ஒரு சில கார்களில் மட்டும் உள்ள 'E' குறியீட்டிற்கு இதான் அர்த்தமா! இந்த ஸ்டிக்கர் இருந்தா ராஜமரியாதை கிடைக்கும்

ஒரு சில கார்களில் 'L' என்ற ஆங்கில எழுத்து ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இது Learner என்பதை குறிக்கிறது. அதாவது அந்த காரின் டிரைவர், தற்போதுதான் கார் ஓட்ட கற்று கொண்டுள்ளார் என்பதுதான் இதன் அர்த்தம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், அவர் இன்னும் முழுமையாக கார் ஓட்டி பழகவில்லை என்பதை இது குறிக்கிறது. எனவே 'L' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு அருகில் பயணம் செய்யும்போது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு சற்று கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். இதன் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கும்.

பழகுனர் உரிமத்துடன் (Learner's License) கார் ஓட்டும்போது, 'L' ஸ்டிக்கர் இருப்பதும் கட்டாயம் ஆகும். காரின் முன் மற்றும் பின் பகுதியில் வெள்ளை நிற பின்னணியில் சிகப்பு நிறத்தில் 'L' என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். சாலையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

E Sign

சட்டத்தின்படி அவசியம் என்னும் சூழல்களில், 'L' ஸ்டிக்கர் இல்லாவிட்டால், அரசு அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன. அதேபோல் கார்களில் 'Baby On Board' ஸ்டிக்கர்களையும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். கார்களுக்கு உள்ளே குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், இந்த ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பார்கள்.

இந்த ஸ்டிக்கர் உள்ள கார்களுக்கு அருகே பயணம் செய்யும்போது, மற்ற வாகன ஓட்டிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த வரிசையில் ஒரு சில கார்களில் 'E' என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை.

L Sign

இந்த 'E' ஸ்டிக்கரின் அர்த்தத்தை விளக்குவதற்காகவே இந்த செய்தி. இங்கே 'E' என்பது Elderly என்பதை குறிக்கிறது. அதாவது வயதில் மூத்தவர்களால் (Senior Citizens) ஓட்டப்படும் கார்களில் 'E' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதுவும் கூட சாலையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே ஒட்டப்படுகிறது.

'E' ஸ்டிக்கர் மூலமாக, வயதில் மூத்தவர்கள் கார்களை ஓட்டுகிறார்கள் என்பதை மற்ற வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடியும். அத்துடன் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது போன்றவற்றையும் தவிர்க்க முடியும். இந்த 'E' ஸ்டிக்கருக்கான மற்றொரு காரணம், சாலையில் வயதில் மூத்தவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதாகும்.

ஆனால் வயதில் மூத்தவர்களால் இயக்கப்படும் கார்களில் 'E' ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம் அல்ல. தாமாக முன்வந்து இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்ளலாம். இருப்பினும் ஒரு சில பிராந்தியங்கள், இந்த 'E' ஸ்டிக்கர்களை ஒட்டுவதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வயதில் மூத்தவர்களால் இயக்கப்படும் கார்களில் 'E' ஸ்டிக்கர் ஒட்டப்படுவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இது சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். எனவே இந்த 'E' ஸ்டிக்கர்கள் ஒட்டுவதை கட்டாயமாக்கினாலும் கூட நல்லதுதான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2025, 13:07 [IST]
English summary
What indicates e sign on the cars in india check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+