில நேரம் லேண்டிங் கியர் இறக்கியிருக்கும் ஆனால் சரியான லாக் போசினிற்கு வராமல் ஏதாவது சிக்கியிருக்கும். இந்த மாதிரி நேரங்களில் விமானிகள் ஹைட்ராலிக்கை பயன்படுத்தி விமானத்தின் லேண்டிங் கியரை சரி செய்ய முடியும்.

சில நேரங்களில் ஹைட்ராலிக் லிவர்கள் மூலமும் இது சரி செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது வேறு வழியே இல்லை குறிப்பிட்ட லேண்ட்டிங் கியர் இல்லாமல் தரையிறங்குவதற்குத் தயார் ஆக வேண்டும். முதலில் இது குறித்த தகவலை ஏடிசிக்கு சொல்ல வேண்டும். மேலும் விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் டேக் ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் ஏடிசியிலிருந்து விமான நிலை சர்வீஸ்க்கு தகவல் செல்லும் அவர்கள் எமர்ஜென்ஸி லேண்டிங்கிற்கு தயாராக வேண்டும்.

எம்ர்ஜென்ஸி லேண்டங் என்றால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், பாதுகாப்பு அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் உஷார் செய்யப்படுவார்கள். இப்பொழுது விமானி எந்த லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை எனப் பார்ப்பார் அந்த லேண்டிங் கியர் இல்லாமல் எப்படித் தரையிறக்குவதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். உதாரணமாக விமானத்தின் நோஸ் பகுதியில் உள்ள லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்றால் விமானத்தை லேண்ட் செய்யும் போது முடிந்தவரை விமானத்தின் நோஸ் பகுதியை மேலே தூக்கிய வாரே வைத்து விமானத்தை லேண்ட் செய்ய வேண்டும் விமானத்தின் வேகம் வெகுவாக குறைந்த பின்பு விமானத்தை நோஸ் பகுதியைத் தரையில் உரச வைத்து லேண்ட் செய்ய வேண்டும்.

இப்படியாக லேண்டிங் செய்து கொஞ்சம் ரிஸ்க் இந்த லேண்ட்கிற்கு முன்னதாக விமானத்தின் பணிப் பெண்களிடம் எமர்ஜென்ஸி லேண்டிகிற்காக விமானிகள் தயார் செய்யச் சொல்ல வேண்டும் அவர்கள் பணிகளை பிரேஸ் போசிஷனிற்கு கொண்டு வந்துவிடுவார்கள். அப்படியாக இருப்பதால் விமானம் நேரடியாகத் தரையில் உரசும் போது பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். இப்படியான லேண்டிங்கின் போது தீ பிடிக்கவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிகள் விமானத்திற்குள்ளிலிருந்து மீட்கப்படுவார்கள். தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனம் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்யும் விமானத்தில் உள்ளே இருக்கும் பயணிகளை வேறு வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவே விமானத்தின் பெல்லி பகுதியில் உள்ள வீல் ஏதாவது வேலை செய்யவில்லை என்றால் எந்த பகுதியில் உள்ள வீல் வேலை செய்யவில்லையோ அந்த பகுதியில் தரையில் படாதவாறு விமானத்தின் சைடு போசிஷனில் வைத்து லேண்டிங் செய்ய வேண்டும். இப்படியாகச் செய்வதால் மறுபக்கத்தின் விமான றெக்க தரையில் உரசும் இதனால் விபத்துக்கள் ஏற்படும் ரிஸ்க் இருக்கிறது. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. இதற்காக லேண்டிங்கின் போது தீயணைப்பு ஆம்புலன்ஸ் எல்லாம் தயார் நிலையில் இருக்கும். இந்த லேண்டிங்கும் மிகவும் ரிஸ்கானது.

அடுத்ததாக இரண்டு லேண்டிங் கியர்கள் அல்லது அனைத்து கியர்களும் வேலை செய்யவில்லை என்றால் விஷயம் கொஞ்சம் சிக்கலானது தான். இந்த மாதிரியாகச் சூழ்நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் தரையிறக்குவதே இதற்கு ஒரே வழி இப்படியான நேரங்களில் எப்படிச் செயல்படவேண்டும் என ஏடிசி அதிகாரிகளுக்கும். விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். ஏதாவது இரண்டு லேண்டிங் கியரையாவது இயக்க வைக்க முதலில் முயற்சிகள் நடக்கும்.

எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால் தான். இந்த முடிவு எடுக்கப்படும் விமானம் முடிந்தளவு குறைவான வேகத்தில் இயக்கப்பட்டு தண்ணீரில் இறக்கப்படும். விமானத்தின் வடிவமைப்பின்படி விமானம் சில மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் அதற்கும் பயணிகளை விமானத்திற்குள்ளிருந்து வெளியேற்றி காப்பாற்ற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக செய்ய வேண்டும். விமானத்தின் லேண்டிங் கியர் ஃபெயிலியர் ஆனால் இது தான் நடக்கும்.

லேண்டிங்கில் பிரச்சனை ஏற்பட்டால் அது சற்று சிக்கலான விஷயம் தான். விமானம் தரையிறங்கும் போது விமானிகள் லேண்ட்டிங் கியரை இறக்க முதலில் டோரை திறந்துவிடுவார்கள் என முன்னரே பார்த்தோம். டாரை திறந்தும் விமானத்தின் லேண்டிங் கியர் கீழே இறக்கி லாக் போசிஷனிற்கு வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் லேண்டிங் கியர் உட்புறமாக எதிலாவது சிக்கியிருக்கிறது என அர்த்தம். உடனடியாக விமானிகள் கேமரா மூலம் இதை பார்க்க வேண்டும். சில நேரம் லேண்டிங் கியர் இறக்கியிருக்கும் ஆனால் சரியான லாக் போசினிற்கு வராமல் ஏதாவது சிக்கியிருக்கும். இந்த மாதிரி நேரங்களில் விமானிஙகள் ஹைட்ராலிக்கை பயன்படுத்தி விமானத்தின் லேண்டிங் கியரை சரி செய்ய முடியும்.

சில நேரங்களில் ஹைட்ராலிக் லிவர்கள் மூலமும் இது சரி செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது வேறு வழியே இல்லை குறிப்பிட்ட லேண்ட்டிங் கியர் இல்லாமல் தரையிறங்குவதற்கு தயார் ஆக வேண்டும். முதலில் இது குறித்த தகவலை ஏடிசிக்கு சொல்ல வேண்டும். மேலும் விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் டேக் ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் ஏடிசியிலிருந்து விமான நிலை சர்வீஸ்க்கு தகவல் செல்லும் அவர்கள் எமர்ஜென்ஸி லேண்டிங்கிற்கு தயாராக வேண்டும்.

எம்ர்ஜென்ஸி லேண்டங் என்றால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், பாதுகாப்பு அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் உஷார் செய்யப்படுவார்கள். இப்பொழுது விமானி எந்த லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என பார்ப்பார் அந்த லேண்டிங் கியர் இல்லாமல் எப்படி தரையிறக்குவதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். உதாரணமாக விமானத்தின் நோஸ் பகுதியில் உள்ள லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்றால் விமானத்தை லேண்ட் செய்யும் போது முடிந்தவரை விமானத்தின் நோஸ் பகுதியை மேலே தூக்கிய வாரே வைத்து விமானத்தை லேண்ட் செய்ய வேண்டும் விமானத்தின் வேகம் வெகுவாக குறைந்த பின்பு விமானத்தை நோஸ் பகுதியை தரையில் உரச வைத்து லேண்ட் செய்ய வேண்டும்.

இப்படியாக லேண்டிங் செய்து கொஞ்சம் ரிஸ்க் இந்த லேண்ட்கிற்கு முன்னதாக விமானத்தின் பணி பெண்களிடம் எமர்ஜென்ஸி லேண்டிகிற்காக விமானிகள் தயார் செய்ய சொல்ல வேண்டும் அவர்கள் பணிகளை பிரேஸ் போசிஷனிற்கு கொண்டு வந்துவிடுவார்கள். அப்படியாக இருப்பதால் விமானம் நேரடியாக தரையில் உரசும் போது பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். இப்படியான லேண்டிங்கின் போது தீ பிடிக்கவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிகள் விமானத்திற்குள்ளிலிருந்து மீட்கப்படுவார்கள். தீபிடித்தால் தீயணைப்பு வாகனம் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்யும் விமானத்தில் உள்ளே இருக்கும் பயணிகளை வேறு வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவே விமானத்தின் பெல்லி பகுதியில் உள்ள வீல் ஏதாவது வேலை செய்யவில்லை என்றால் எந்த பகுதியில் உள்ள வீல் வேலை செய்யவில்லையோ அந்த பகுதியில் தரையில் படாத வாறு விமானத்தின் சைடு போசிஷனில் வைத்து லேண்டும் செய்ய வேண்டும். இப்படியாக செய்வதால் மறுபக்கத்தின் விமான றெக்க தரையில் உரசும் இதனால் விபத்துக்கள் ஏற்படும் ரிஸ்க் இருக்கிறது. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. இதற்காக லேண்டிங்கின் போது தீயணைப்பு ஆம்புலன்ஸ் எல்லாம் தயார் நிலையில் இருக்கும். இந்த லேண்டிங்கும் மிகவும் ரிஸ்கானது.

அடுத்ததாக இரண்டு லேண்டிங் கியர்கள் அல்லது அனைத்து கியர்களும் வேலை செய்யவில்லை என்றால் விஷயம் கொஞ்சம் சிக்கலானது தான். இந்த மாதிரியாக சூழ்நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் தரையிறக்குவதே இதற்கு ஒரே வழி இப்படியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும் என ஏடிசி அதிகாரிகளுக்கும். விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். ஏதாவது இரண்டு லேண்டிங் கியரையாவது இயக்க வைக்க முதலில் முயற்சிகள் நடக்கும்.

எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால் தான். இந்த முடிவு எடுக்கப்படும் விமானம் முடிந்தளவு குறைவான வேகத்தல் இயக்கப்பட்டு தண்ணீரில் தரையிறக்கப்படும். விமானத்தின் வடிவமப்பின்படி விமானம் சில மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் அதற்கும் பயணிகளை விமானத்திற்குள்ளிருந்து வெளியேற்றி காப்பாற் வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக செய்ய வேண்டும். விமானத்தின் லேண்டிங் கியர் ஃபெயிலியர் ஆனால் இது தான் நடக்கும்.


Click it and Unblock the Notifications








