சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது

உலகில் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கலாம். ஆனால் அவற்றிற்கான டயர்களை உற்பத்தி செய்யும் முன்னணி டயர் நிறுவனங்கள் சில மட்டுமே உள்ளன. இதனாலேயே டயர் தயாரிப்பு நிறுவனங்கள் எப்போதும் பிஸியாக இயங்கி கொண்டிருக்கும். அவ்வாறு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உலகின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று பைரெல்லி ஆகும்.

உலகளவில் பிரபலமான ஃபார்முலா 1 பந்தயங்களில் பைரெல்லியின் தயாரிப்புகள் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஃபார்முலா 1 போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்டத்தில் இருந்தே பைரெல்லி தன்னை எஃப்1 பந்தயங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. ஆனால் எஃப்1 போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ டயர் பார்ட்னராக அறிவிக்கப்பட்டது என்னவோ 2011இல் தான்.

1

அமலில் இருக்கும் ஒப்பந்தத்தின்படி 2024ஆம் ஆண்டு வரையில் எஃப்1 போட்டிகளுக்கு டயர் சப்ளையர் பைரெல்லி நிறுவனம் ஆகும். எஃப்1 போட்டியின் போது வாரந்தோறும் ஒவ்வொரு குழுவுக்கும் உலர்ந்த 13 டயர் தொகுப்புகளை பைரெல்லி நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு பல ஒப்பந்தகளுக்கு மத்தியில் எஃப்1 போட்டிகளில் பயன்படுத்தப்படும் டயர்கள் பின்னர் என்ன செய்யப்படும் என்று என்றைக்காவது யோசித்துள்ளீர்கள்.

ஏனெனில் உள்ளூரில் நடக்கும் சாதாரண கிரிக்கெட் போட்டியிலேயே ஒருமுறை பயன்படுத்திய பந்தை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி இருக்கையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடத்தப்படும் எட்1 பந்தயங்களில் பயன்படுத்தப்பட்ட டயர்களை மீண்டும் உபயோகப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியென்றால், அந்த டயர்கள் அதன்பின் என்ன செய்யப்படும் என்றால், பைரெல்லி நிறுவனத்தின் 'க்ரீன் டெக்னாலஜி' திட்டத்தில் உட்படுத்தப்படும்.

1

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அந்த டயர்கள் யாவும் போட்டி முடிந்த பின் அழிக்கப்படும். அழிக்கப்படும் என்றால், முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடாது, அந்த டயர்கள் மறுசுழற்சி செய்யப்படும். அதாவது, போட்டியில் பயன்படுத்தப்பட்ட டயர்கள் அனைத்தையும், சில கண்டெய்னர் லாரிகளில் அடைத்து இங்கிலாந்தின் ஆக்ஃபோர்டுஷைர் மாகாணத்தில் டிக்காட் என்ற பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அங்கு மற்ற வாகன டயர்களுடன் சேர்த்து இவையும் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்படுகின்றன. அதன்பின் அவை மிக அதிக வெப்பத்திற்கு எரியூட்டப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக டயர்களை எரிக்கும்போது அதில் இருந்து சுவாசிக்க கூடாத வாயுக்கள் வெளியேறும். ஆனால் இந்த செயல்முறையில் அவ்வாறான எந்த வாயுவும் வெளியேற்றப்படுவது இல்லையாம். எரியூட்டப்பட்ட பின் இறுதியாக கிடைக்கும் விஷம்-அல்லாத சாம்பல் சிமெண்ட் தொழிற்சாலையில் சிமெண்ட்டை உருவாக்க கலந்து பயன்படுத்தப்படுகின்றன.

1

இவ்வாறு கிராண்ட் ஃபிரிக்ஸில் பல பார்வையாளர்களின் கண் முன் அதிவேகமாக இயங்கி கொண்டிருந்த டயர்கள் போட்டிக்கு பின் சிறு சிறு துகள்களாக எதோவொரு இடத்தில் கட்டுமான வேலைக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுதான், எஃப்1 பந்தயத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட டயர்கள் அதன்பின் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், சக்கரங்களின் ரிம்களில் இருந்து டயர்களை கழற்றும்போது அவை சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது.

அவற்றை மீண்டும் சக்கரங்களில் பொருத்தி பயன்படுத்துவது நல்லது அல்ல. டயர் சேதமடையாவிடினும் கூட அந்த டயரை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். இந்த நேரத்தில் தங்களது டயர்களின் தரம் குறித்து 2011ஆம் ஆண்டில் பைரெல்லி கூறிய வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகிறது, "எங்களது கொள்கைகளில் சுற்றுச்சூழல் முக்கியமான ஒன்று. பயன்படுத்தப்பட்ட டயர்களை அதன்பின் அகற்றிவிடும் எங்களது முறை இதற்கு உதாரணம். எதிர்காலத்தில் போட்டிக்கான சாலையை கட்டமைப்பதில் கூட எங்களது ரீ-சைக்கிள் டயர்கள் பயன்படுத்தப்படலாம்" என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What happens to tyres after formula 1 race is over
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X