விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

விமானிகளாக ஆகுவதை போன்று, விமான பணிப்பெண்களாக பணிபுரிவதற்கும் வயது, உயரம் மற்றும் எடை என ஏகப்பட்ட நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. உயரம் & எடையில் பெரும்பான்மையான பணிப்பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருப்பர். ஆனால் பணிப்பெண்களாக பணிபுரிவதற்கு எவ்வளவு வரையில் வயது எல்லை உள்ளது என்கிற குழப்பம் நம் அனைவரிடத்திலும் இருக்கலாம்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

அதனை தீர்க்கும் விதமாகவே சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த செய்தியில் ஆராய போகின்றோம். பணிப்பெண்களுக்கான வயது எல்லை ஆனது ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஏர்லைன் நிறுவனத்திற்கும் இடையே வேறுப்படுகிறது. ஆதலால் பணிப்பெண்ணாக விமானத்தில் பணிப்புரிய விரும்புவோர், எந்த ஏர்லைன் நிறுவனத்தில் சேர உள்ளீர்களோ அங்கு பணிப்பெண்களுக்கான வயது வரம்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

அதேபோல் சிலர் நாம் அதற்கான வயதை கடந்துவிட்டோம் என நினைத்து கொண்டிருப்பர். அத்தகையவர்கள் பல்வேறு ஏர்லைன் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தனக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். ஆனால் ஒன்று, விமானத்தில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் இருப்பது அவசியமாகும்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

குறைந்தப்பட்ச வயது

உலகம் முழுவதிலும் பார்த்தாலும், பல்வேறு ஏர்லைன் நிறுவனங்களில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பாக 18 உள்ளது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் சில அமெரிக்க ஏர்லைன் நிறுவனங்கள் என மிகவும் சில ஏர்லைன் நிறுவனங்களில் மட்டும் குறைந்தப்பட்ச வயது வரம்பாக 21 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

பணிப்பெண்களாக பணியாற்றினால் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு ஆல்கஹாலை வழங்க வேண்டியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. சில நாடுகளும், அந்த நாட்டில் உள்ள ஏர்லைன் நிறுவனங்களும் 21 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை மது வழங்க அனுமதிப்பதில்லை. நமது இந்தியா உள்பட பெரும்பான்மையான ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 ஆகும்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

அதிகப்பட்ச வயது

பணிப்பெண்களாக பணிப்புரிய விண்ணப்பிப்பதற்கு குறைந்தப்பட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்பது உங்களில் பெரும்பான்மையோர்க்கு தெரிந்ததாகவே இருக்கும். ஆனால் அதிகப்பட்ச வயது எவ்வளவு என்பதில் தான் உங்களுக்கு கேள்வி எழும்பலாம். ஏனெனில் நாம் பணிப்பெண்களை இளமையாகவே நேரிலும் பார்த்துள்ளோம், திரைப்படங்களிலும் பார்த்துள்ளோம்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

ஆனால் உண்மை என்னவென்றால், சற்று வயதான பின்பும் பணிப்பெண்களாக மாற முடியும். எந்த அளவிற்கு என்றால், எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் 40 - 50 வயதுகளில் கூட சில பெண்கள் விமான பணிப்பெண்களாக மாற முடிவெடுத்து விண்ணப்பித்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

ஆனால் இந்த விஷயத்தில் குழப்பம் என்னவென்றால், விமான பணிப்பெண்ணாக பணிப்புரிவதற்கான குறைந்தப்பட்ச வயது & தேவைகள் என்ன என்பதை ஏர்லைன் நிறுவனங்கள் எப்போதும் கூறும் அதேவேளையில், விமான கேபின் குழுவில் இணைவதற்கான அதிகப்பட்ச வயது என்ன என்பதை அவர்கள் வெளியிடுவதில்லை. இதனாலேயே பெரும்பாலும் வயது நிரம்பியவர்கள் விமான பணிப்பெண்ணாக பணிப்புரிவதற்கு விண்ணப்பிப்பதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

சற்று வயதானவர்கள் விமான பணிப்பெண்ணாக சேர்ந்தாலும், பணி சூழலின்போது மற்ற இளம் பணிப்பெண்களிடம் இருந்து வயது பாகுபாடு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. அதேநேரம், இவ்வாறு பாகுபாடு எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் விதமாக ஏர்லைன் நிறுவனங்கள் சில பல நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றன என்பதும் உண்மையே.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

ஆகையால் நீங்கள் 30- 40 வயது கடந்தவர்களாக இருப்பினும் இப்போதும் உங்களால் விமான பணிப்பெண் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இன்னும் சொல்ல போனால், யுகே, கனடா & ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில் விமான பணிப்பெண் பணிக்கு வயது வரம்பே கிடையாது. இந்த நாடுகளில் இந்த பணிக்கான மற்ற தேவைகளை பூர்த்தி செய்தால், எப்போது வேண்டுமானாலும் விமான பணிப்பெண்ணாக ஆகலாம்.

விமான பணிப்பெண்ணாக இந்த வயதிலும் ஆகலாமா!! அதிகப்பட்ச வயது வரம்பு எவ்வளவு? ஆனால் நம் இந்தியாவில்...

ஆனால் நம் இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஏர்லைன் நிறுவனங்கள் 20-30 வயதிலேயே விமான பணிப்பெண்களை பணியமர்த்துகின்றன. இத்தனைக்கும், அத்தகைய ஏர்லைன் நிறுவனங்களின் வெப்சைட்டில் சென்று பார்த்தாலும் சரி அல்லது நேரடியாக அவர்களது அலுவலகத்திற்கு சென்று விசாரித்தாலும் சரி 20-30 வயதுடையவர்களை மட்டுமே விமான பணிப்பெண்ணாக தேர்வு செய்வோம் என எந்த இடத்திலும் குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது தேர்வு இளம்பெண்களை நோக்கியே இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is age limit for flight air hostess
Story first published: Wednesday, September 28, 2022, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X