சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

டோனட் அல்லது ஸ்பேஸ் சேவர் என அழைக்கப்படும் டயர்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் காரில் ஸ்பேர் டயர் இருக்கும். இது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, பஞ்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் பயன்படுத்தப்படும் கூடுதல் டயர் ஆகும். பிரச்னை உள்ள டயரை மாற்றி விட்டு ஸ்பேர் டயரை பொருத்தி கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரச்னை உள்ள டயரை கழற்றி விட்டு ஸ்பேர் டயரை பொருத்துவதன் மூலம் அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டருக்கு நீங்கள் சென்று விடலாம். எனினும் உண்மையான டயருக்கு நிரந்தர மாற்றாக ஸ்பேர் டயரை பயன்படுத்த கூடாது. உற்பத்தியாளர் தெரிவிக்கும் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஸ்பேர் டயரை பயன்படுத்த வேண்டும்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த எச்சரிக்கையை மீறி ஸ்பேர் டயரை தொடர்ந்து பயன்படுத்தினால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், முழு அளவிலான ஸ்பேர் டயருக்கு பதில் சிறிய டயரை பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவை ஸ்பேஸ் சேவர் டயர்கள் (Space-Saver Tyres) அல்லது டோனட் டயர்கள் (Donut tyres) என அழைக்கப்படுகின்றன.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

வழக்கமான ஸ்பேர் டயர்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்பேஸ் சேவர் டயர்கள் சிறியதாக இருக்கும். இதன் காரணமாக அவற்றின் எடை மிகவும் குறைவாக இருக்கும் என்பதுடன், நல்ல இட வசதியையும் வழங்கும். ஆனால் ஸ்பேஸ் சேவர் டயர் பொருத்தியிருக்கும்போது தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடாது. அவை குறுகிய பயணத்திற்கு மட்டுமே ஏற்றவை.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் அதிவேகத்திலும் செல்லக்கூடாது. ஸ்பேஸ் சேவர் டயர்களில் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அத்துடன் 250 கிலோ மீட்டர் வரை இயக்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஸ்பேஸ் சேவர் டயர்களின் நிறை, குறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

நிறைகள்:

வழக்கமான ஸ்பேர் டயர் உங்கள் காரின் பூட் பகுதியில் நிறைய இடத்தை அடைத்து கொள்ளும். ஆனால் ஸ்பேஸ் சேவர் டயர்கள் சிறியதாக இருக்கும் என்பதால் இடத்தை அடைத்து கொள்ளாது. பொருட்களை வைப்பதற்கு உங்களுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். இதன் காரணமாகதான் அவற்றை ஸ்பேஸ் சேவர் டயர்கள் என்கின்றனர்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஸ்பேஸ் சேவர் டயர்களின் எடை குறைவாக இருக்கும் என்பதால், காரின் ஒட்டுமொத்த எடையும் குறையும். இதன் காரணமாக எக்ஸாஸ்ட் எமிஷன் குறையும். அத்துடன் காரின் மைலேஜ் அதிகரிக்கும். ஸ்பேஸ் சேவர் டயர்களின் முக்கியமான பயன்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கார் அதிக எடையுடன் இருந்தால் மைலேஜ் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரச்னை ஏற்பட்ட டயருக்கு பதில் வழக்கமான ஸ்பேர் டயரை பொருத்தினால், அந்த டயருடனே தொடர்ந்து நாம் காரை ஓட்டி கொண்டிருப்போம். இது மனித இயல்பு. மேலும் பிரச்னை ஏற்பட்ட டயரை பூட் பகுதியில் வைத்து விட்டு, அதை அப்படியே மறந்து விடுவோம். அந்த நேரத்தில் உங்கள் காரின் மற்றொரு டயரில் பிரச்னை ஏற்பட்டால், நீங்கள் நடுவழியில் தவிக்க நேரிடும்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் ஸ்பேஸ் சேவர் டயர்கள் மூலம் இதுபோன்ற தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது. அவற்றை நீண்ட தொலைவு ஓட்ட முடியாது என்பதுதான் இதற்கு காரணம். பழுதான டயரை நீங்கள் உடனடியாக சரி செய்து விடுவீர்கள். எனவே மற்றொரு டயரில் பிரச்னை ஏற்பட்டாலும் கூட, உங்களுக்கு மாற்று ஆப்ஷன் இருக்கும்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஸ்பேஸ் சேவர் டயர்கள் பொதுவாக ஆரஞ்ச், மஞ்சள் மற்றும் சிகப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இருக்கும். இதன் மூலம் இது ஸ்பேர் டயர் எனவும், கூடுமான வரை விரைவாக ரெகுலர் டயரை பொருத்த வேண்டும் எனவும் உங்களுடைய மனதில் தோற்றி கொண்டே இருக்கும். நீங்கள் அலட்சியமாக இருக்க மாட்டீர்கள்.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

குறைகள்

வழக்கமான ஸ்பேர் டயர்கள் அளவிற்கு ஸ்பேஸ் சேவர் டயர்கள் உழைக்காது. ஸ்பேஸ் சேவர் டயர்கள் மூலம் இயங்கும்போது, காரின் கையாளுமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. அத்துடன் காருடைய ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸை (Stopping Distance) ஸ்பேஸ் சேவர் டயர்கள் அதிகரித்து விடும். 50 சதவீதம் என்னும் அளவிற்கு ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் அதிகரிப்பதாக சோதனைகளில் தெரியவந்துள்ளது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே நீங்கள் பிரேக் பிடித்தால் கார் உடனடியாக நிற்காது. நிற்பதற்கு சற்று நேரம் ஆகும். ஸ்பேஸ் சேவர் டயரில் இருக்கும் முக்கியமான பிரச்னையாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்பேஸ் சேவர் டயர்கள் காரின் கார்னரிங் க்ரிப்பை (Cornering Grip) 13 சதவீதம் குறைத்து விடுகின்றன. எனவே காரை கவனமாக இயக்குவது அவசியமாகிறது.

சூப்பரா மைலேஜ் கொடுக்கும்... டோனட் டயர்கள் அப்படினா என்னனு தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் ஸ்பேஸ் சேவர் டயர்களை தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் காரில் இயந்திர ரீதியில் நிறைய பிரச்னைகள் ஏற்படும். ஸ்பேஸ் சேவர் டயர்களை பயன்படுத்தும்போது, இந்த அபாயங்களை நீங்கள் மனதில் வைத்து கொள்வது அவசியம். உங்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதை இது தடுக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Is A Space-Saver Tyre? Advantages And Disadvantages. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X