இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கனும்னா ஸ்கூல்ல படிச்ச அறிவியல் நியாபகம் இருக்கனும்!

வடக்கு அட்லாண்டிக் தொலைந்து போன டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் "கேட்டஸ்ட்ரோஃபிக் இம்புளோஷன்" காரணமாக விபத்தில் சிக்கி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன "கேட்டஸ்ட்ரோஃபிக் இம்புளோஷன்"? இந்த நீர்மூழ்கி எப்படி விபத்தில் சிக்கியது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஒசன் கேட் என்ற தனியார் நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவையை வழங்கி வந்தது. இந்நிறுவனம் கடந்த 18ம் தேதி 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சென்றது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீசுவரரும் ஒருவர். இவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் டைட்டானிக். இந்த நீர் மூழ்கிக் கப்பல் கடலுக்குள் இறங்கிய 1.5 மணி நேரத்தில் இதன் துணையாகக் கடலுக்கு மேல் உள்ள கப்பலுடனான தொடர்பை நிறுத்தியது.

Catastrophic Implosion in Titanic Submarine

இந்த தகவல் வெளியான பின்பு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த கப்பல் படையினர் இந்த நீர்மூழ்கியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த நீர் மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் கடலின் அடிப்பகுதியில் கிடைத்துள்ளது. இதை வைத்து இந்த கப்பலில் கேஸ்ட்ரோபிக் இம்புளோஷன் ஏற்பட்டிருக்கும் இதனால் கப்பலில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

கேஸ்ட்ரோபிக் இம்புளோஷன் என்றால் என்ன? இது குறித்துத் தான் விரிவாகக் காணப்போகிறோம். ஆங்கிலத்தில் நாம் எக்ஸ்புளோஷன் என்ற வார்த்தையைப் படிப்பதிருப்போம். ஒரு வெடிபொருள் வெடித்தது என்றால் எக்ஸ்புளோஷன் எனக் குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு பொருள் உள்ள அழுத்தம் அதிகமாகி வெளியே வெடித்துச் சிதறினால் எக்ஸ்புளோஷன் என அழைக்கிறோம்.

Catastrophic Implosion in Titanic Submarine

இதுவே வெளியே அழுத்தம் அதிகமாகி உள்ள அழுத்தம் குறைந்தால் இம்புளோஷன் ஏற்படும். இதற்கு நாம் சிறு வயதில் படித்த ஒரு அறிவியல் ஆய்வை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு பிளாஸ்டிக் பாட்டில் உள்ளே மெழுகு வர்த்தியையோ அல்லது தீக்குச்சியையோ பத்த வைத்துப் போட்டு மூடினால் அந்த தீக்குச்சி பாட்டில் உள்ளே காற்று இருக்கும் வரை எரியும். அதன் பின் அணைந்துவிடும்.

பாட்டில் உள்ளே இருந்த காற்றை தீ குச்சி பயன்படுத்தியதால் பாட்டில் உள்ள காற்றின் அழுத்தம் குறையும். பாட்டில் வெளியே உள்ள காற்றின் அழுத்தம் உள்ளே உள்ள அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் பாட்டில் நெளிவு ஏற்பட்டு ஏதாவது ஒரு புறம் கிராக் அல்லது கீறல் ஏற்பட்டு வெளியே உள்ள காற்றையும் உள்ளே உள்ள காற்றையும் சம நிலை படுத்திவிடும். இதைத் தான் இம்புளோஷன் என அழைக்கிறோம்.

Catastrophic Implosion in Titanic Submarine

இது தான் இங்கேயும் நடந்துள்ளது. டைட்டானிக் நீர் மூழ்கிக் கப்பலை ஒரு மூடப்பட்ட பாட்டிலாக எடுத்துக்கொள்ளுங்கள். கடல் நீர் இந்த நீர்மூழ்கி மேல் ஒரு அழுத்தத்தைச் செலுத்தும். அதே நேரம் நீர் மூழ்கி உள்ளே அதே அளவிற்கு அழுத்தம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நீர்மூழ்கிப் பாதுகாப்பாக இருக்கும். நீர் மூழ்கி உள்ளே அழுத்தம் குறைந்தால் இம்புளோஷன் ஏற்பட்டு விடும். தொலைந்து போன டைட்டானிக்கிலும் இது ஏற்பட்டிருக்கலாம்.

எக்ஸ்புளோஷன் ஏற்பட்டால் எப்படியான பாதிப்பு இருக்குமோ அதை விட இம்புளோனில் அதிகமான பாதிப்பு இருக்கும். இதில் பயணித்தவர்கள் எல்லாம் இம்புளோஷன் ஏற்படும் போது ஒரு வெடி குண்டிற்குள் ஒருவர் இருந்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அதே பாதிப்பு ஏற்படும். அதாவது அவர்கள் உடல் சிதறியிருக்கும் எனக் கூறப்படுகிறது..

இந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 2018ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இது முழுவதும் கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம் ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது சுமார் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செலும் திறன் கொண்டது. இருந்தாலும் இந்த விபரத்து எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு கப்பல் தொலைந்து போனால் அது பல மாதங்கள் கழித்து கூட கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் இருந்தவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் சப்போர்ட் தேவை, அது தொலைந்து போய் உடனடியாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் அதில் பயணித்தவர்கள் நிலை படு மோசம் தான்.

More from DriveSpark

Article Published On: Friday, June 23, 2023, 13:00 [IST]
English summary
What happens to titanic submarine what is a catastrophic implosion fully explained
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X