கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

விற்பனையாகாமல் இருக்கும் பழைய கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே கார்களில் தொடர்ச்சியாக புதுப்புது அப்டேட்கள் செய்யப்படுகின்றன. ஒரு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே புதிய அப்டேட்களுடன் அடுத்த மாடல் விற்பனைக்கு வந்து விடுகிறது. இதன் காரணமாக பழைய மாடல்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

அப்படியிருக்கும்போது விற்பனையாகாத கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அந்த சந்தேகத்தை இந்த செய்தியில் நிவர்த்தி செய்கிறோம். நீங்கள் ஷோரூமிற்கு சென்றால், பல்வேறு புதிய கார்கள் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒருவேளை இந்த கார்கள் விற்பனையாகாவிட்டால், டீலர்ஷிப்களுக்கு சிக்கல்தான்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

ஏனெனில் டீலர்ஷிப்களுக்கு இதன் காரணமாக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அவற்றை நிறுத்துவதற்கு இடமும் இருக்காது. எனவே ஸ்டாக்கில் உள்ள பழைய கார்கள் அனைத்தையும் விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயம் டீலர்ஷிப்களுக்கு இருக்கிறது.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

பொதுவாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதில்லை. கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே டீலர்ஷிப்கள் பாலம் போல செயல்படுகின்றன. கார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து டீலர்ஷிப்கள் கார்களை வாங்குகின்றன.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

பின்னர் தங்கள் லாபத்திற்காக அவை கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றன. கார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் ஒவ்வொரு காரையும் விற்பனை செய்ய வேண்டிய பொறுப்பு டீலர்ஷிப்களுக்கு இருக்கிறது. ஏனெனில் விற்பனையாகாத கார்களை டீலர்ஷிப்களால் கார் உற்பத்தி நிறுவனங்களிடம் திரும்ப கொடுக்க முடியாது.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

எனவே பணத்தையும் திரும்ப பெற இயலாது. எவ்வளவு பெரிய கார் நிறுவனமாக இருந்தாலும் அதன் ஏதேனும் ஒரு சில தயாரிப்புகளின் விற்பனை மந்தமாக இருக்கும். இந்த கார்கள் ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் இருக்கலாம். எனவே இதுபோன்ற கார்களை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளுக்கு ஊக்க தொகைகள் வழங்கப்படுகின்றன.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

ஏனெனில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டால்தான், புதிய கார்களுக்கு இடம் கிடைக்கும். அத்துடன் பெரிய நஷ்டமும் தவிர்க்கப்படும். நீங்கள் புதிய கார் வாங்க சென்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் ஒரு காரின் மீது அதிக ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் விற்பனை பிரதிநிதி வேறு ஒரு காரை நோக்கி உங்களை திசை திருப்பி கொண்டிருப்பார்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

அதாவது உங்களுக்கு விருப்பமே இல்லாத காரை வாங்க வைப்பதற்கு அவர் முயற்சி செய்து கொண்டிருப்பார். விற்பனையாகாமல் உள்ள ஸ்டாக்கை கிளியர் செய்ய வேண்டும், ஊக்க தொகை பெற வேண்டும் என்பதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே கவனமாக இருங்கள்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

ஒரு கார் விற்பனையாகாமல் இருக்கிறது என்றால், டீலர்ஷிப்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. உற்பத்தி நிறுவனங்களை அவை அணுக முடியாது என்பதால், ஆன்லைனில் வாடிக்கையாளர்களை தேடலாம். அல்லது தங்களிடம் விற்பனையாகாமல் உள்ள கார் வேறு ஒரு இடத்தில் உள்ள டீலர்ஷிப்பிற்கு தேவைப்படுகிறதா? என்பதை பார்க்கலாம்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

விற்பனையாகாமல் உள்ள கார்கள் சில சமயங்களில் ஏலம் கூட விடப்படலாம். ஆனால் இதுதான் டீலர்ஷிப்களுக்கு கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பிற்கு சென்றால், ஏலம் விடும் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை லாபமாக எடுத்து கொள்ளும். எனவே நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என அந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டு விடும்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

விற்பனையே ஆகாமல் இருப்பதுடன் ஒப்பிடும்போது, குறைந்த விலைக்காவது விற்பனை செய்யப்பட்டு விடுவது அவர்களுக்கு நல்லதுதானே! இதன் மூலம் நஷ்டத்தின் அளவை ஓரளவிற்கு குறைக்கலாம். ஆனால் இதுபோன்ற சமயங்களில் அனைத்து கார்களையும் டீலர்ஷிப்கள் விற்பனை செய்து விடாது. ஒரு சில கார்களை தங்களிடமே வைத்து கொள்ளும்.

கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது... சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்!

வாடிக்கையாளர்களின் கார்கள் சர்வீஸ் செய்வதற்கு வரும்போது, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இந்த கார்களை டீலர்ஷிப்கள் வழங்குகின்றன. ஆனால் அனைத்து டீலர்ஷிப்களும் இதனை செய்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர தள்ளுபடிகளை வழங்குவதன் மூலமும், டீலர்ஷிப்கள் பழைய ஸ்டாக்குகளை க்ளியர் செய்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What happens to unsold cars here s everything you need to know
Story first published: Thursday, January 13, 2022, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X