கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

வாகனங்களில் வழங்கப்பட்டிருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு தொடர்பான ஆச்சரியமளிக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆதார் எண் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் ஆதார் எண் உடன் ஒப்பிடும்போது, மற்றொருவரின் ஆதார் எண் வித்தியாசமானதாக இருக்கும். வாகனங்களுக்கும் கூட அப்படிதான். வாகனங்களுக்கும் ஆதார் எண் வழங்கப்படுகிறதா? என தவறாக நினைத்து விடாதீர்கள். நாங்கள் VIN எண்ணை பற்றிதான் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

VIN என்பது Vehicle Identification Number என்பதன் சுருக்கம் ஆகும். ஸ்கூட்டர், பைக், கார், லாரி என உலகில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் VIN எண் இருக்கும். ஒரு வாகனத்தின் VIN எண் உடன் ஒப்பிடும்போது, மற்றொரு வாகனத்தின் VIN எண் வேறு மாதிரியாக இருக்கும். இது 17 இலக்கங்களை கொண்ட எண் ஆகும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

இந்த 17 இலக்க எண் உங்கள் வாகனத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வழங்கப்பட்டிருக்கலாம். வாகனத்தை பொறுத்து VIN எண் வழங்கப்படும் இடம் மாறுபடும். இந்த எண் சட்ட ரீதியில் உங்கள் வாகனத்திற்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. 1981ம் ஆண்டுக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் மட்டுமே 17 இலக்க VIN எண் வழங்கப்பட்டிருக்கும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

1981ம் ஆண்டுக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் 11 முதல் 17 இலக்கம் வரை என வெவ்வேறு இலக்கங்களில் VIN எண் வழங்கப்பட்டிருக்கும். தற்போது நடைமுறையில் உள்ள 17 இலக்க VIN எண் மூலமாக வாகனம் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது, எந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது, வாகனத்தின் வகை, இன்ஜின் வகை உள்பட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒவ்வொரு வாகனத்தை பொறுத்தும் VIN எண் வழங்கப்பட்டிருக்கும் இடம் மாறுபடும். கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை பொறுத்தவரையில், முன்பக்க கண்ணாடி, டிரைவரின் பக்கத்தில் உள்ள டேஷ்போர்டு, டிரைவரின் பக்கத்தில் உள்ள டோர் பில்லர்கள் மற்றும் இன்ஜின் பே-வின் (Engine Bay) பக்கவாட்டு பகுதி ஆகிய இடங்களில் VIN எண் வழங்கப்பட்டிருக்கலாம்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

அதே சமயம் பைக்குகளை பொறுத்தவரை, ஹேண்டில்பாரின் கழுத்து பகுதி அல்லது மோட்டாருக்கு அருகில் VIN எண் இடம்பெற்றிருக்கலாம். ஸ்கூட்டர்களை பொறுத்தமட்டில், சென்டர் ஸ்டாண்டுக்கு அருகில் அல்லது டேஷ்போர்டுக்கு கீழாக VIN எண் வழங்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு வாகனத்தை பொறுத்தும் VIN எண்ணின் அமைவிடம் மாறுபடும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

மேலும் உங்கள் வாகனத்தின் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு ஆவணங்களிலும் VIN எண்ணை காணலாம். VIN எண்ணில் இடம்பெற்றுள்ள நம்பர்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நமக்கு பல்வேறு தகவல்களை வழங்குகின்றன. VIN எண்ணில் இருக்கும் முதல் கேரக்டர், வாகனம் எந்த நாட்டில் உற்பத்தியானது? என்பதை நமக்கு கூறுகிறது.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

இந்த முதல் கேரக்டர், பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பது வரையிலான எண்ணாக இருக்கலாம். அல்லது ஆங்கில எழுத்துக்களாக இருக்கலாம். அல்லது இரண்டுமே கலந்ததாக கூட இருக்கலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் என்றால், MA, ME, MZ என VIN எண் தொடங்கலாம். பிரேசில் போன்ற சில நாடுகளில், 9A, 9E என VIN எண் தொடங்கும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

அதே நேரத்தில் VIN எண்ணின் முதல் மூன்று கேரக்டர்கள், டபிள்யூஎம்ஐ (WMI - World Manufacturer Identifier) என்று அறியப்படுகின்றன. வாகனத்தின் உற்பத்தியாளரை கண்டறிய இது உதவுகிறது. எனினும் சில சமயங்களில் 3வது கேரக்டர் வாகன உற்பத்தியாளரை மட்டும் குறிக்கும். இன்னும் சில சமயங்களில் 3வது கேரக்டர் வாகனத்தின் வகையை (கார், பஸ், லாரி) குறிக்கும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

அதே நேரத்தில் முதல் மூன்று கேரக்டர்கள் வாகன உற்பத்தியாளரின் டிவிசனையும் குறிக்கும் என்பதும் கூட குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதே சமயத்தில் நான்காவதில் இருந்து ஒன்பதாவது கேரக்டர் வரையிலான பகுதி, விடிஎஸ் (VDS - Vehicle Description Section) என குறிப்பிடப்படுகிறது. இந்த செக்ஸனில் இருக்கும் கேரக்டர்கள் பல்வேறு தகவல்களை வழங்குகின்றன.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

இதில், எந்த பிளாட்பார்ம் அடிப்படையில் வாகனம் தயாரிக்கப்பட்டது, மாடல், பாடி வகை, இன்ஜின் வகை ஆகியவை முக்கியமானவை. ஆனால் இந்த பகுதியில் ஒவ்வொரு வாகன நிறுவனமும் ஒவ்வொரு இடத்தில் தகவல்களை வழங்கும். அதாவது உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் ஆறாவது கேரக்டரில் பிளாட்பார்ம்மை குறிக்கிறது என்றால், மற்றொரு நிறுவனம் ஏழாவது இடத்தில் பிளாட்பார்ம்மை குறிக்கும்.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

ஆனால் பெரும்பாலும் எட்டாவது கேரக்டர் இன்ஜின் வகையை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் ஒன்பதாவது கேரக்டர் பாதுகாப்பு குறியீடாகவோ அல்லது வாகனம் உற்பத்தி செய்யப்பட்ட மாதமாகவோ இருக்கலாம். அதே நேரத்தில் பத்தாவது கேரக்டர், வாகனம் எந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை குறிக்கிறது.

கார் கண்ணாடியில் இருக்கும் 17 இலக்க ரகசிய குறியீடு... இந்த எண்களும், எழுத்துக்களும் எதை குறிக்கின்றன தெரியுமா?

அதே சமயம் 11வது கேரக்டர், வாகனம் எந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது? என்ற தகவலை வழங்கும். அதே நேரத்தில் 12-17வது கேரக்டர் (கடைசி 6 பொஷிஷன்கள்) வாகனத்தின் சீரியல் நம்பரை குறிக்கிறது. வாகனத்தின் VIN எண் என்றால் என்ன? என்பதும், அதில் உள்ள எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் ஆகியவை எதை குறிக்கிறது? என்பதும் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Is A Vehicle Identification Number: We Explain. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X