விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

விமான பயணத்தின்போது சிலர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி நடுவானில் யாராவது உயிரிழந்தால், விமானத்தில் என்ன நடக்கும்? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

விமான பயணத்தின்போது யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பணிப்பெண்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பார்கள். இதற்கென விமான ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் விமானங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபரகணங்களும், விதிமுறைகளின்படி வைக்கப்பட்டிருக்கும்.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

ஆனால் விமானங்களில் போதிய இடவசதி இருக்காது என்பதால், முதலுதவி சிகிச்சைகளை வழங்கும்போது விமான ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் அருகில் இருக்கும் மற்ற பயணிகளுக்கும் இது கடினமான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணிகளுக்கு விமான ஊழியர்கள் சிகிச்சை வழங்குகின்றனர்.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

அத்துடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளில் மருத்துவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் உதவியும் பெறப்படுகிறது. சில அவசர சமயங்களில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணியின் உயிரை காப்பாற்றுவதற்காக, அருகில் உள்ள விமான நிலையங்களில் பைலட்கள் விமானங்களை தரையிறக்கவும் செய்கின்றனர்.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னதாகவோ உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணி உயிரிழந்து விடும் சூழல் சில சமயங்களில் ஏற்படுகிறது. அப்படி யாராவது ஒருவர் உயிரிழந்து விட்டால், அவரது உடல் போர்வையால் மூடப்படும். பின்னர் காலி இருக்கை ஏதேனும் இருக்கும்பட்சத்தில், அதில் அவரது உடல் வைக்கப்படும்.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

ஒருவேளை விமானத்தில் இருக்கை எதுவும் காலியாக இல்லை என்றால், உடல்களை வைக்கக்கூடிய பையில், உயிரிழந்தவரின் உடல் வைக்கப்படும். பின்னர் விமானத்தின் பின் பகுதியில் உள்ள சமையலறையில் அவர் உடல் கிடத்தப்படும். சில சமயங்களில் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் விமான ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விமான பயணத்தின்போது ஒருவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலுக்கு அருகே சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் சில பயணிகளுக்கு ஏற்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு என விமானங்களில் பிரத்யேகமான இடவசதிகள் எதுவும் இருக்காது.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

எனவே நடுவானில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான நடைமுறைகள், ஒவ்வொரு விமான நிறுவனங்களை பொறுத்தும் மாறுபடுகின்றன. ஆனால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமாகவும், மரியாதையுடனும் கையாள வேண்டிய பொறுப்பு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு உள்ளது.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

சம்பந்தப்பட்ட விமானம் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் கீழே இறங்கியவுடன், மருத்துவர்கள் வந்து உயிரிழந்தவரின் உடலை பரிசோதிப்பார்கள். பின்னர் அவரது உடல் வெளியே கொண்டு வரப்படும். ஒருவேளை உயிரிழந்த நபர் தனியாக பயணம் செய்திருந்தால், அவருடைய உறவினர்களை விமான நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும்.

விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்...

அதன்பின்னர் விமானத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து அவர்களிடம் முழுமையாக விளக்கப்படும். பொதுவாக பயணிகள் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால் விமானம் உடனே அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படும். ஆனால் விமானத்தில் யாராவது ஒருவர் உயிரிழந்து விட்டால், விமானம் திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Happens When A Passenger Dies During A Flight - We Explain. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X