விமானம் பறக்கும் போது கண்ணை மூடி கடவுள் பெயரை உச்சரிப்பார்கள்... இதுக்கு பின்னாடி இப்படி காரணம் இருக்கா?
விமானங்களில் பறக்கும்போது சிலருக்கு தேவையில்லாமல் பயம் ஏற்படும். இந்த பயத்தின் வெளிப்பாடாக அவர்கள் பல விஷயங்களை செய்வார்கள். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு நாளாவது விமானத்தில் பறக்க வேண்டும் என் ஆசைப்பட்டிருப்போம். பலர் பறந்திருப்பார்கள். பலர் இன்னும் அது நிறைவேறாத ஆசையாகவே இருக்கும். சிலர் விமானத்தில் அடிக்கடி பறந்து கொண்டிருப்பார்கள் விமானத்தில் பறப்பது யாருக்கு தான் பிடிக்காது?

இப்படி நீங்கள் நினைக்கவேண்டாம். இன்றும் சிலருக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் பிடிக்காது. அதற்கு காரணம் பயம். சிலர் விமானத்தில் செல்வதற்கு அதிகம் பயப்படுகின்றனர். இது ஒரு விதமான மன நோய் என கூறப்படுகிறது. இதற்கு Aerophobia என அழைக்கிறார்கள்.

ஒருவர் விமானத்தில் ஏறியது முதல் இறக்கும் வரை அவருக்கு பல்வேறு காரணங்களுக்கான பயம் ஏற்படும். சிலருக்கு விமானம் டேக் ஆஃப் ஆகும் போது வேகமாக செல்லும் போது பயணம் வரும். சிலருக்கு விமானம் பறக்க துவங்கியதும் பயம் வரும்.

சிலருக்கு விமானி விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என அறிவிக்கும் போது கூட பயம் வரும். இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சிலருக்கு பயம் ஏற்படும். இதை தான் ஏரோஃபோபியா என அழைக்கிறார்கள்.

இந்த ஏரோஃபோபியாவால் சிலருக்கு விமான பயணத்தின் போது நெஞ்சு வலி, ஹார்ட் அட்டாக் போன்ற விஷயங்கள் கூட நடந்துள்ளது. சிலர் இந்த இந்த மன நோயால் வித்தியாசமாக கத்தி கூச்சிலிட்டு விமானத்திலிருந்து வெளியேற எல்லாம் முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஏரோஃபோபியா வந்துவிட்டால் அவர் விமானத்தில் இருக்கும் போது தான் ஏதோ இடத்திற்குள் மாட்டிக்கொண்டது போலவும், அங்கிருந்து உடனடியாக தப்பிக்க வேண்டும் என்பது போலவும், தனக்கு மூச்சு திணறல் ஏற்படுவது போலவும் உணருவார்கள்.

இந்த பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் மனதளவில் மட்டும் இந்த பயம் இருக்கும். இதை அவர்கள் கண்களில் மட்டும் காண முடியும். அடுத்து கட்டத்திற்கு சென்று விட்டால் விமானம் பறக்கும் போது ஏதாவது ஒரு விஷயத்த இருக்கமாக பிடித்துக்கொண்டு இருப்பார்கள். சிலர் கண்களை இறுக்கமா மூடி கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். சிலர் உடன் இருப்பவர்களை பிடித்துக்கொள்வாரகள். இப்படியாக இந்த பிரச்சனை இருப்பவர்கள் பல விதங்களில் இதை வெளிக்காட்டுவார்கள்.

இந்த பிரச்சனைக்கு பலருக்கு பல கட்டங்களில் இருக்கும் ஆரம்ப கட்டங்களில் இருக்கும் இந்த பிரச்சனையை மன நல மருத்துவர்களால் எளிதில் சரி செய்ய முடியும் என சொல்கிறார்கள். இந்த பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது. அதிகமாகவிட்டால் அது நம் பழக்கமாகிவிடும் பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது மிக கடினம் என சொல்கிறார்கள்.

பொதுவாக விமானங்கள் விபத்தில் சிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு, அதனால் விமானம் குறித்த பயம் தேவையில்லாதது தான். ஆனால் இது குறித்த பயம் வந்துவிட்டால் அது அவர்களுக்கு பெரிய தலைவலியாக முடியும். இது நாளடைவில் ஒருவரின் பெர்சனாலிட்டியாகவே மாறிவிடும்.

சிலர் இந்த பிரச்சனை காரணமாகவே விமான பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாவோ அல்லது ரயில் மார்க்கமாவோ தனது பயணத்தை செய்கின்றனர். இப்படியான பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்களும் ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகுவது சிறந்ததது.


Click it and Unblock the Notifications