நம்பவே முடியாத அளவுக்கு மரணம் நிகழும்!! ஏர்பிளைன் என்ஜினுக்குள் சிக்கினால்... இதயம் பலவீனமானவங்க பார்க்காதீங்க

விமானம் (Airplane)-இன் என்ஜினுக்குள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?. நாங்க ஏன் நடுராத்திரியில் சுடுக்காட்டுக்கு போகனும்? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், விமான பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில்தான் இவ்வாறான விசித்திரமான கேள்விகள் நம் மனதிற்குள் எழும்.

விமான பயணங்களை முதல்முறையாக மேற்கொள்ளும்போது அந்த உணர்வே தனி என்றுதான் சொல்ல வேண்டும். முதல் விமான பயணத்தின்போது, பல்வேறு கேள்விகள் நம்முள் எழுவது சாதாரணமே. இந்த கேள்விகளே நமக்குள் பயத்தை உருவாக்குகின்றன. முதல் விமான பயணத்தின்போது எழும் கேள்விகள் நகைச்சுவையானதாகவும், வழக்கமாக எல்லாருக்கும் ஏற்படக்கூடியதாகவும் இருக்கும்.

when you get stuck airplane engine

அடுத்தடுத்த விமான பயணங்களின் போதுதான், இன்னும் ஆழமான மற்றும் விசித்திரமான கேள்விகள் உருவாகும். அதாவது, விமானிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு நாம் விமானத்தை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது? விமானத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? போன்ற கேள்விகள் சில பயணிகளுக்கு எழலாம்.

விமானத்தின் இறக்கைகளில் அமைந்துள்ள என்ஜின் பகுதிக்குள் மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது என்கிற கேள்வி கூட சிலருக்கு ஏற்படலாம். குறிப்பாக, விமானத்தின் இறக்கைக்கு அருகே நடந்து செல்லும்போதும், இறக்கைக்கு அருகே இருக்கும் இருக்கைகளில் அமரும்போதும்தான் பயணிகளுக்கு இவ்வாறு நினைக்க தோன்றும். உண்மையில், விமானத்தின் இறக்கைகளில் உள்ள என்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

இருப்பினும், ஒருவேளை அவ்வாறு நடந்தால் என்ன செய்வது என்பதை அட்டோமிக் மார்வல் என்கிற யூடியுப் சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். வீடியோவில், விமானம், அதன் இறக்கை என்ஜின் மற்றும் மனிதன் அனைத்தும் அனிமேஷனில் காட்டப்பட்டுள்ளன. சாதாரண கார் என்ஜினே எவ்வளவு வேகத்தில் இயங்கும் என்பது மெக்கானிக்காக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அப்படியிருக்கையில், சுழல் விசிறி மூலம் இயங்கும் விமான என்ஜின் எவ்வளவு வேகத்தில் செயல்படும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. விமானத்தின் என்ஜின் சிஸ்டத்தில் உள்ள பிளேட்களில் சிக்க நேர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் பாகங்கள் அனைத்தும் துண்டுத்துண்டுகளாக சிதறி போகும். மிகவும் வேதனையான மரணத்தை சந்திக்க வேண்டிவரும்.

when you get stuck airplane engine

விமானத்தின் இறக்கையில் இருக்கும் என்ஜினில் விசிறி பிளேட்கள் எதிர் கடிகார திசையில் சுழலக்கூடியவை. அதாவது, விமானத்திற்கு வெளியே இருந்து பார்த்தால், இந்த பிளேட்கள் எதிர்திசையில் சுழல்வது போன்றும், என்ஜின் சிஸ்டத்திற்கு உள்ளே இருந்து பார்த்தால், கடிகார திசையில் சுழல்வது போன்றும் இருக்கும். ஏனெனில், இந்த பிளேட்களின் வேலை ஆனது என்ஜினை இயக்குவது கிடையாது, என்ஜினை குளிர்விப்பது ஆகும்.

இந்த பிளேட் சுழலும் சமயத்தில் ஒரு மனிதன் என்ஜின் சிஸ்டத்திற்கு உள்ளே செல்ல நினைத்தால், அவனது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிடும் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். இவ்வாறு சிதறிப்போகும் உடல் பாகங்கள் பிளேட் வழியாக வரும் காற்றினால் என்ஜின் சிஸ்டத்திற்கு உள்ளேயே சுழன்றுக் கொண்டிருக்கும். அதன்பின்னரே, அந்த உடல் பாகங்கள் கம்பிரெஸ்ஸரின் உள்ளே அடைப்பட்டு சிக்கிக் கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், யாராலும் விமானத்தின் இறக்கை என்ஜினின் பிளேடுக்குள் நுழைய முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு பாதுகாப்பாகவே இந்த பிளேட் சிஸ்டம் வடிவமைக்கப்படும். ஆதலால், இவ்வாறு நமக்கு நடந்துவிடுமோ என பயப்பட வேண்டாம். ஒரு பொது அறிவுக்காகவே இந்த விஷயத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு கீழேயுள்ள வீடியோவை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 23:59 [IST]
English summary
What happens when you get stuck inside airplane wing engine
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+