இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வரும் பைக்குகளில் ஏன் சென்டர் ஸ்டாண்டு வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

ஒரு சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் தற்போது சென்டர் ஸ்டாண்டு (Center Stand) வழங்கப்படுவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அனைத்து பைக்குகளிலும் சென்டர் ஸ்டாண்டு இருக்கும். இன்றைய காலகட்டத்திலோ நீங்கள் தேவைப்பட்டால் சென்டர் ஸ்டாண்டை வாங்கி பொருத்தி கொள்ள கூடிய சூழல் காணப்படுகிறது.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

பைக் உரிமையாளர்கள் இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டும். எந்தவொரு பைக் என்றாலும், சென்டர் ஸ்டாண்டு மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று. சைடு ஸ்டாண்டு (Side Stand) போட்டு பைக்கை சுத்தம் செய்வதை விட, சென்டர் ஸ்டாண்டு போட்டு பைக்கை சுத்தம் செய்வது எளிமையானது. இதன் மூலமாக நம்மால் பைக்கை தெளிவாகவும் சுத்தம் செய்ய முடியும்.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் குறுகலான இடங்களில் பைக்கை ஒழுங்காக பார்க்கிங் செய்வதையும் சென்டர் ஸ்டாண்டுகள் எளிமையாக்குகின்றன. சைடு ஸ்டாண்டு போட்டால் அதிக இடம் தேவைப்படும். ஆனால் சென்டர் ஸ்டாண்டு இருக்கும்பட்சத்தில், குறுகலான இடத்திலும் பைக்கை எளிதாக நிறுத்தலாம். அதேபோல் சென்டர் ஸ்டாண்டு போடப்பட்டிருக்கும் சமயத்தில், நீங்கள் பைக்கின் மீது அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

பைக்கின் மீது படுத்து கொள்ளவும் கூட நம்மால் முடியும். இப்படி சென்டர் ஸ்டாண்டு மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். நிலைமை இப்படி இருக்கும் பைக் நிறுவனங்கள் ஏன் சென்டர் ஸ்டாண்டை புறக்கணிக்கின்றன? என்ற சந்தேகம் எழுவது இயற்கைதான். இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் மாடர்ன் பைக்குகள், உற்பத்தி நிறுவனங்கள் சென்டர் ஸ்டாண்டை வழங்காமல் தவிர்ப்பதற்கு 3 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலாவது காரணம் விலை. சென்டர் ஸ்டாண்டு வழங்குவதை தவிர்த்தால், பைக்கின் விலையை ஓரளவிற்கு குறைக்க முடியும் என பைக் உற்பத்தி நிறுவனங்கள் கருதுகின்றன.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

இது மிகவும் போட்டி நிறைந்த சந்தை. பைக் விற்பனையில் விலை மிக முக்கிய பங்காற்றுகிறது. வாடிக்கையாளர்களும் கூட இன்ஜின் சக்தி, கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவற்றுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சென்டர் ஸ்டாண்டு போன்ற நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் அவசியமான வசதிகளை மறந்து விடுகின்றனர்.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

சென்டர் ஸ்டாண்டு கவர்ச்சிகரமாக இல்லை என்பதுதான், அதனை பைக் நிறுவனங்கள் புறக்கணிப்பதற்கு இரண்டாவது காரணமாக சொல்லப்படுகிறது. பைக் விளம்பர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். அந்த விளம்பரங்களில் பைக்குகளை பெரும்பாலும் சைடு ஸ்டாண்டு போட்டுதான் நிறுத்தி வைத்திருப்பார்கள்.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

சென்டர் ஸ்டாண்டு இருந்தாலும் கூட பெரும்பாலும் சைடு ஸ்டாண்டைதான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அப்போதுதான் பைக் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். மூன்றாவது காரணம் மிகவும் முக்கியமானது. மாசு உமிழ்வு விதிமுறைகள்தான் அந்த மூன்றாவது காரணம். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது மாசு உமிழ்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலில் உள்ளன. வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதுதான் இந்த விதிமுறைகளின் நோக்கம். இந்த மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரிப்பதற்கு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இந்த பணியும் கடுமையாக மாறி கொண்டே வருகிறது.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

எனவே இன்ஜின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பைக்கின் எடையை குறைக்கும் முயற்சிகளில் பைக் உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சென்டர் ஸ்டாண்டுகளின் எடை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சில சென்டர் ஸ்டாண்டுகளின் எடை கிலோ கணக்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

எனவே இந்த கூடுதல் எடையை தவிர்ப்பதன் மூலமாக மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு பைக் உற்பத்தி நிறுவனங்கள் முயல்கின்றன. அத்துடன் எடையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போதைய பைக்குகளில் மிகவும் எடை குறைவான சைடு ஸ்டாண்டுகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

இதை யாருமே கவனிக்கறது இல்ல... இப்போ வர்ற பைக்குகளில் சென்டர் ஸ்டாண்டு இருக்காது... காரணம் என்னனு தெரியுமா?

பைக்குகளில் ஏன் சென்டர் ஸ்டாண்டுகள் தவிர்க்கப்படுகிறது? என்பதற்கான காரணங்கள் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். பைக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் தற்போது ஏராளமான பழைய அம்சங்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றுக்கு பதிலாக புதுமையை புகுத்தும் முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு கொண்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What happened to bike center stands read more to find out
Story first published: Monday, September 6, 2021, 21:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X