இரவு நேரத்தில் லோகோ பைலட்கள் தூங்கிவிட்டால் ரயில் விபத்தில் சிக்கிவிடுமா?
இந்தியாவில் பாதுகாப்பான பயணம் என்றால் அது ரயில் பயணமாகத் தான் இருக்கும். விபத்துக்கள் மிகவும் குறைவாக நிகழும் ஒரு போக்குவரத்து வசதியாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது மட்டுமல்ல டிக்கெட் விலையும் மற்ற போக்குவரத்து வசதியை ஒப்பிடும் போது குறைவானது அதே நேரம் வசதியானதும் கூட பயணிகள் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும்.
உலக அளவில் இந்திய ரயில் 4வது மிகப்பெரிய ரயில்வே நெட்வோர்க் ஆகும். ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய ரயில் வசதியாகும். நாம் இரவு நேரத்தில் படுத்து நிம்மதியாகத் தூக்கிக்கொண்டே பயணிக்கிறோம். ஆனால் ரயிலை யார் இயக்குகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் ரயில் இன்ஜின்களில் இரண்டு லோகோ பைலட்கள் இருப்பார்கள் அவர்கள் தான் ரயிலை இயக்குவார்கள்.

அவர் தூங்காமல் ரயிலை இயக்கினால்தான் நம்மால் நிம்மதியாகத் தூக்கிக்கொண்டே பயணத்தைச் சாத்தியமாக்க முடியும். சரி ரயில் இன்ஜினில் இருக்கும் பைலட்கள் ஒரு வேளை தூக்கிவிட்டால் என்ன நடக்கும்? பலருக்கும் ரயிலில் இப்படியாக ஒரு சந்தேகம் இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் ஒருவர் தூக்கிவிட்டால் மற்றவர் அவரை எழுப்பி விடுவார் எனப் பலர் சொல்லுவார்கள். அது என்னவோ உண்மை தான் ஆனால் இருவரும் தூங்கிவிட்டால்?
பலருக்கும் இந்த பயம் ரயில் பயணத்தின் போது ஏற்படும் ரயில் ஓட்டும் டிரைவர் இருவரும் நள்ளிரவில் தன்னையே அறியாமல் தூக்கிவிட்டால் ரயில் போய் விபத்தில் சிக்கிவிடுமே என பலர் நினைப்பதுண்டு ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. இன்று ரயில் இன்ஜின்களில் "விஜிலென்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம்" என்ற ஒரு பாதுகாப்பு கருவி இருக்கிறது.
இந்த கருவி ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒரு முறையும் ஆக்டிவேட் ஆகிவிடும் அதை மேனுவலாக தான் டி ஆக்டிவேட் செய்ய வேண்டும் இதை ரயில் இன்ஜின் ஓட்டுநர் தான் டீ ஆக்டிவேட் செய்வார். இதை டிஆக்டிவேட் செய்ய பல வழிகள் இருக்கிறது. இந்த கருவி ரயிலில் பல விதமான கருவிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரயிலில் ஹாரன் அடிக்கப்பட்டாலோ அல்லது பிரேக் பிடிக்கப்பட்டாலோ அல்லது ஸ்பீடு அதிகரிக்கப்பட்டாலோ இந்த கருவி ரீ செட் ஆகி மீண்டும் 17 நொடிக்கான டைமர் ஓடும்.
அப்படி என்றால் ரயிலில் யாரோ ஒருவர் இயக்குகிறார் என இதன் மூலம் தெரியவரும். அதனால் இந்த கருவி ஆக்டிவேட் ஆகாமல் இருக்கும். ஒருவேலை ரயிலில் இப்படியாக எந்த கருவியை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றால் இந்த டைமரை மேனுவலாக ரீசெட் செய்ய ரயில் ஓட்டுநரின் கால் பகுதியில் ஒரு ரீசெட் கருவி பொருத்தப்பட்டிருக்கும் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை லோகோ பைலட்கள் இருவரில் ஒருவர் நிச்சயம் அழுத்த வேண்டும்.
அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த விஜிலென்ஸ் கண்ட்ரோல் கருவி முதலில் எச்சரிக்கை ஒலியை எழுப்பும், இந்த எச்சரிக்கை ஒரு நேரம் அதிகம் ஆக ஆகச் சத்தம் அதிகமாகிக்கொண்டே செல்லும் சரியாக ஒரு நிமிடத்திற்கு இந்த ஒலி ஒலிக்கும். ஒரு வேளை டிரைவர்கள் இருவரும் தூக்கி விட்டால் கூட இந்த ஒலியால் எழுந்துவிடுவார்கள்.
அப்படியும் எழுந்திருக்கவில்லை என்றால் இன்ஜினில் உள்ள லோகோ பைலட்களுக்கு ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து ரயில் இன்ஜின் தானாக நிற்கும் அதன் வேகத்தைக் குறைத்துத் தானாக ரயிலுக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் பிரேக் பிடித்து ரயிலை நிறுத்துவதற்கான வேலையைச் செய்யும். ரயிலின் பக்கம் இருக்கும் கார்டு தனக்கு எந்த சிக்னலும் இல்லாமல் ரயில் நிற்கப்போவதை உணர்ந்த உடனடியாக லோகோ பைலட்களை தொடர்பு கொள்ள முயிற்சிப்பார்.
அதன் பின்னர் பிரச்சனை என்னவென செக் செய்யப்பட்டு பின்னர் ரயில் புறப்படும். இதனால் ரயிலில் பயணிக்கும் போது ரயில் டிரைவர் தூக்கிவிட்டால் என்ன செய்வது என நீங்கள் இனி பயப்பட வேண்டாம். ரயில் விபத்தில் சிக்க வாய்ப்பே இல்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications